Blogger Widgets

Total Page visits

Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts
Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts

Tuesday, July 21, 2015

பாஸ்பிரேஸ்: இனி உங்க பாஸ்வேர்டை திருட முடியாதுங்கோ...!

ணையத்தில் தாக்காளர்கள் கைவரிசை காட்டிஆயிரக்கணக்கில் பாஸ்வேர்டுகளை களவாடுவது பற்றி எல்லாம் படிக்கும்போது,  'நம்முடைய பாஸ்வேர்டு பலமானதுதானா?' என்ற சந்தேகமும் அச்சமும் உங்களுக்கு ஏற்படலாம்

இத்தகைய அச்சம் உண்டாவது நல்லதுதான். அச்சம் மட்டும் போதாது, உங்களுடைய பாஸ்வேர்டு பலமானதுதானா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும். 'பொதுவாக எளிதில் ஊகித்துவிடக்கூடிய பாஸ்வேர்ட்கள் அதே அளவு எளிதாக தாக்காளர்களின் கைகளில் சிக்க கூடியது' என்கின்றனர். எனவே பாஸ்வேர்டு உருவாக்கத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் முறைகளை கைவிட்டு, எவராலும் எளிதில் ஊகிக்க முடியாத சிக்கலான பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர்.

ஆனால் சிக்கலான பாஸ்வேர்டு எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும். தாக்காளர்கள் உள்ளிட்ட இணைய விஷமிகளால் கண்டுபிடிக்க முடியாதபடி பாஸ்வேர்டை அமைத்துவிட்டு பின்னர் உருவாக்கியவரே அதை மறந்து தவிப்பதால் என்ன பயன்? இந்த சிக்கலுக்கு எளிதான தீர்வை சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் முன்வைக்கின்றனர். அது என்ன வழி என்று பார்ப்போம்...

பாஸ்வேர்டு என்றவுடன், உங்கள் பிறந்த தினத்தையோ அல்லது நெருக்கமானவர்களின் பெயரையோ நினைத்துப்பார்க்கத்தோன்றும். அவற்றை வைத்துக்கொண்டு தான் பாஸ்வேர்டை உருவாக்குவீர்கள். இவை எல்லாம் ஆபத்தானவை என்கின்றனர். ஏனெனில் தாக்காளர்கள் இதுபோன்ற விவரங்களை கொண்டு நீங்கள் யோசித்தது போலவே யோசித்து பாஸ்வேர்டை கண்டுபிடித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே வழக்கமான உத்திகளை எல்லாம் விட்டு விட்டு, பாஸ்பிரேசில் இருந்து துவங்க வேண்டும் என்கின்றனர். அதென்ன பாஸ்பிரேஸ்? ஏதேனும் ஒரு நீளமான வாசகத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள், அது தான் பாஸ்பிரேஸ். அந்த வாசகம் உங்களுக்கு பிடித்தமான பாடல் வரியாக இருக்கலாம், நாளிதழ் அல்லது நாவலில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம். குறைந்தது 10 வார்த்தைகளாக இருந்தால் போதுமானது. உதாரணத்திற்கு , இந்த வாசகத்தை எடுத்துக்கொள்வோம்: "My Daughter started at Kennedy College in 2006."

இது போன்ற பாஸ்பிரேசை தேர்வு செய்த பின், அவற்றில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை எல்லாம் வரிசையாக எழுதுங்கள். எல்லாம் பெரிய எழுத்துக்களில் இருக்க வேண்டும். அந்த எழுத்துக்கள் இப்படி வரும்: MDSAKCI2006. அட இதுவும் பாஸ்வேர்ட் போல இருக்கிறதே என தோன்றுகிறதா?



pass
இருங்கள், இந்த பாஸ்வேர்டை இன்னும் பலமாக்க வேண்டும். இந்த எழுத்து வரிசையில் எங்கெல்லாம் முடியுமா அந்த எழுத்துக்களுக்கு பதில் குறியீடுகளை போடவும். உதாரணத்திற்கு S மற்றும் A எழுத்துக்களுக்கு பதிலாக டாலர் குறியீடு ( $) மற்றும் இமெயில் குறியீடு (@) பயன்படுத்தவும். இப்போது உங்கள் பாஸ்வேர்டு இப்படி மாறியிருக்கும்: MD$@KCI2006.

இதன் பிறகு எந்த எழுத்துக்களை சிறிய எழுத்தாக மாற்றலாம் என பார்த்து மாற்றிக்கொள்ளவும். அதாவது இப்படி:  Md$@KCi2006. இப்போது பாதுகாப்பாக இருக்க கூடிய சூப்பர் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் தயார். அது மட்டும் அல்ல, இந்த பாஸ்வேர்டு, பெரும்பாலான சேவைகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு பொருந்தியும் இருக்கும்.

இப்படி நீங்களும் மிக எளிதாக வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம். இது பார்க்க சிக்கலாக தோன்றினாலும் அதை உருவாக்க பயன்படுத்த மூல வாசகத்தை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும் பாஸ்வேர்டை உருவாக்கிய வழிமுறைகளை கொண்டு, அதை எளிதாக நினைவில் கொள்ளலாம்.


ஆனால் ஒன்று, என்னதான் வலுவான பாஸ்வேர்டாக இருந்தாலும் அதையே ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய சேவைகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே ஒவ்வொரு சேவைக்கும் ஒரு தனி பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவும் கூட எளிதானதே.


நீங்கள் உருவாக்கிய மூல பாஸ்வேர்டை அடிப்படையாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த சேவைக்கு புதிய பாஸ்வேர்டு தேவையோ, அந்த சேவையின் பெயரில் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை தனியே எழுதி அவற்றை பாஸ்வேர்டின் முதலிலும் கடைசியிலும் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் ஒரு புதிய பாஸ்வேர்டு தயார். இதே முறையில் எல்லா சேவைகளுக்கான தனித்தனி பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம். எல்லாமே நினைவில் நிற்க கூடியதாகவே இருக்கும்.


பாஸ்பிரேஸ் கொண்டு பாஸ்வேர்டு அமைப்பதில் என்ன அணுகூலம் என்றால், ஒருவரது பாஸ்வேர்டை கண்டுபிடிக்க வேண்டும் என தாக்காளர்கள் முயலும் பட்சத்தில் அவர்கள் பிறந்த தேதி, செல்லப்பெயர் போன்ற அந்தரங்க விவரங்களை சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் எழுத்துக்களையும் எண்களையும் மாற்றி மாற்றி போட்டுப்பார்த்து சரியான பாஸ்வேர்டை ஊகித்து விடுவது சாத்தியம்தான். ஆனால் எந்த கில்லாடி தாக்காளராலும், ஒருவர் மனம் போன போக்கில் தேர்வு செய்த பாஸ்பிரேஸ் வாசகத்தை ஊகிக்கவே முடியாது. எனவே இந்த வகையிலான பாஸ்வேர்டுகள் மிகவும் பாதுகாப்பானவை.


இன்னொரு விஷயம் எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்டை துண்டு சீட்டிலோ அல்லது கம்ப்யூட்டரில் வேர்ட் பைலிலோ ,எக்செல் பைலிலோ குறித்து வைக்க வேண்டாம். பாதுகாப்பிற்காக தேவை என கருதினால், ஜிடிரைவ் அல்லது டிராப்பாக்ஸ் போன்ற கிளவுட் சேவைக்குள் அந்த கோப்பை பாதுகாத்து வைக்கவும். 


- சைபர்சிம்மன்

விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Monday, July 13, 2015

நோக்கியாவை டைவர்ஸ் செய்தது மைக்ரோசாஃப்ட் - ஒரு விரிவான அலசல்!

நோக்கியாவை லாபம் தராத முதலீடாக ஒதுக்கிவிட்டது மைக்ரோசாஃப்ட். கடந்த வருடம்தான் நோக்கியாவை 7.6 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. முன்னாள் மைக்ரோசாஃப்ட் தலைவர் ஸ்டீல் பால்மர் -ன் இந்தக் காரியம் அப்போதே தீவிரமாக விமர்சிக்கப்பட்டது. இந்நாள் தலைவர் சத்யா நாதெள்ள, அந்தத் தவறை இப்போது சரிசெய்ய விரும்புகிறார் போல.
/microsoft-writes-off-nokia
 
'நிர்வாகத்தில் கடுமையான முடிவுகளை எடுக்கப்போகிறோம். தயாராக இருங்கள்’ என்று கடந்த ஜூன் மாதமே சத்யா அனைவருக்கும் மெமோ அனுப்பியிருந்தார். இப்போது விண்டோஸ் ஃபோன் ஹார்டுவேர் துறையில் பணிபுரியும் 7,800 பேரை வேலையில் இருந்து நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளார் சத்யா நாதெள்ள. மேலும், 7.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள நோக்கியா முதலீடை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒதுக்கிவிட்டார் சத்யா.

என்ன பிரச்னை?

விண்டோஸ் ஃபோன் வர்த்தகம் இருக்கட்டும். மைக்ரோசாஃப்ட்-ன் எதிர்காலமே யாராலும் கணிக்க முடியாதது போல் இருக்கிறது. கூகுள், ஆப்பிள்  போன்று  தன்னுடைய எதிர்காலம் குறித்த தெளிவு இல்லாமல் மைக்ரோசாஃப்ட் தடுமாறுவதாக எக்ஸ்பர்ட்டுகள் கருதுகிறார்கள்.

ஆனால் பிரச்னையே மைக்ரோசாஃப்ட்டை ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடுவதுதான். ஏனென்றால், அடிப்படையில் மைக்ரோசாஃப்ட் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம். ஆப்பிள் ஒரு ஹார்டுவேர் நிறுவனம். தன்னுடைய விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை உலகம் முழுக்க கொண்டுசேர்த்ததுதான் மைக்ரோசாஃப்ட்-ன் சாதனை. தன்னுடைய கேட்ஜெட்டுகளை உலகம் முழுக்க ‘கெத்து’ கேட்ஜெட்டுகளாக மார்கெட் செய்தது ஆப்பிள்-ன் சாதனை.

