Blogger Widgets

Total Page visits

Wednesday, May 1, 2013

மும்பை வருவதென்றால் எதிரணியினர் அஞ்ச வேண்டும் - ரோகித் சர்மா!

பெங்களுர் அணி கேப்டன் கோலிக்கு நடந்ததுதான் அனைத்து அணி வீரர்களுக்கும் நடக்கும் என்ற அர்த்தத்தில் ரோகித் சர்மா இதனைக் கூறவில்லை என்பதை முதலிலேயே தெளிவு படுத்திவிடுவோம். 

தன் அணி பலம் பெற்று வருவதை அறிவிக்கவே மும்பை இந்தியன் கேப்டன் ரோகித் சர்மா இவ்வாறு கூறியுள்ளார். மும்பையை எங்கள் கோட்டையாக மாற்ற விரும்புகிறோம், இங்கு வந்து ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட எதிரணியினர் அஞ்ச வேண்டும். உள்ளூர் போட்டிகளை வெற்றி பெறுவது அவசியம். இதனால் உள்ளூர்  நடைபெறும் அதிகபட்ச போட்டிகளில் வெற்றிபெறவேண்டும். உள்ளூர்  பயனை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்ா என்று கூறியுள்ளார். ரோகித்.

 கிங்ஸ் லெவன் பஞ்சாபையும், கெய்ல் உள்ள அச்சமூட்டும் ராயல் சாலஞ்சர்ஸ் அணியையும் வீழ்த்திய பெருமிதத்தில் ரோகித் சற்று அதிகமாகவே பேசியுள்ளார் என்றே தோன்றுகிறது. நேற்று 39 பந்துகளில் 79 ரன்களை விளாசினார் கேப்டன் ரோகித். இருப்பினும் கிங்ஸ் லெவன் 174 ரன்களை துரத்தி விடும் என்று தான் அஞ்சியதாக ரோகித் தெரிவித்துள்ளார். டேவிட் ஹஸ்ஸி வீசிய கடைசி ஓவரில் ரோகித் 27 ரன்களை விளாசினார். இதுதான் பஞ்சாப் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஷான் மார்ஷிற்கு மீண்டும் ஒரு அபாரமான கேட்சை பிடித்த கெய்ரன் போலார்டையும் ரோகித் பாராட்டினார். பிரவீண் குமார், பர்விந்தர் அவானா ஆகியோரின் பந்து வீச்சை டேவிட் ஹஸ்ஸி பாராட்டினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நன்றி தினபூமி 

No comments: