Blogger Widgets

Total Page visits

Showing posts with label computer tricks. Show all posts
Showing posts with label computer tricks. Show all posts

Friday, December 5, 2014

வாட்ஸ் அப்புக்கு வழிவிடும் ஃபேஸ்புக்

கையில் எப்போதும் மொபைல வச்சுக்கிட்டு என்னதான் பண்றாங்கன்னே தெரியல எனச் சலித்துக்கொள்கிறீர்களா? உங்கள் நிலைமை ரொம்ப கஷ்டம்தான். ஏனெனில் இளைஞர்கள் தங்கள் கையகலக் கருவியில் உலகத்தைப் பார்க்கிறார்கள். உலகெங்கிலும் வாழும் தங்கள் நட்பையும் உறவையும் வாட்ஸ் அப் வழியே ஒன்றிணைத்துக் குதூகலிக்கிறார்கள்.


அமிஞ்சிக் கரையில் தான் பார்க்கும் அழகான காட்சி ஒன்றை அமெரிக்காவில் உள்ள நண்பனுக்கு உடனே வீடியோ படமாக எடுத்து அனுப்பிவிட முடிகிறது. சில நிமிடங்களுக்குள் அந்தப் படம் கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துவிடுகிறது. குதூகலத்தின் திரியில் வைக்கப்படும் நெருப்பு உலகைச் சில நிமிடங்களில் உற்சாகத்தில் மூழ்கடித்துவிடுகிறது.

ஸ்மார்ட் போனின் அப்ளிகேஷனான வாட்ஸ் அப் என்னும் மந்திரம் இளைஞர்களுக்கு ஜீபூம்பா காட்டுகிறது. அவர்கள் ஏவும் வேலையை எல்லாம் செய்துவிட்டு அடுத்து என்ன என்பது போல் அந்தப் பூதம் காத்துக் கிடக்கும். ஸ்மார்ட் போனில் உள்ள நண்பர்கள் யார் யாரெல்லாம் வாட்ஸ் அப் வைத்திருக்கிறார்கள் என்பதை உடனுக்குடன் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அவர்கள் எப்போது வாட்ஸ் அப்பில் மெஸேஜைப் பார்த்தார்கள் என்னும் தகவல் நகர்ந்துகொண்டே இருக்கிறதே. ஐ லவ் யூ சொல்லக் கடிதம் எழுதி அதை அவள் படித்தாளோ, இல்லையோ என இளைஞர்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை.

வாட்ஸ் அப்பில் நினைத்ததைச் சொல்லி வீடியோ ஃபைலாக அனுப்பிவிடலாம். அவள் பதிலுக்கு ஓகே சொல்லலாம். அல்லது செருப்பைக்கூடக் காட்டலாம். அதைப் பற்றி என்ன, ஷேம்லெஸ் கய்யாக மாறி அடுத்த தொடர்புக்குத் தாவிவிடலாம்.

வாட்ஸ் அப்பை அணுக கம்ப்யூட்டர் தேவையில்லை ஸ்மார்ட் போனே போதும் என்னும் நிலையின் காரணமாக, அது ஃபேஸ்புக்கைவிட எளிதில் இளைஞர் உலகத்தில் ஊடுருவிவிட்டது. இளைஞர்கள் என்றில்லை, கிட்டத்தட்ட ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடம் வந்து சேர்ந்துள்ளது இந்த வாட்ஸ் அப். என்ன உனக்கு எழுதப் படிக்கத் தெரியாதா என்று கேள்வி கேட்பதுபோல வாட்ஸ் அப் உன்னிடம் இல்லையா என எள்ளலுடன் கேட்கிறார்கள்.

வேறு வழியின்றி பலர் அதில் தங்களை இணைத்துக்கொள்ள நேர்கிறது. இந்தியாவில் சுமார் ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக் போஸ்ட்களில் பரவுவதைப் போல இதிலும் கேளிக்கைச் செய்திகள் நிமிடங்களில் பரவுகின்றன.

குடும்ப உறுப்பினர்கள், அலுவலக நண்பர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரித் தோழர்கள் எனப் பல குழுக்களில் இணைந்துகொண்டு வாழ்க்கையைச் சுவாரசியப் படுத்திக்கொள்கிறார்கள். வேலைகளின் நடுவே கிடைக்கும் நேரத்தில் இளைப்பாற வாட்ஸ் அப் நன்கு கைகொடுக்கிறது. எங்கேயோ இருக்கும் நண்பன் அனுப்பும் ஒரு ஸ்மைலி துக்கங்களைத் தூசாக்கித் துடைத்துச் செல்கிறது.