                                                   
 
இங்குதான் ஒரு ட்விஸ்ட். மைக்ரோசாஃப்ட் நிறுவனமும்தான் ஸ்மார்ட்ஃபோன்களைத் தயாரித்தது. ஆனால், ஏன் பிரபலமாகவில்லை? இங்குதான் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும் ஒரே புள்ளியில் இணைகின்றன.  

ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஃபோன்கள் பெறும் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் அதன் டிஸைனோ, ஆபரேட்டிங் சிஸ்டமோ, வசதிகளோ இல்லை. பிஸினஸ் எக்கோசிஸ்டம்தான் இவற்றின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

ஆப்பிள் நிறுவனம் ஹார்டுவேர், சாஃப்ட்வேரை மட்டும் உருவாக்கிவிட்டு, அப்ளிகேஷன் டெவலப்பர்களுக்கு கதவைத் திறந்துவிட்டது. அதனால், அதன் வர்த்தகம் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொடுத்துவிட்டு, அப்ளிகேஷன் டெவலப்பர்களை வாரியணைத்துக்கொண்டது. சாம்சங், எல்ஜி, லெனோவோ போன்ற ஹார்டுவேர் நிறுவனங்களுக்கு இதுபெரும் வசதியாகப்போய் விட்டது. முன்புபோல் ஒவ்வொரு ஃபோனுக்கும் தனித்தனியாக ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கத் தேவையில்லை. ஹார்டுவேரை மட்டும் உருவாக்கிவிட்டு, நிம்மதியாக இருந்தன. இந்த பிஸினஸ் எக்கோசிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.  


பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் ஃபோன் முயற்சி மூலம்  ஒரு அப்ளிகேஷன் டெவலப்பர், ஹார்டுவேர் உருவாக்கம், ஆபரேட்டிங் சிஸ்டம் டெவலப்மென்ட் என அனைத்து துறைகளையும் தானே செய்துகொள்ளமுடியும் என்று நினைத்ததுதான் மைக்ரோசாஃப்ட்-ன் தவறு. அவசரப்பட்டுவிட்டோம் என்று சுதாரிப்பதற்குள் நோக்கியாவையும் வாங்கி தன்கையை தானே கட்டிப் போட்டுக்கொண்டது மைக்ரோசாஃப்ட்.

என்னதான் நோக்கியாவை வைத்துக்கொண்டு மைக்ரோசாஃப்ட் ஃபோன்களை விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் லூமியா ஃபோன்களைக் கொண்டுவந்தாலும் சந்தையில் எடுபடவில்லை. காரணம், அப்ளிகேஷன் டெவலப்பர்களை முழுமையாக உள்ளே விடாமல் இருந்ததால்தான். இன்னொரு பக்கம் ஆப்பிள் உயர்ரக செக்மென்ட்டை குறிவைத்து ஒவ்வொரு முறையும் வெற்றிபெற, ஆண்ட்ராய்டு ‘மாஸ் ஆடியன்ஸ்’ ஃபார்முலாவில் எல்லோர் கையிலும் ஸ்மார்ட்ஃபோனைத் திணிக்க, தன்னுடைய டார்கெட் வாடிக்கையாளர்கள் யார் என்பதிலேயே இன்னும் குழப்பமாக இருந்தது மைக்ரோசாஃப்ட்.  உயர்ரக லூமியா ஃபோன்கள் விற்பனைக்கு வரும். ஒரே மாதத்துக்குள் பட்ஜெட் லூமியா ஃபோன்களும் வரும். ஆப்பிள் இந்தத் தவறை செய்ததே இல்லை. ஒரு ஃபோன் என்றாலும் கெத்தாக சந்தைப்படுத்தும் வல்லமை படைத்தது ஆப்பிள்.

லூமியா ஃபோன்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த மார்கெட் ஷேர் மிகவும் குறைவு. காரணம், iOS மற்றும் ஆண்ட்ராய்டு-ன் மார்கெட் ஷேர் மிக மிக வேகமாக எகிறிக்கொண்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட்-ன் ஃபோன் பிஸினஸ் கடந்த மூன்றாவது காலாண்டில் 1.4 பில்லியன் டாலர் வருவாயைக் குவித்திருக்கிறது. அதிகமாகத் தெரிகிறதா? இதே சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பிஸினஸ் வருவாய்  மட்டும் 40.3 பில்லியன் டாலர்கள்!

அப்ப விண்டோஸ் ஃபோன் அவுட்டா?

ஃபோன் மார்கெட்டை புரிந்துகொண்டிருப்பதிலேயே தவறு இருக்கிறது என்பதை சமீபத்திய அறிக்கையில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சத்யா நாதெள்ள.


