Blogger Widgets

Total Page visits

Showing posts with label Facebook News. Show all posts
Showing posts with label Facebook News. Show all posts

Sunday, November 23, 2014

கான்வென்ட் பள்ளிகளும், கருவேல மரங்களும்!!!

உங்களுக்கு நேரமிருந்தால், வாய்ப்பிருந்தால், விருப்பமிருந்தால் ஏதாவதொரு அரசுப் பள்ளிக்கூடங்களையோ அதில் பயிலும் மாணவர்களையோ கூர்ந்து பாருங்கள். அதேபோல் ஆங்கிலப்பள்ளி அதில் படிக்கும் மாணவர்களின் செயல்பாடுகளை கவனித்துப் பாருங்கள். நம் பிள்ளைகள், எதிர்கால தலைமுறையினர் குறித்த சிந்தனை உங்களுக்கு ஏற்படாமலிருக்காது.



நாம் பேசிக்கொண்டேயிருக்கிறோம். எழுதிக்கொண்டே இருக்கிறோம். மாற்றங்களை ஏற்படுத்த ஆள்பவர்கள் மனதில் நேரமில்லையா? ஈரமில்லையா தெரியவில்லை. தான் பிறந்த மண்ணை, மக்களை, பெற்றோர்களை, உறவினர்களை விட்டு பிரிப்பது கல்வி ஒன்று மட்டும்தான். பிறந்ததிலிருந்து பின் அவர்களை ஒரு பணியில் அமர்த்திவிடும் வரை இன்று ஒவ்வொருப் பெற்றோர்களின் பிள்ளைகளின் கல்விக்காகவே மட்டும் உழைக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கு செலவழிப்பதற்காகவே நெறிமுறைகளை மீறி பொருள் சேர்க்க வேண்டியிருக்கிறது.

வணிகர்கள் கையில் கல்வியைக் கொடுத்துவிட்டு அரசு மெல்ல நழுவிக்கொண்டுவிட்டது. கல்வித்துறை எனும் பெயரில் தேர்வு ஒன்றை நடத்தி இருக்கிற ஏதோ ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் செய்வது மட்டுமே போதும் என நினைத்துவிட்டது.. இங்கிருக்கிற கல்வி எதற்கும் உதவாது என்பதைச் சொல்லிப் போராட ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் துணிவும் இல்லை, நேரமும் இல்லை. சம்பளத்திலும், பணியில் அமர்த்தும் தகுதி குறித்தும் மட்டுமே போராடினால் போதும் என ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். பணத்தைச் சேர்த்து இந்த கொள்ளைக்கூடங்களில் கொட்டவும், பிள்ளைகளுக்கு வேண்டியதை சம்பாதிக்கவும் மட்டுமே பெற்றோர்களுக்கு நேரமிருக்கிறது. தங்களின் சொந்தப் பிரச்சினைகளுக்கு போராடுவதுபோல் அரசியில் கட்சிகளும் கல்வி போன்ற நம் தலைமுறையினரின் முதன்மையான பிரச்சினைகளுக்காக ஒன்று சேர்ந்து போராடுவதில்லை. இங்கு எல்லாமே தனித்தனி அறிக்கையோடு முடிந்து போகிறது. அனைவருமே இங்குள்ள மக்கள் கொத்தடிமைகளாகவும், அகதிகளாகவும் ஆக்கப்படுவது குறித்து கவலைப்படாமல் ராஜபக் ஷேவின் செயல்பாடுகளை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டின் விடுதலைக்குப்பின் மக்களாட்சி எனும் பெயரில் மக்களின் கையில் வாக்குரிமையைக் கொடுத்துவிட்டு அவர்களை சிந்திக்க மறந்த அடிமைகளாக்கி அவர்களின் கையாலேயே ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றும் தொழிலைத்தான் இன்று அரசியல் கட்சிகள் கையிலெடுத்துக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும், ஒவ்வொரு நிறுவனங்களாக இன்று செயல்படத் தொடங்கிவிட்டன. மக்களும் எதையும் கண்டுகொள்வதில்லை.

வயது வந்தவர்களின் மூளைகளை மதுக்கடைகள் பிடுங்கிக் கொள்கிறது. இளம் தலைமுறையினரின் மூளைகளை முடக்கி தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. அடிமையாய் இருப்பவர்களைவிட தாங்கள் அடிமைகள்தான் என்பதை உணராதவர்களின் நிலைமைதான் கொடுமையானது என்பதைச் சொன்ன ஒரு சிந்தனையாளனின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

கருவேல மரங்களை அழிக்க இன்று எத்தனைத் திட்டங்கள் போட்டாலும் அதனை அழிக்கவே முடியாது. வீட்டுக்குள் மட்டும் அவைகள் பரவவில்லை. நாடெங்கிலும் பரவி நிலத்தின் வனத்தையும், நீர்ப்பிடிப்பையும் அழித்துவிட்டன. இது நமக்கான தாவரமில்லை. இந்த மக்களுக்கு ஏதோ நன்மை செய்வதாக நினைத்துத்தான் இந்த செடிகளை இங்கு கொண்டுவந்திருப்பார்கள் நம் ஆட்சியாளர்கள். அதேபோலத்தான் இம்மக்களுக்கு நல்லதை செய்வதாக நினைத்து ஆங்கிலக் கல்வியை மூலை முடுக்கெல்லாம் தூவினார்கள். கருவேல மரங்கள் நம் ஆதாரங்களையே அழித்ததுபோல் இந்த ஆங்கிலக்கல்வி நம் தாய்மொழி முதற்கொண்டு வாழ்வியலின் அனைத்து அடிப்படைக் கூறுகளையும் அழித்துவிட்டன.

இந்தக் கல்வித்திட்டம் நம்மை அடிமைகளாக வைத்திருந்தவர்கள் கொண்டு வந்தத்திட்டம். ஏர்க்காடு உணவகம் ஒன்றில் மேசையில் துணிக்குப்பதிலாக துணிக்குப்பதிலாக பெரியதாள் ஒன்றில் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த வரிகள் எனக்குத்தந்த அதிர்வுகள்போல் நம்மில் எத்தனைப் பேருக்கு இது இருந்திருக்கும் எனத்தெரியவில்லை.

1835ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசாங்கத்தின் பணியாளாக இந்தியாவிற்கு வந்த “லார்ட் மெக்காலே” இந்தியாவை சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டாண்டுகளுக்குப்பின் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு இப்படி எழுதுகிறான்.

"இந்தியாவை இரண்டாண்டுகள் குறுக்கிலும் அதன் நெடுக்கிலும் சுற்றிப்பார்த்து இந்த மடலை எழுதுகின்றேன். எல்லா வளங்களும் நிறைந்த நாடு. மக்கள் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்குவதாக இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் எங்குமே ஒரே ஒரு பிச்சைக்காரனையோ, ஒரு திருடனையோ நான் பார்க்கவில்லை. அறநெறிகளை உருவாக்கி அதனை மதித்து வாழும் இவர்கள் ஒன்றைப் பார்த்து மட்டும் பயப்படுகிறார்கள். அந்நியர்கள், அந்நிய மொழி!

குறிப்பாக ஆங்கிலம் பேசினால் பயப்படுகிறார்கள், மதிக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையை சிதைத்து நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரை ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவர்களின் கல்வி, மருத்துவம், கணிதம், அறிவியல் என எல்லாவற்றையும் அழித்துவிட்டு நம் முறையைப் புகுத்தினால் நிரந்தர அடிமைகளாகி விடுவார்கள்" என எழுதியிருந்தான். இந்தக் கடிதத்தைக் காண்பிடித்துதான் சென்ற ஆண்டு தலைமுறைகள், தங்கமீன்கள் படத்துக்காக என் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைத்து விருதுகளைப் பெற செயல்பட்டேன்.

மெக்காலே 185 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் செயல்படத் தொடங்கியதில் நாம் இப்பொழுது நம் அடையாளங்களை இழந்து நிற்கிறோம். தாய்மொழியும் தெரியாத, அயல் மொழியும் தெரியாத ஒரு சமூகமாக சிதைந்து கிடக்கிறது. நம் மக்களைப் பற்றி சிந்தித்த, நம் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் உருவாக்கிய நம் அரசுப் பள்ளிக்கூடங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மாணவர்களில்லாத மாட்டுக் கொட்டகைகளாகிவிட்டன.

ஐந்து வயது வரும்போது பள்ளிக்கு அனுப்பலாம் என்றிருந்த பெற்றோர்கள் இன்று குழந்தை கருவுற்ற உடனேயே பணம் கொடுத்து பள்ளியில் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். மூன்று வயதிலிருந்தே வீட்டிலும் படிப்பு, பள்ளியிலும் படிப்பு. இந்த வயிற்றுப் பிழைப்பு கல்வியில் எம் தலைமுறையினர் அழிக்கப்படுவதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.

எல்லாப் பெற்றோர்களைப் போலவேதான் நானும் தவறினை செய்தேன். நண்பர் ஒருவரின் கேட்கக்கூடாத சொல்லைக்கேட்டு இந்தக் கறிக்கோழிகள் உருவாக்கப்படும் இடங்களைப் போலுள்ள வெளியூரிலுள்ள ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் என் மகனை சேர்த்தேன். அந்த இரண்டாண்டு காலத்தில்தான் இந்த மாணவர்கள்படும் துயரங்களும், அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வியும், அவை தரப்படும் விதங்களும் புரிந்தது. ஒவ்வொரு ஆங்கிலப்பள்ளிக் கூடங்களும், சிறைக் கூடங்கள்தான் என்பதை உணர்ந்தேன். மனநோயாளி அளவுக்கு மாற்றப்படும் பிள்ளைகள் ஆசிரியரைக் கொலை செய்யும் அளவுக்கு மாற்றப்படுவது இப்பள்ளிகளில்தான். அவர்கள் அதிக அளவில் தேர்ச்சியைப் பெற்று அதனைக் காண்பிப்பதற்குத்தான் அத்தனைக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

தனது குடும்பத்துக்கும், தனது சமூகத்துக்கும், இவ்வுலகத்துக்கும் அவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. பயந்து நடுங்கிய மனதோடும், சோர்ந்து போய் குழி விழுந்த இருண்ட கண்களோடும்தான் என் மகனை வீட்டிற்கு அழைத்து வந்தேன். தன்னம்பிக்கை இழந்த, தன்னைப்பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கின்ற சிறு பிரச்சினைகளைக் கண்டுகூட அஞ்சுகின்ற, சமூகத்தைப்பற்றி சிந்திக்க மறுக்கி்ற அவனை சமநிலைக்குக் கொண்டு வருவதுப்பற்றித்தான் இப்பொழுது கவலைகொள்கின்றேன். அவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களையும், பள்ளியின் பொறுப்பாளர்களையும் பார்த்தபோது நான் அடைந்த வேதனைகளையும் என்னால் எழுத முடியவில்லை. ஒட்டுமொத்த சமூகமும் அழிக்கப்படுவதைப் பார்த்து நான் கொள்ளும் கவலை இது.

அந்தப்பள்ளி மட்டுமல்ல தமிழ்நாட்டின் எல்லாப்பல்லிகளிலுமே ப்ளஸ் 1 பாடத்தை கற்பிக்காமல் நேரடியாகவே பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே மனப்பாடம் செய்ய கட்டாயப்படுத்துப்படுகிறார்கள். இதனால் ஐ.ஐ.டி,ஐ.எம்.எம்., போன்றத்தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை மிகவும் குறைந்துப்போகிறது.பிளஸ் 1 பாடத்திலிருந்து பாதி கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவர்கள் விடை தெரியாமல் தோல்வியடைகிறார்கள்.மூன்று மாதங்களுக்கொருமுறை பருவத்தேர்வை நடத்தி இதனைச் சரி செய்யலாம். யாருக்கு இங்கே இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது?

தன் மொழியைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் இம்மக்களைப் பற்றியும் சுற்றி நடக்கின்ற எதைப் பற்றியும் கவலை கொள்ளாத தலைமுறைகளைத்தான் இந்த கல்வித்திட்டம் உருவாக்கிக்கொண்டு வருகிறது. தங்களுக்கு நல்ல அடிமைகள் வேண்டும் என்பதற்காகவே இதில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரத் தயங்குகிறார்கள். கல்வி என்பது வெறும் விவரங்களைக் கொடுப்பது என்பதாக இல்லாமல் அறிவைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். உலக அளவில் தலை சிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் இருநூறில்கூட இந்தியாவிலிருந்து ஒன்றுமே இல்லை. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு! வல்லரசாக உருவெடுக்க கனவு காணும் நாடு!ஆங்கிலக் கல்வி கொடுத்து எம்மக்களை முன்னேற்றுபவர்களாகச் சொல்லி மார்தட்டிக்கொள்பவர்கள் கொஞ்சம் இதற்கு பதில் சொல்லுங்களேன். விதைத் தானியத்தை தின்று வயிறு வளர்ப்பவர்களால் எதுவும் சொல்ல முடியாது. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறம் நாட்டுப்பற்றை வார்ப்பதாகக் கல்வி இருக்க வேண்டும். அதனைப்புரிந்து கொண்ட நாடுகள்தான் இன்று உண்மையாக கல்வியைக் கற்றுத்தருகின்றன.

எல்லாமுமே ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன என நினைக்கும் முட்டாள்தனமும், மூடத்தனமும் அவர்களிடத்தில் இல்லை.

பணம் கொடுத்தால் எந்த பதவியையும் வாங்கலாம். துணைவேந்தர் பொறுப்பு என்பது எப்படிப்பட்டது! அரசியல் உயர் பொறுப்பில், செல்வாக்கின் அச்சாணியைக் கையில் வைத்திருக்கிற பணத்தாசைப் பிடித்தவர்கள்தான் இவர்களை நியமிக்கிறார்களாமே என வெளிநாட்டிலிருந்து தமிழ் கற்க வந்திருக்கிற ஒரு மாணவர் என்னிடம் கேட்கிறார். க,ங,ச 18 எழுத்தை வரிசையாகச் சொல்லத் தெரியாமல் மாட்டிக்கொண்டு தவித்த முனைவர் பட்டம் பெற்றவரைக் காட்டட்டுமா என அவர் என்னிடம் கேட்கிறார். வெளிநாட்டுக்காரர் தமிழ்மொழியின், நம் பழைய கல்வித் திட்டத்தின் மேன்மை அறிந்து வியக்கிற நிலையில் இருக்கும்போது முனைவர் க,ங,ச தெரியாமல் கோட்டு சூட்டுடன் அலைவதும், மனப்பாடக் கல்வி மூலம் 500 மதிப்பெண்களில் 496 பெற்று பீற்றிக்கொள்வதும்தான் நம் கல்வித்திட்டம் சாதித்திருப்பது.

முதல் மதிப்பெண்ணைப் பெறும் ஒரே நோக்கத்திற்காகவே ஒரு மாணவனை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த பெற்றோர்களிடமும், கல்வி நிறுவனங்களிடமும், ஆசிரியர்களிடமும் நான் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள நினைக்கிறேன். கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா?

கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மதிப்பெண் தேர்ச்சியில் முதல் 25 இடங்களில் தேறிய மாணவர்களெல்லாம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். யாருடன், எங்கே, எப்படி வாழ்கிறார்கள் என்பதைச் சொல்லுங்களேன்.

இதிலிருந்து நிச்சயம் தெரிந்துவிடும் நம் கல்வித்திட்டத்தின் அருமை பெருமை.
- இன்னும் சொல்லத் தோணுது, தங்கர் பச்சான்

Tuesday, October 22, 2013

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

நன்றி :- ஆதிரா.

Wednesday, October 9, 2013

கொசுக்கள் ஏன் சிலரை மட்டுமே அதிகமாகக் கடிக்கின்றன?!!!

சாதாரணமாக நம்மைக் கடிப்பது பெண் கொசுக்கள்தான். அவை யாரைக் கடிக்க வேண்டும் என்பதைப் பார்வை, மோப்ப சக்தி மூலம் கண்டறிகின்றன.

அவற்றின் உணர்கொம்புகள் மூலம் 72 வகையான மணங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். இந்த 72 வகையான மணங்களில் 27 வேதிப்பொருள்கள் நமது வியர்வையில் இருப்பவை.

நமது வியர்வையில் இருக்கும் அப்படிப்பட்ட வேதிப் பொருள்களில் கார்பன் டை ஆக்சைடு, ஆக்டனால், நோனனால் போன்றவை அடங்கும். ஒருவரது வியர்வையில் இந்த வேதிப்பொருள்களின் அடர்த்தி அதிகமாக இருந்தால், கொசுக்கள் அவர்களைக் குறி வைத்துக் கடிக்கின்றன.

இனிமேல் கொசு உங்களை அதிகமாகக் கடித்தால், அதற்குக் காரணம் என்ன என்று தேடாதீர்கள். எல்லாம் உங்கள் வியர்வையில் இருக்கிறது.

வியர்வை வருவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால், தற்போது மேலே சொன்ன வேதிப்பொருள்கள் வெளியே தெரியாத வண்ணம் மறைக்கும் வகையில் பூச்சித் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சி நடந்துவருகிறது. சீக்கிரம் கண்டுபிடித்தால், கொசுக் கடியில் இருந்து நாமும் சீக்கிரமாகத் தப்பிக்கலாம். 
( Source : Hindu)

Monday, September 30, 2013

" ஐ லவ் யூ அப்பா".

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். 

அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். 

சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். 
அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் 

" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! 

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?

ரெண்டு செல் போன்களின் குமுறல்கள் !!!

போ - 1. அப்பாடா இன்னிக்கு ஒருத்தன் நம்மளை வாங்கிட்டான் பா ...கடையில இருந்து தப்பிச்சோம் .

போ - 2. ஹாய் ..நம்மளை ஒரு பொண்ணு வாங்கிடுச்சு.ஹய்யா ஜாலி ...டெய்லி நமக்கு கலர் கலர்ரா டிரஸ் போட்டு விடுவா.தோடு .ரிப்பன் எல்லாம் வாங்கி மாட்டுவா ...ஹ்ம்ம்ம்ம்.

முதல் நாள் :

போ - 1. அடேங்கப்பா ,,,பெரிய நல்ல மனுஷன் கிட்ட தான் வந்து சேர்ந்து இருக்கோம் போல,,,நல்லா துடைச்சு துடைச்சு பார்த்து
கிறா னப்பா,,,
போ - 2. அட,,அட,,அட,,,,அவ குளிக்குறாலோ,,,இல்லையோ,,நமக்கு நல்லா மேக் அப் போட்டு விடுறாயா,,,,எச்சி எல்லாம் துப்பாம,,,வெட் tissue வச்சு எல்லாம் துடைச்சு விடுறா ,,,ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கோமோ,,,,

கொஞ்ச நாள் கழிச்சு :

போ - 1. அட பக்கி காலங்காத்தாலே பல்லு கூட விலக்காம, என்னைய எடுத்து அவன் கேர்ள் பிரெண்டு கூட கடலை போட ஆரம்பிச்சுடுச்சு ....

பையன் : ஹாய் டார்லிங் எழுந்துடீயா ...

போ.1. மூதேவி,அவ எந்திரிக்காமையாடா பேசுறா ...ஜொள்ளு விட ஒரு அளவு இல்லையாடா .

பையன் : நேத்து என்ன கனவு கண்ட

போ 1. நேத்து எங்க டா தூங்க விட்ட அவளை ...4 மணி வரை அறுத்து எடுத்துட்டு பேச்சை பாரு .

பொண்ணு : நான் இன்னும் எந்திரிக்கலை டா ...

போ 2 : அடிப்பாவி , காலைல எழுந்ததுல இருந்து தூங்கும் வரை பொய் தானா ???

பையன் : நான் குளிச்சு ஆபீஸ் க்கு கிளம்பிட்டு இருக்கேன் ...

போ 1: அட நாதாரி ...

பொண்ணு : சரி.இன்னிக்கு என்ன கலர் ஷர்ட் .என்ன கலர் பேன்ட் ...

போ 2: நாட்டுக்கு ரொம்ப முக்கியம் .அப்படியே நல்லா வாயில ...பல்லு கூட விலக்கலை ..பேச்சை பாரு.

டொய்ங்...டொய்ங்....டொய்ங்...பீப் சவுண்ட் ...

அடியே அழகு ராணி என் உசுரு போக போகுதுடி ...சீக்கிரம் சார்ஜ் போடும்மா ..

பையன் : நான் இன்னிக்கு டார்க் பச்சை ஷர்ட் ...டார்க் ப்ளாக் பேன்ட் ...

போ 1: ஆமா டா எங்க ஊருல எல்லாம் ப்ளாக் கலர் நல்லா லைட் டா வெள்ளையா இருக்கும் ...முதல்ல சார்ஜ் ல போடுறா புறம்போக்கு ...

எப்படி டா இப்படி பேசுற ...

பொண்ணு : சரி...சரி..இரு அம்மா கூப்பிடுறாங்க ..அப்புறம் பேசுறேன் ...

போ 2: அம்மடியோவ்வ் ...யாருமே கூப்பிடலையே ...ஏன் இப்படி சொல்லுறா ...

பையன் : வழக்கம் போல பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டா,,,சரி நம்ம வேலைய பார்ப்போம்.

பையன் பாஸ் : காலிங் காலிங் ,,,,போன் ரிங்கிங் ரிங்கிங்,,,,

ரிங் டோன் ..... போடா போடா புண்ணாக்கு ,,,,பாட்டு ரிங் டோன் ,,,,

போ 1: டே பக்கி ,,,உன் பாஸ் டா,,,,,எடுக்க மாட்டானே ,,,,
பையன் : சார்,,,,குட் மார்னிங் சார்,,,,
பாஸ் : எங்க பா இருக்க,இன்னிக்கு presentation க்கு ரெடி பண்ணிடீயா ,,,
பையன்: நேத்து நைட் டே உங்களுக்கு மெயில் பண்ணிட்டேன் சார் ,,,
பாஸ்: ok ,very good .எங்க இருக்க ,,,,
பையன்: on the way to ஆபீஸ் சார் .
போ 1: அட பக்கி,,,,காலைலயே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டான் யா,,,

பொண்ணு : காலிங் ,,,காலிங் டு பையன் ,,,
போ 2: ஐயோ,ஆரம்பிச்சுடாலே சாமி,,,,என்னை காப்பாத்த யாருமே இல்லையா ,,,
நான் சூடாகி வெடிக்குற வரை பேசுவாளே ,,,,அந்த பொறம்போக்கும் வச்சு தொலைய மாட்டானே ,,,
பையன்: ஹாய் டியர்,,,என்ன பண்ணுற,,,
பொண்ணு: காலேஜ் க்கு கிளம்பிட்டு இருக்கேன் .
போ 2: படிக்குறதை தவிர மத்த எல்லாம் நல்லா பண்ணுற,,,
பையன் : சரி நான் ஆபீஸ் க்கு வந்துட்டேன்,லஞ்ச் டைம் ல பேசுறேன்,,
பொண்ணு :அப்போ என்னை விட ஆபீஸ் தான் முக்கியமா ,,,சரி,,,போ,,,டோன்ட் கால் மீ ,,bye
போ 2: அய்யய்யோ ,,,,,இனி நான் செத்தேண்டா ,,,என்னை அமுக்கி அமுக்கியே கொல்ல போறா மெசேஜ் ன்ன்ர பேருல ,,,
பையன் : ஹாய் ,டார்லிங்,,,pls try to understand .
போ 1: இங்கிலீஷ் புலவர் கிளம்பிட்டாரு டோய் ,,,,
பொண்ணு : no reply .....
போ 2: போச்சுடா ,,,இனிமேல் அவன் ஆரம்பிச்சுடுவான் ,,,மூச்சு விடாம அந்த ரோசன்கெட்ட நாய் ,,,தொடர்ந்து msg அனுப்பி சாவடிக்க போறான்,,,நமக்கு battery யை காலி பன்னுரதுலையே குறியா இருக்காங்க பா
பையன் : ப்ளீஸ் டியர் ,,,,reply me ,,,,
பையன்: my sweet heart ,,,ப்ளீஸ் ,,,
பையன் : blank msg
போ 1: அட ரோசம் கெட்டவனே ,,,,நீ எல்லாம் திருந்தவே மாட்டீயாடா .அவ தான் reply பன்னலைல ,,,
பொண்ணு: கடைசி msg என்ன பண்ணின,,,ஒண்ணுமே வரலை,,,,blank msg received ...
பையன்: yes ,,yes ,,,yes ,,,( inner பீலிங் ,,வெளிய குதிக்குறான் )
பையன்: i love you ன்னு msg பண்ணினேன் ,,,,
பொண்ணு: சரி ,,evening எத்தனை மணிக்கு முடியும்,,,வேலை,,,
பையன்: பீச் போகலாமா,,,
பொண்ணு: அது அப்புறம் சொல்லுறேன்
போ 2: அட கிறுக்கி மவ சிறுக்கி,,,டெய்லி இப்படியே அவனை தொல்லை பண்றேன்னு நம்மளை தொல்லை பண்றேளா
போ 1: அப்படா ,,,இனிமேல் தொல்லை இல்லை,,,சாப்பாடு வரை,,,
போ 2: அப்படா,,,,இவ கிளாஸ்க்கு போய்ட்டான்னா தான் நமக்கு நிம்மதி

லஞ்ச் டைம் :

பையன் : காலிங் காலிங் டு பொண்ணு
போ 2: ரிங் டோன் : டார்லிங் டார்லிங் டார்லிங் ,,,i love you ,,,,love you ,,,love you
போ 2: இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை ,,,,நேரம் தான் ,,,,
பையன் : ஹாய் டியர்,,,சாப்டியா,,,
போ 1 : அட போங்கடா ,,பொழுது ஆரம்பிச்சதுல இருந்து ,,பொழுது போறவரை உங்க தொல்லை தாங்கலை டா ,,,டெய்லி சார்ஜ் போடுறதை தவிர வேற என்ன டா பண்ணி இருக்க,,,பாவி
போ 2: சே ,,எப்படியோ எல்லாமா கனவு கண்டு வந்தேன்,,
இவளுக்கு வாக்க பட்டு என்ன சுகத்தை கண்டேன்,,,
Thanks facebook

Friday, September 27, 2013

குலையலாமா குடும்ப அமைப்பு?

நமது தமிழ்நாடு 1,30,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பையும் 7 கோடியே 21 லட்சம் மக்கள் தொகையையும் கொண்டது. தமிழ்நாட்டின் அடிப்படை ஆதாரமாக இருப்பது சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள்தான். மிக முக்கியமான இந்த அடிப்படையைச் சிதைக்கும் ஆபத்துகளை யாரும் இப்போது அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை; குடும்பம் எனும் அமைப்பின் தேவை அழுத்தமாக உணரப்படவும் இல்லை.

மேலை நாடுகளுக்கும் நமது நாட்டுக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு, நாம் குடும்பத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம்தான். மேலை நாடுகளில் தனி மனிதர்களே முதன்மையானவர்கள். ஆனால், நம்முடைய சமூகம் அப்படி அல்ல. பாரம்பரியமாகவே நமது குடும்பத்தினரின் நலனில் அதிக அக்கறை கொண்டு வாழ நாம் கற்றிருக்கிறோம்.

உலகின் பொருளாதாரத்தில் இந்தியாவின் இடம் முதன்மையானதாக இல்லை. ஆனால் வெளிநாடுகளில் சம்பாதித்து, தன் நாட்டிற்கு பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பவர்கள் நமது இந்தியர்கள்தான். 2010-ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் வேலை செய்வோர் இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பத்தினருக்கு அனுப்பிய பணம் மூன்று லட்சம் கோடி ரூபாய் என்கிறது புள்ளிவிவரம். இது அரசாங்கம் நீட்டி முழக்கும் நேரடி அன்னிய முதலீடுகளைவிட அதிகமானதாகும்.

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை'

என குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். இப்படி, காலம் காலமாக நாட்டின் வளமாகவும், அடிப்படையாகவும் இருந்துவரும் குடும்ப அமைப்பு முறை தற்போது பெரும் ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளது.

சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் குழுவாகவும் இயற்கையான அமைப்பாகவும் குடும்பம் இருக்கிறது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் அடிப்படையான குழந்தைகள் உருவாகும் இடமும் வளரும் இடமும் குடும்பம்தான். குடும்பத்தை எதற்காக இயற்கையான அமைப்பு என்று சொல்கிறார்கள் என்றால், அது காலம் காலமாக இருக்கிறது. அரசாங்கம், நாடு போன்ற அமைப்புகள் உருவாவதற்கு முந்தைய காலத்திலிருந்தே குடும்பம் இருக்கிறது.

சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், சமூக ஒற்றுமை என எல்லாமும் குடும்பத்தினால்தான் கற்பிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பணம், பொருள் உள்ளிட்ட பல்வேறு வகையான தேவைகளை குடும்பம்தான் நிறைவு செய்கிறது. குறிப்பாக குழந்தைகளும், முதியோரும் குடும்பத்தின் ஆதரவில்தான் வாழ்கிறார்கள்.

பொருளாதார உற்பத்திக்கு அடிப்படையாக இருப்பது குடும்பம்தான். வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் உருவாக்குவதில் குடும்பங்கள்தான் முன்னிலையில் உள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் இடமும் குடும்பம்தான். எனவே நாட்டின் ஒட்டுமொத்த பொளாதாரமும் குடும்பத்தையே மையமாக வைத்தே இயங்குகிறது.

உலக அமைதி, வறுமை ஒழிப்பு, சமூக ஒற்றுமை, வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என நல்ல இலக்கு எதை எடுத்துக் கொண்டாலும் அதன் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது குடும்பம்தான்.

1948-ஆம் ஆண்டு உலகம் ஏற்றுக்கொண்ட முக்கியமான மனித உரிமை ஆவணமான பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights) குடும்பத்தின் தேவையை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. குடும்பம் என்பது இயற்கையான மற்றும் சமூகத்தின் அடிப்படைக் குழுவாக இருக்கிறது; அரசாலும் சமூகத்தாலும் பாதுகாக்கப்படும் உரிமையை குடும்பம் பெற்றிருக்கிறது ('The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State') என்று கூறியுள்ளது.

குழந்தை வளர்ப்பும், கல்வியும் பெருமளவுக்கு குடும்பத்தின் பணிகளாகவே இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் செயல்பாட்டிற்கு வந்த முதல் பத்தாண்டுகளில் எல்லோருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்கிற அரசியல் சாசனக் கடமையை இன்று வரை அரசாங்கங்கள் தவறவிட்டு வரும் நிலையில், குடும்பங்களே அந்தக் கடமையை சுமந்து வருகின்றன. மேலை நாடுகளில் இதுபோன்ற பொறுப்புகளை பெருமளவுக்கு அரசுகளே ஏற்றுக் கொள்கின்றன.

குழந்தைகளின் கல்விக்காக செலவிடுதல் மட்டுமின்றி, அவர்களை பொறுப்பாக கவனித்து கல்வி கற்பிப்பதிலும், அவர்களது திறனை வளர்ப்பதிலும் குடும்பத்தினர் பெரும் பங்கினை ஆற்றுகின்றனர். எனவே, தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் குடும்பமே பெரும் பொறுப்பை வகிக்கிறது எனக் கொள்ளலாம்.

மருத்துவத்திற்காக குடும்பங்களே அதிகம் செலவிடுகின்றன. இந்தியாவில் மருத்துவத்திற்காக செலவிடப்படும் பணத்தில் 90 விழுக்காட்டிற்கு மேல் குடும்பத்தின் செலவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் மருத்துவ செலவுகள் அரசின் கடமையாக இருக்கும்போது, நம் நாட்டில் அது குடும்பத்தின் கடமையாக விடப்பட்டுள்ளது.

இப்படியாக கல்வியிலும் மருத்துவத்திலும் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் இங்கு குடும்பங்களே சுமக்கின்றன. குடும்ப அமைப்பு சிதையுமானால் இவை எல்லாம் அரசின் பொறுப்பாக மாறும். அத்தகைய பொறுப்புகளை ஏற்கும் நிலையில் நம்முடைய அரசுகள் இல்லை.

இங்கு பொருளாதாரம், சமூக வாழ்க்கை, பாதுகாப்பு, பண்பாடு எல்லாமும் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குடும்ப அமைப்பின் அச்சாணியாக இருப்பது திருமணம். எனவே, திருமணத்தை இரு நபர்களின் தனிப்பட்ட விடயமாக மட்டுமே பார்க்க முடியாது.

அண்மைக் காலங்களில் மேற்கத்திய அநாகரிகங்களின் தாக்கத்தால் கட்டற்ற பாலியல் சுதந்திரம், திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்தல், பெற்றோரின் ஒப்புதல் இல்லாத காதல் திருமணங்களை ஊக்குவித்தல் என்பன தமிழ்நாட்டில் பேசப்படுவதன் வாயிலாக குடும்ப அமைப்புக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் (Organisation for Economic Co-operation and Development) 34 முன்னேறிய நாடுகள் இணைந்துள்ளன. ஓ.இ.சி.டி நாடுகள் எனப்படும் இந்த நாடுகள் பெரும்பாலான பாலியல் சுதந்திரக் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. குடும்பத்தை விட தனி நபர்களின் மகிழ்ச்சி முக்கியம் என கருதும் இந்த நாடுகளில் குடும்பங்களின் அழிவால் நேர்ந்துள்ள கேடுகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க முடியும்.

ஓ.இ.சி.டி நாடுகளில் 25 முதல் 49 வயதுள்ள பெண்களில் 20 விழுக்காட்டினர் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதையே நாகரிகம் என்று கருதுவதால் இப்போக்கு நேர்ந்துள்ளது. இந்த நாடுகளில் திருமணங்கள் நடைபெறும் அளவு குறைந்து விட்டது. எத்தனை திருமணங்கள் நடக்கின்றனவோ, அதற்கு இணையான அளவில் விவாகரத்துகள் நடப்பதும் இயல்பானதாகிவிட்டது. ஆக, திருமணமான கணவன் - மனைவி கடைசி வரை இணைந்து வாழ்வது அங்கு அரிதான ஒன்றாகிவிட்டது.

திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதும் அந்த நாடுகளில் இயல்பானதாக ஆகிவிட்டது. வாரக் கடைசி நாள்களில் மட்டும் சேர்ந்து இருப்போம் - ஆனால் தனித்தனி வீடுகளில் வாழ்வோம் - என்கிற வகையில் திருமணம் செய்யாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் முறை அங்கெல்லாம் மிக அதிகமாக உள்ளது. இதனால் திருமண பந்தத்திற்கு வெளியே குழந்தை பெறும் அளவு மிக அதிகமாகிவிட்டது.

ஓ.இ.சி.டி நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் திருமணம் செய்யாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளின் அளவு 1980-ஆம் ஆண்டில் 11 விழுக்காடாக இருந்தது. இது 2007-ஆம் ஆண்டில் 33 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

ஒற்றைப் பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது, திருமணம் செய்யாத பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது, தாயோ தந்தையோ வேறொருவரைத் திருமணம் செய்வதால் மாற்றுப் பெற்றோருக்கு குழந்தையாக வாழ்வது போன்ற துயரம் மிகுந்த மனச்சூழலில் குழந்தைகள் வளரும் போக்கு அங்கு அதிகமாகிவிட்டது.

தனது இயற்கையான பெற்றோருடன் வாழும் குழந்தைகள் மற்ற மாணவர்களைவிட அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர். நல்ல வேலைகளில் அமர்கின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் இவர்களிடம் குறைவாகவே இருக்கிறது. திருமண பந்தத்திற்கு வெளியே பிறக்கும் குழந்தைகள் இந்த விடயங்களில் கணிசமாக மாறுகின்றனர் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் சமூக நலத்திட்டங்களுக்காகச் செலவிடும் சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் பணத்தில் முக்கால் பங்கு ஒற்றைப் பெற்றோருக்கும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோருக்கும் செலவிடப்படுகிறது.
அதாவது மேலை நாடுகளின் அரசாங்கத்தின் மிகப்பெரிய செலவு என்பது குடும்ப அமைப்பு மற்றும் திருமணத்தில் ஏற்படும் குறைபாடுகளைச் சமாளிக்கவே செலவிடப்படுகிறது.

குடும்பம், திருமணம், பாலியல் உரிமை போன்ற விடயங்களில் மேலை நாடுகள் என்னென்ன தவறுகளைச் செய்தனவோ, அதே தவறுகளை நாம் செய்துவிடக் கூடாது.

காதல் திருமணங்களை எதிர்க்கக் கூடாதுதான். ஆனால் காதல் என்கிற பெயரில் சிறுவர், சிறுமிகளின் வாழ்க்கை சீரழிந்து போவதையும் அனுமதிக்கக் கூடாது.

பதின்வயது எனப்படுகிற 20 வயதுக்கும் கீழான காலம் மனித வாழ்வில் மிக முக்கியமான காலம் ஆகும். குழந்தைகள் அமைப்பான யூனிசெப் இதனை "வாய்ப்புகளின் காலம்" என அழைக்கிறது. ஏனெனில் இந்த வயதுதான் கல்வி, தொழில் திறமைகள் போன்ற எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொள்ளும் வயதாகும்.

"ஹார்மோன் இம்பேலன்ஸ்" எனப்படும் வகையில் மனம் எளிதில் அலைபாய்ந்து தடம்மாறும் வயதாகவும் பதின்வயது இருக்கிறது. எனவே, அவர்கள் வாழ்வில் வழிதவறிப் போய்விடாமல் காக்கும் கடமை சமூகத்திற்கு உண்டு.

குடும்ப வன்முறை, பெற்றோர், கணவன், உறவினர் என சொந்தங்களினால் மனித உரிமை மீறல்கள் நடப்பது - என குடும்பம் என்கிற அமைப்புக்குள் இருக்கின்ற கேடுகள் களையப்பட வேண்டும். ஆனால், அதற்காக அந்த அமைப்பையே சிதையச் செய்யும் காரியங்களை அனுமதிக்கக் கூடாது. அப்படிச் செய்வது பெருங் கேடுகளையே விளைவிக்கும்.

காதல், திருமணம், தலைமுறையினருக்கு இடையேயான உறவு, குழந்தைகள் மற்றும் முதியோரின் நலன், சமூக உறவுகள், பண்பாடு என பல நிலைகளிலும் குடும்ப அமைப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

குடும்பம், அரசுக்கு முந்தையது; அரசை விட மேலானது; இயற்கையானது. குடும்ப அமைப்பை அழியாமல் காப்பாற்றி அடிப்படை மனித உரிமைகளையும், ஜனநாயகப் பண்பையும் போற்றி வளர்ப்பதில் குடும்பங்கள் முக்கிய பங்கினை ஆற்ற அனைவரும் வழிவகுக்க வேண்டும். இதுவே இன்றைய உடனடித் தேவையாகும்.

கட்டுரையாளர்: நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி.

சமூக இணையங்களில் வேகமாக பரவும் மனித உணர்வு ‘கோபம் சீன ஆய்வில் தகவல்!

உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மனிதர்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபலயமாகி, வாழ்வுடன் ஒன்றிப் போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் ட்விட்டர்.

குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும் தமது கருத்துக்களை அவர்கள் ட்விட்டரில் சென்று பதிந்து விடுகிறார்கள்.

உதாரணமாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்து, அது ஒரு சினிமா நடிகை கூறிய கருத்தாக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியின் உளரலாகவும் இருக்கலாம். அந்த கருத்தை கேள்விப்பட்ட அல்லது பார்த்த அல்லது படித்த உடனே ட்விட்டர் ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிந்து விடுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் மத்தியில் என்ன கருத்துகள் நிலவுகின்றன என்பதை அறிய விரும்பும் ஆய்வாளர்கள், முதலில் நாடுவது டிவிட்டர் போன்ற இணையதளங்களைத்தான்.

இப்படிபட்ட உலக சமூக இணையதளங்களில் ஒன்றுதான், வே-போ. மேற்குலகின் டிவிட்டர் போன்றது சீனாவின் இந்த வே-போ. ஐநூறு மில்லியன் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள்.

நூறு மில்லியன் கருத்துகள் தினமும் இதில் பதிவாகின்றன. தமது சீன நாட்டின் இந்த வே-போ இணையதளம் பற்றி, தலைநகர் பீஜிங்கிலுள்ள பே ஹாங் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியாகியுள்ளன.

வே-போ பயனீட்டாளர்களின் சொற்பிரயோகம், ‘எமோட்டிகான்’ என்கிற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கேலிச்சித்திரப் பிரயோகம் ஆகியவற்றை ஆராய்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வே-போவில் வெளியிடப்படும் கருத்துக்களை கோபம், சோகம், குதூகலம், விரக்தி என்று நான்கு பிரிவுகளாக பிரித்துத் தொகுத்தார்கள்.

அவற்றை அவர்கள் ஆய்வு செய்தபோது, கோபமூட்டும் பதிவுகளே மக்கள் மத்தியில் அதிக அளவில் பரிர்ந்து கொள்ளப்பட்டதை கண்டறிந்தார்கள். இதற்கு காரணம், கோபக்கார பதிவர்களுக்கு கோபக்கார நண்பர்கள் ஏரளமாக இருப்பதாகக்கூட இருக்கலாம்.

சீனாவிலுள்ள சமூகப் பிரச்சினைகள், வெளிநாடுகளுடனான ராஜந்தந்திர தகராறுகள், இவை போன்ற தகவல்கள் வே-போ தளத்தில் ஆத்திரத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று ஆய்வுகள் காட்டின.

2010 ஆம் ஆண்டில் ஆறு மாத காலம் சுமார் இரண்டு லட்சம் வே-போ பாவனையாளர்களின் எழுபது மில்லியன் பதிவுகள் ஆராயப்பட்டு இந்த முடிவுகள் எட்டப்பட்டன.

இதேபோல, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சிலர் கண்டுபிடித்துள்ள ஒரு கணினி தொழில்நுட்பம் ட்விட்டர் தளத்தின் மூலம், ஒரு நாட்டின் உணர்வை அறிய முடிகிறது, ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவர் ஆத்திரம் கொண்டிருந்தால், அதே ஒத்த கருத்தை உள்ளவர்களுடன் அவர் இணைவது இயற்கைதான் என்று ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

Tuesday, September 24, 2013

முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!

முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? “முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? “பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”

6 Things to Keep Your Computer Fast Forever

You bought a Core2 Duo computer few months ago and now it works like it has Pentium 3 processor. Well, there are few thing you can do to keep it as fast as you bought it few months ago.

1. Install Less Applications on your Computer
------------------------------------------------
An Application is free doesn’t mean you have to install it on your PC. Few people are obsessed with installing useless Applications to their Computer, even if they are never going to use it. It takes space in your Computer and east memory. Better to uninstall all the unwanted applications.

2. Defragment Your Hard Disks
----------------------------------
You keep copying, moving and deleting files on your Hard Drive. This makes your Hard Drives unorganized. Defragmentation will remove the spaces and organize your HD to make to respond more faster. This increases the Speed of your PC.

3. Delete Temporary Internet Files
--------------------------------------
You browse hundreds of websites everyday, thee are various things which are downloaded to your computer locally. like cookies, image files etc. So that the next time you Open the same website, you will get a personalized experience. But this also affects the performance of your PC. You should remove them on a periodically.

4. Restart Your Computer Daily
---------------------------------------
Few guys use the easy method of closing down their Computers, They either put it ot standby or Hibernate it. This also affects your PC as a proper sleep is important to everybody. Even to Computers.

5. Keep Your OS Updated
--------------------------------------
not every OS is perfect, they get updates where smalls bugs are fixed. So, if you though updates are not that important, you are mistaken, every update is going to fix and issue in the OS which also affect the Performance of your PC. Always turn the automatic updates on.

6. Control Automatic Startup of Applications
---------------------------------------------------
There are a bunch of applications which automatically start at the time of Computer startup, they increase the boot time of your Computer. Control the startup of application in your PC and reduce the boot time.

If you follow only these 6 things, your Computer will always be the same. You can use CCleaner also to keep your PC run fast and smooth. And please share this info to your friends

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்ன...??

1. நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு

3. நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா..?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது.

கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது
கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்..

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்...

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் !

இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம்.

சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால்
அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

via ::: உடுமலை.சு.தண்டபாணி.

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்ன...??

1. நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு

3. நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா..?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது.

கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது
கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்..

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்...

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் !

இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம்.

சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால்
அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

via ::: உடுமலை.சு.தண்டபாணி.

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்ன...??

1. நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு

3. நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா..?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது.

கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது
கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்..

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்...

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் !

இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.

அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம்.

சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால்
அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

via ::: உடுமலை.சு.தண்டபாணி.

Saturday, September 14, 2013

உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ?

மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"
தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"
மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?"
தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?"
மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுப்பா ."
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா ..."
மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"

தந்தைக்கு கோபம் வந்தது ...

தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்..."

அந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..
அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ..

தந்தை : "தூங்கிட்டியாடா ?"
மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..."
தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .."

அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் ..

மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "

அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .. அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...

தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் .... அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."
மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட இல்ல ... இப்போ இருக்கு ....
கேளுங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு .... இதை நீங்களே வச்சிக்கோங்க ... இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ... நா உங்ககூட இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ... "

அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ... சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...
தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்....
இந்த தகவல் என் facebook - ல் இருந்து பலரும் அறிய இங்கு பகிரபடுகிறது. 

கண்டுபிடித்தவர் யார்?

குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.

அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.

கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.

ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.

பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.

ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898

பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.

நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.

யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.

அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.

நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.

ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.

விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903

திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.

டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)

கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)

மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)

சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)

லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.

செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.

மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.

கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.

ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.

மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.

அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.

அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.

புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
 இந்த தகவல் என் facebook - ல் இருந்து பலரும் அறிய இங்கு பகிரபடுகிறது. 
Click to read from original Page