சத்யா நாதெள்ள அனுப்பிய மெமோவில் இருந்து சில வரிகள்:

“I am committed to our first-party devices including phones. However, we need to focus our phone efforts in the near term while driving reinvention. We are moving from a strategy to grow a standalone phone business to a strategy to grow and create a vibrant Windows ecosystem that includes our first-party device family.”


ஸ்மார்ட்ஃபோன் வர்த்தகத்தில் எக்கோசிஸ்டம்தான் முதல் தேவை என்பதில் இப்போது தெளிவாக இருக்கிறது மைக்ரோசாஃப்ட். எப்படி?

சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் வரிசையாக அப்ளிகேஷன் நிறுவனங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தது. Wunderlist,Acompl, Sunrise போன்ற iOS, ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் இப்போது மைக்ரோசாஃப்ட்-இடம். ஃபோன் பிஸினஸுக்காக தன்னை மேலும் பலப்படுத்தி வருவதற்கான சிக்னல் இது.


 

இத்தனைக்கும் மைக்ரோசாஃப்ட்-ன் சமீபத்திய அப்ளிகேஷனான Tossup விண்டோஸ் ஃபோனுக்குக் கிடையாது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்களில் மட்டுமே இருக்கிறது அந்த அப்ளிகேஷன். மைக்ரோசாஃப்ட்-ன் சொந்த ஒன்நோட், ஒன்டிரைவ் போன்ற அப்ளிகேஷன்களை இப்போது ஆண்ட்ராய்ட்-ல் இயங்கு சாம்சங் கேலக்ஸி S6 ஃபோனில் ப்ரி-இன்ஸ்டால் செய்து வாங்கமுடியும். அதற்காக சாம்சங்குடன் ஒப்பந்தமும் போட்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இப்போது அப்ளிகேஷன் டெவலப்பர்களையும் ஆண்ட்ராய்டு, iOS-க்கு அப்ளிகேஷன்களை டெவலப் செய்யச் சொல்கிறது மைக்ரோசாஃப்ட். 
இன்னும் எக்ஸ்க்ளூசிவ்வான தகவல், மைக்ரோசாஃப்ட்-ன் Cortana பெர்சனல் டிஜிட்டல் அஸிஸ்டன்ட் iOS, ஆண்ட்ராய்டு ஃபோன், டேப்லட்களுக்கு வர இருப்பதுதான்.
ஜூலை 29-ம் தேதி உலகம் முழுக்க விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம் விற்பனைக்கு வர இருக்கிறது. கம்ப்யூட்டர்கள், டேப்லட்கள், ஃபோன்கள் என அனைத்து சாதனங்களிலும் ஒருங்கிணைந்து இயங்கக்கூடியது இந்த ஆபரேட்டிங் சிஸ்டம். இனி, ஒரு அப்ளிகேஷன், கேம், சாஃப்ட்வேர் டெவெலப்பர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு தனித்தனியாக டெவலப் செய்யத் தேவையில்லை. ஒரே கோடிங்தான்! யூஸர் இன்ட்டர்ஃபேஸ் மட்டும் மாறுபடும். இது டெவலப்பர்களுக்கு வரப்பிரசாதம்!பின்னாலேயே ஹார்டுவேர் நிறுவனங்களும் வந்துவிடும்.
எனவே, விண்டோஸ் ஃபோன் வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் முழுமையாக கைவிடவில்லை. விண்டோஸ் 10 எனும் ஒரே ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் டெஸ்க்டாப், மொபைல், டேப்லட் என 3 கோல்களையும் போட இருக்கிறது மைக்ரோசாஃப்ட்.
பதுங்கிப் பாயத் தயாராகிவிட்டதோ மைக்ரோசாஃப்ட்?
ர. ராஜா ராமமூர்த்தி

Friday, November 14, 2014

பேஸ்புக்கின் புதிய வசதி - தேங்க்யூ வீடியோ - பேஸ்புக் பிரைவஸி - புதிய இடங்களை அறிய

பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ’லட்சக்கணக்கானோர் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ள பேஸ்புக் இந்த நட்பை கொண்டாட உதவும் புதிய வழிகளை உருவாக்கித்தர முயன்று வருவதாகவு  குறிப்பிட்டுள்ளது . இப்படி உருவாகி இருக்கும் சமீபத்திய வசதி தான் சே தேங்ஸ்.



இதன் மூலம் நண்பர்களுக்கோ சக ஊழியருக்கோ பேஸ்புக் மூலம் ஒரு தேங்யூ வீடியோவை அனுப்பி வைத்து நன்றி தெரிவிக்கலாம். ஒருவர் முக்கியமாக நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இந்த வீடியோவை உருவாக்கி அனுப்பலாம்.

இந்த வீடியோவை எப்படி உருவாக்க, facebook.com/thanks பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு நன்றி சொல்ல உள்ள பேஸ்புக் நண்பரை தேர்வு செய்தால் உடனே பேஸ்புக்கே உங்கள் டைம்லைனில் இருந்து ஒரு வீடியோவை உருவாக்கித்தரும். அந்த வீடியோவில் உங்கள் நட்பை அடையாளப்படுத்தும் புகைப்படங்களும் பதிவுகளும் இருக்கும். பேஸ்புக் பரிந்துரைக்கும் வீடியோவை உங்கள் விருப்பம் போல திருத்தி அமைக்கலாம். பொருத்தமான தீமை தேர்வு செய்து அதில் இடம் பெறும் புகைப்ப்டங்களையும் பதிவுகளையும் எடிட் செய்யலாம். எல்லாம் தயாரான பிறகு அதனுடன் நன்றி தெரிவிக்கும் வாசகத்தை எழுதி தனிப்பட்ட டச்சுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த வீடியோ உங்கள் டைம்லைனில் தோன்றும் .அதில் உங்கள் நண்பரும் டேக் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் டைம்லைனிலும் தோன்றும். அடிப்படையில் , இந்த தேங்க்யூ வீடியோ வசதி கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட லுக் பேக் வீடியோ தொகுப்பு வசதியின் இன்னொரு வடிவம் தான் என்று ஒரு கருத்து இருக்கிறது. 

டைம்லைனில் தோன்றும் வீடியோ பொதுப்பார்வைக்கு வரும் போது எப்படி தனிப்படதாக இருக்கும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.  அதோடு தேங்க்யூ வீடியோ பெற்றவர்கள் பதிலும் தேங்க்யூ வீடியோ அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவார்களா? என்றும் கேட்கப்படுகிறது.

பயனாளிகளுக்கு எப்படியோ பேஸ்புக்கிற்கு இந்த சேவை முக்கியம். சமீபத்தில் வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்புடன் பேஸ்புக் போட்டி போடக்கூடிய அளவுக்கு அதன் வழியே வீடியோக்கள் பகிரப்படுவதாக செய்தி வெளியானது. பேஸ்புக் இந்த நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக இது இருக்கலாம்.

தேங்க்யூ வசதி பேஸ்புக் பயனாளிகள் மத்தியில் பிரபலமாகிறதா என்பதையும் அதைவிட முக்கியமாக பயனுள்ளதாக இருக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

* புதிய இடங்களை அறிய 

தேங்க்யூ வசதியை தவிர பேஸ்புக் புதிய இடங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வசதியையும் சத்தமில்லாமல் அறிமுகம் செய்திருக்கிறது தெரியுமா?



பேஸ்புக் பிலேசஸ் எனும் இந்த வசதி மூலம் உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்ளலாம். பார்க்க வேண்டிய இடங்கள் என்றால் சுற்றுப்பார்க்க வேண்டிய இடங்கள் மட்டும் அல்ல, ரெஸ்டார்ண்ட்கள்,ஹோட்டல்கள், பார்கள், சுற்றுலா இடங்கள், பள்ளிகள், கலைக்கூடங்கள் என சகல விதமான இடங்களையும் பரிந்துரைக்கிறது. இவை எல்லாமே பேஸ்புக் வலைப்பின்னலில் பகிரப்படும் தகவல்களின் அடிப்படையில் திரட்டப்பட்டு அவற்றின் லைக் அளவுக்கு ஏற்ப பட்டியலிடப்பட்டவை. இந்த பட்டியலை தாண்டியும் பரிந்துரைகளை பார்க்கலாம்.  அப்படியே நண்பர்களின் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். விரும்பிய நகரை குறிப்பிட்டும் தேடுன் வசதியும் பிரதானமாக இருக்கிறது.
 
நீங்கள் விரும்பும் நாட்டையும் நகரையும் தேர்வு செய்து அங்குள்ள இடங்களை அலசத்துவங்கலாம். நம்முரான சென்னை துவங்கி அநேக உலக நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இடங்களுக்கான பேஸ்புக் கையேடு என்றும் இது வர்ணிக்கப்படுகிறது.  சுற்றுலா செல்வதாக இருந்தாலும் சரி, டின்னருக்கு செல்வதாக இருந்தாலும் சரி அல்லது வீக் எண்டை திட்டமிடுவதாக இருந்தாலும் இந்த சேவையை முயன்று பார்க்கலாம்.

முயன்று பாருங்கள்; https://www.facebook.com/places

* பேஸ்புக் பிரைவஸி

பேஸ்புக் தொடர்பான இன்னொரு முக்கிய செய்தி , அதன் பிரைவசி அறிக்கை புதுப்பிக்கப்பட்டு தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. பேஸ்புக் பிரைபசி கொள்கை தொடர்பாக பல காட்டமான விமர்சனங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இந்த அறிக்கை சிக்கலாக, குழப்பமாக புரியாமல் இருக்கிறது என்பது. இதை சரி செய்யும் வகையில் அறிக்கை அல்லது விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

எல்லோரும் புரிந்து கொள்ளகூடிய வகையில் இது அமைந்திருப்பதாக சொல்லப்படுகிரது. ஆனால் சர்ச்சைக்குறிய பல அம்சங்கள் தொடர்கின்றன. பேஸ்புக் பிரைவசி கொள்கையை நீஙக்ள் சரியாக புரிந்து கொள்ளலாம் ஆனால் உங்களை பிரைவசையை கட்டுப்படுத்த அல்லது உங்கள் கையில் எடுத்துக்கொள்ள அதிகம் செய்ய முடியாது என்று சொல்லப்படுகிறது. எதற்கும் படித்துப்பார்த்து உங்கள் பேஸ்புக் உரிமை மற்றும் உரிமையின்மையை தெரிந்து கொள்ளுங்கள்: http://newsroom.fb.com/news/2014/11/updating-our-terms-and-policies-helping-you-understand-how-facebook-works-and-how-to-control-your-information/

- சைபர்சிம்மன்

Tuesday, September 3, 2013

நோக்கியாவை மைக்ரோசாப்ட் 48,000 கோடி ரூபாய் விலைக்கு வாங்குகிறது!

Nokia will also license its patents and mapping services to Microsoft. Nokia shares jumped 35% on the news, whereas Microsoft's fell more than 5%.The purchase is set to be completed in early 2014, when about 32,000 Nokia employees will transfer to Microsoft. Nokia has fallen behind rivals Samsung and Apple, while critics say Microsoft has been slow into the mobile market. Describing the deal as a "big, bold step forward", Microsoft chief executive Steve Ballmer told the BBC that his company was in the process of transforming itself from one that "was known for software and PCs, to a company that focuses on devices and services".

"We've done a lot of great work in the two-and-a-half years that we've been in partnership with Nokia, going literally from no phones to 7.4 million smart Windows phones in the last quarter that was reported," he said.But he admitted: "We have more work to do to expand the range of applications on our product."
Priority move Microsoft, one of the biggest names in the technology sector, has struggled as consumers have shunned traditional PCs and laptops in favour of smartphones and tablet PCs. 

Critics say the firm has been too slow to respond to the booming market for mobile devices. It launched its Surface tablet PCs last year, but sales of the devices have been relatively slow. Analysts said that the company wanted to make sure that it got its strategy right in the mobile phone market."Mobile is an area of tremendous potential but it has been one of weakness for Microsoft," Manoj Menon, managing director of consulting firm Frost & Sullivan, told the BBC.

"Clearly the number one priority for the company is to get its mobile strategy right. From a strategy point of view, this deal is the perfect step, The only question is how well they can execute this plan." Ben Wood, an analyst at telecoms consultancy CCS Insight, said: "It's a necessary gamble by Microsoft to break into mobile, but given its complete reliance on Nokia for Windows Phone devices and the competitive position of Apple and Google with rival phone platforms an understandable move."It completely reshapes Microsoft's business pushing it firmly into hardware. But it also raises big questions about the sustainability of other firms, including HTC and Blackberry, remaining pure-play phone makers," he added.

 'Tighter integration'

Nokia was once a leader in mobile phones, but the firm's sales fell 24% in the three months to the end of June from a year earlier. It sold 53.7 million mobile phones during the quarter, down 27% on last year.
However, sales of its new Lumia phones, which run a Microsoft operating system, rose during the period.
Mr Menon said that the deal between the two companies would help to bring the "hardware closer to the operating system and achieve a tighter integration".

"This should help Microsoft make a more effective strategy to compete in the mobile sphere," he said.
Microsoft has also agreed a 10-year licensing arrangement with Nokia to use the Nokia brand on current mobile phone products. 

Management changes
 
Nokia also announced changes to its leadership team as a result of the sale. Stephen Elop will step down as president and chief executive of Nokia Corporation and resign from the company's board.The firm said that he would become the executive vice president of the Devices & Services unit, adding that it expected him to "transfer to Microsoft at the anticipated closing" of the deal.
 
The transfer of Mr Elop to Microsoft comes at a time when the company is looking for a new chief executive.The current head of Microsoft, Steve Ballmer, announced last week that he would be retiring and is expected to leave the company within the next 12 months.Summing up his tenure at the helm of one of the world's largest technology companies, he told the BBC: "I'm pleased with what we've achieved; I'm pleased with the level of innovation we've brought to intelligent devices around the globe."But there's always another challenge and with this acquisition we'll take things up to the next level."Mr Elop who left Microsoft to join Nokia in 2010, has been cited by some as one of the frontrunners to replace Mr Ballmer.


1871: Founded. Spends the next century making tyres, boots and cables.
1987: Launches first phone. The Mobira Cityman weighs almost 1kg.
1992: Sells non-mobile divisions and launches first digital GSM phone, the Nokia 1011.
2000: Stock market value hits 186bn euros. Now worth 11bn euros.
2003: Basic 1100 phone launched. Goes on to sell 250 million units and become the world's most popular consumer electronic device.
2011: Abandons Symbian mobile phone operating software and switches to the Windows platform instead.
2013: Launches the Lumia 1020 boasting a 41 megapixel camera.
Source: Reuters/Nokia
Thanks bbcnews.com

Tuesday, August 27, 2013

பில்கேட்ஸ்... !!!!

உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை...
பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।'உழைக்க மட்டுமல்ல... உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்...' - இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.

பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் 'பாட'த்தைத் தொடங்கிவிட்டார்। கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் 'லேக்சைட் (Lake Side) பள்ளி'யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர்.

அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான 'பேசிக்'கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், 'இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது' என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர்.அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। 'அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை' என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.

பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு'க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து
விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடும் 'டேட்டா என்ட்ரி' வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை.

துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, 'டிராஃப்- ஓ -டேட்டா' (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, 'இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்' என்று அமெ-ரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.

இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் 'பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்' இதழில் 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800' என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், 'உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது' என்று அள்ளிவிட்டனர். உண்மையில் அவர்களிடம் 'அல்டெய்ர்' ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.


'எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்' என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்
கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் உருவானது.இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்-தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்।

இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் 'பேசிக்' புரோகிராமோடு நிற்காமல் 'ஃபோர்ட்ரான்', 'கோபால்' ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார். 
அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்-யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ।பி।எம்। மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்பு-முனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்-வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.

குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ।பி।எம்., நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்தது.
அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்... அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆப-ரேட்டிங் சிஸ்டம்... இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை.

சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிபாரிசு செய்தது। ஆனால், அந்த இன்னொரு நிறுவனத்-துடன் ஐ।பி.எம்மால் உடன்பட முடியவில்லை. பந்து திரும்பவும் பில்கேட்ஸ் கோர்ட்டுக்கே வந்தது.

இந்தமுறை “சரி” என்றார் கேட்ஸ்। அதுதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை!

இத்தனை குறுகிய காலத்தில் 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கு தெரியும்। 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த 'க்யூடாஸ்' (QDOS) என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற விலைக்கு வாங்கி-னார்। அதில் மராமத்து வேலைகள் செய்து,

தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி 'டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்' (ஞிளிஷி) என்ற பெயரில் ஐ।பி.எம். கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். 'பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி' என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது. தன் தயாரிப்புதான் பவுடர் பூசி 'ஐ.பி.எம்'- கம்ப்யூட்டரோடு சக்கைபோடு போடுகிறது என்று 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியபோது, பில்கேட்ஸ் பணத்தால் அடித்து, அந்த நிறுவனத்தின் வாயை அடைத்தார்.

உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு என்ற தத்துவம் அவருக்குக் கைவந்ததானது!

ஐ।பி।எம். நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த சாமர்த்தியம்தான் பில்கேட்ஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான பாடம்.

என்னதான் 'ஐ।பி.எம்.' நிறுவனம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால், அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. ஐ.பி.எம்-க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கியபோது அவை சாஃப்ட்வேருக்காக பில்கேட்ஸை நாடின. பிற நிறுவனங்களுக்கு விற்கக்-கூடாது என்று ஒப்பந்தம் போடாததால் 'ஐ.பி.எம்.' கையைப் பிசைந்துகொண்டு நிற்க, பில்கேட்ஸ் டாலர் மழையில் நனையத் தொடங்கினார். தூறல், மழையாகி, அதுவே அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.

கீ போர்டு மூலம் மட்டுமே கட்டளைகளை உள்ளிடக்கூடிய 'டாஸ் சிஸ்ட'த்தில் 'மைக்ரோசாஃப்ட்' இருந்த நேரத்தில் 'மவுஸை' வைத்து திரையில் தெரியும் கட்டளைகளை 'க்ளிக்' செய்து செயல்படுத்தும் புதிய தளத்துக்குப் போயிருந்தது போட்டி நிறுவனமான 'ஆப்பிள்'. 1984-ல் அதன் 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டர் 'மவுஸ்' உடன் வெளிவந்தது.

'மேகின்டாஷ்' கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப 'எம்.எஸ்.வேர்ட்'டை (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது. ஆனால், அந்த முயற்சியின்போது மவுஸால் கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்தின் நுணுக்கங்களை காப்பியடித்து, அதை வைத்து 'விண்டோஸ்' என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை தயாரித்ததாக 'மைக்ரோசாஃப்ட்' மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவும் செய்தது.
ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோட்ட 'மைக்ரோசாஃப்ட்'டில் இருந்து, 1990-ல் 'விண்டோஸ்- 3।0' வெளியானது. அதைப் பிரபலப்படுத்த 'மைக்ரோசாஃப்ட்' தயாரித்து அளித்த 'எக்ஸெல்', 'வேர்ட்', 'பவர் பாயின்ட்' ஆகியவற்றை உள்ளடக்கிய 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' மென்பொருட்கள் பெரிதும் பயன்பட்டது. 'ஆப்பிள்' கம்ப்யூட்டரில் கூட 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' வெற்றிகரமாக இயங்கியது. 'விண்டோஸ்- 3.0' நல்ல வெற்றி. 1995-ல் வந்த 'விண்டோஸ் -95' அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றிருந்தார். 'விண்டோஸி'ன் நதிமூலம் 'ஆப்பிள்'தான் என்பது மறந்தே போயிற்று.

இப்படி 'ஆபரேட்டிங் சிஸ்டம்' பந்தயத்தில் கவனம் செலுத்திய பில்கேட்ஸ், இணையப் புரட்சியைத் தவறவிட்டார்। இணையதளங்களை மேய்வதற்கு 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவிகிதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள்.

அதனால் என்ன... பில்கேட்ஸ் கையில்தான் ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கிறதே... உருவாக்கத் தவறினால் உருவாக்கியவனை அழுத்து என்று!'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' என்ற உலாவியைத் தயாரித்தார்। மக்கள் கவனத்தை இந்தப் பக்கம் திருப்ப அவர் எடுத்த ஆயுதம்... இலவசம்! 'விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட'த்தோடு 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை' இலவசமாகக் கொடுத்தார். விளைவைச் சொல்லவேண்டுமா... கொஞ்ச நாளில் 'நெட்ஸ்கேப்' பின்னுக்குத் தள்ளப்பட்டது.

'விண்டோஸ்' என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில்கேட்ஸ் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று 'ஆபரேட்டிங் சிஸ்டம்' தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், சாஃப்ட்வேருக்கு முன்-னால் சட்டம் கொஞ்சம் பலவீனமாகத்-தான் பேசி-யது. பிறகு, அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்-பட்டது.

இன்றும் சாஃப்ட்வேர் கொடி உயரத்தான் பறக்கிறது... பில்கேட்ஸ் சொல்லும் தெளிவான பாடம் இதுதான்... 'உழைக்கத் தயங்காதே... ஒரு கட்டத்துக்கு மேல் போனபிறகு உண்மையாக உழைப்பவனுடைய உழைப்பை தனதாக்கிக் கொள்ளவும் தயங்காதே...' இதுதான் சக்சஸ் ஃபார்முலா! அதற்கு வாழும் உதாரணமாக இருக்-கிறார் பில்கேட்ஸ்!

2006-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்। அதன்பின் 'சேர்மன்' என்ற அளவில் மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி, மேற்பார்வை செலுத்திவந்த பில்கேட்ஸ், தற்போது முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்। பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்। ஆனால், பில்கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு.


Shared from friend blog

Monday, July 1, 2013

முகநூலின் புதிய வசதி - அரட்டை பெட்டி மற்றும் பின்னூட்டத்தில் போட்டோவினை இணைக்கும் வசதி

முகநூல் தளம் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் . இந்த தளம் மூலமாக எழுத்து வடிவிலான கோப்புகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பரிமாறிக்கொள்ள முடியும்.  முகநூல் தளத்திலிருந்தே முகநூல் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் முடியும். அதே போன்று நண்பர்கள் பதிவிடும் கட்டுரை, படங்கள், வீடியோக்களுக்கு பின்னூட்டம் கொடுக்க முடியும். இந்த பின்னூட்டம் மற்றும் அரட்டை அடிக்கும் போது படங்களையும் சேர்த்து பகிர்ந்து கொள்ள முடியும்.  
இதுவரை அரட்டை மற்றும் பின்னூட்டத்தின் போது எழுத்து மற்றும் ஐகானை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை முகநூல் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரட்டையின் போது படத்தை இணைக்க
முதலில் உங்களுடைய  தளத்தில் உள்நுழையவும். பின் அரட்டை அடிக்கும் நண்பர்களை தேர்வு செய்யவும். அப்போது அரட்டை பெட்டியின் அடியில் உள்ள போட்டோ ஐகானை கிளிக் செய்து போட்டோவினை தேர்வு செய்யவும். சிறிது நேரத்தில் போட்டோ பதிவேற்றம் செய்யப்பட்டு போட்டோ அரட்டை பெட்டியினுள் போட்டோ தெரியும்.



பின்னூட்டத்தின் போது படத்தை இணைக்க
பின்னூட்டம் இடுகையில் பட ஐகானை கிளிக் படத்தினை தேர்வு செய்து, பின்னூட்டம் இடுகையில் படத்தை இணைக்க முடியும். 


இந்த வசதியின் மூலம் எளிதாக போட்டோவினை எளிதாக இணைக்க முடியும்.
 
இந்த பதிவு tamilcomputerinfo  எனும் வலை பக்கத்தில் இருந்து பகிரப்படுகிறது. 

Sunday, June 30, 2013

மாணவர்களிடையே ஆர்வம் குறைந்த ஏரோநாட்டிக்கல் படிப்பு

பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இக்கலந்தாய்வு ஜூன் 21ம் தேதி துவங்கி ஜூலை 30ம் தேதி வரை   நடைபெறுகிறது. 

  

இக்கலந்தாய்வில் ஜூன் 28ம் தேதி நிலவரப்படி, பெரும்பாலான மாணவர்கள் இசிஇ மற்றும் மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏரோநாட்டிக்கல் படிப்பில் 238 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர். எனவே இப்படிப்பில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.