இதிலும் வளவளவெனக் குப்பைகளைக் கொட்டும் நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இஷ்டம்னா படிக்க வேண்டியது தான், இல்லாட்டி விட்டுற வேண்டியதுதான். என்ன செய்றது பாஸ், நண்பர்கள்னா தொந்தரவும் இருக்கத்தானே செய்யும் என்று இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள்.

மெயில், ஆர்குட், ஃபேஸ்புக் என்று கணினியை மையப்படுத்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவை கைபேசியை மையப்படுத்துவதால் எளிதில் அனைவரையும் ஈர்த்துவிடுகின்றன. இனி ஃபேஸ்புக், வாட்ஸ் அப்புக்கு வழிவிட்டு நிற்பதைத் தவிர வேறு வழியே இல்லையோ?

ரிஷி

Friday, November 21, 2014

ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்!

இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில்  பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை  பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.
ஸ்கிரீன் லாக்!
எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம். 

இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி.


என்க்ரிப்ட் வசதி!
மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன் தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!
செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்ததாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும்போது android.com/devicemanager என்ற முகவரிக்குச் சென்று, ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச்ஆஃப் ஆகி இருக்கவும் கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.
அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!
பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான  ESET சொல்லும் கணக்கின் படி, அலுவலகங்களில் வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்து வதால், 30-40% வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை பயன்படுத்துவதற்குமுன், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை நெட்வொர்க் அட்மினிடம் கேட்டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

இதேபோல, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாயம் இணையம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
முக்கியமான தகவல்கள் பத்திரம்!
உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் எந்தத் தகவலையும் உங்கள் போனில் பதிவு செய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவது தவிர, போன் பழுதாகி அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!
குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன் தேவை, பாதுகாப்பு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.
குறிப்பாக, கூகுள் ப்ளே இல்லாமல் வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பானதில்லை.
அப்ளிகேஷன் லாக்!
முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளிகேஷன்களை எப்போதும் லாக் செய்து வைக்கலாம். 
இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொருமுறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.

ரூட் (Root) செய்ய வேண்டாம்!
போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை பயன்படுத்துவதுபோல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல்வேறு வசதிகள் கிடைக்கும். 
ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அறியும் வசதியைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.

பிரவுஸர்கள் எச்சரிக்கை!
போனில் பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர தகவல்களைக் கொடுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரியை அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.
அதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.
அப்டேட் அவசியம்!
போனின் சாஃப்ட்வேரை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துவைத் திருப்பது அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட் வசதி வரும்போதெல்லாம் அதைச் செய்துகொள்ள வேண்டும்.
ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்ளிகேஷன்கள் நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி வழங்க வேண்டும்.
போன் தொலைந்துவிட்டால்..?
இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள் போன் தொலைந்துபோய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்றுவது.
அடுத்தபடியாக, ‘ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்’ மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்க முயற்சி செய்வதுதான்.
ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளை நீங்களும் பின்பற்றலாமே!

செ.கார்த்திகேயன்.

Thursday, November 20, 2014

ஆண்ட்ராய்டும் விண்டோஸூம்

தற்போது கணினி உலகம், செல்போன்களிலேயே வந்துவிட்டது. தனக்குப் பிடித்தமான பாடல்களைப் பதிவு செய்து கேட்டு மகிழ்வதுடன், விடியோ மற்றும் வலைதளத்தைக் காண்பது, வலைதளம் மூலம் உரையாடல்களைப் பகிர்ந்துகொள்வது, விளையாட்டு உள்ளிட்ட தேவைக்கேற்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற வசதிகள் முன்பு கணினியில் மட்டுமே சாத்தியம்.
ஆனால், செல்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளப் பயன்பாடு வந்ததையடுத்து, இந்த வசதிகள் அனைத்தும் செல்போன்களிலேயே சாத்தியமாகியுள்ளன. இதனால், பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு இயங்குதள செல்போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிளாக்பெர்ரி, ஆப்பிள் போன்ற செல்போன்களுக்கென தனி இயங்குதளம் உள்ளது. சோனி உள்ளிட்ட ஒரு சில நிறுவன செல்போன் நிறுவனங்கள் மட்டுமே மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தின.
ஆனால், சாதாரண மக்களால் எட்டாத உயரத்தில் அவற்றின் விலை உள்ளதால் ஆண்ட்ராய்டு இயங்குதளப் பயனீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. மேலும், விண்டோஸ் இயங்குதள செல்போன்களில் அப்ளிகேஷன் எனப்படும் மென்பொருள்களையும் இலவசமாகப் பெற முடியவில்லை என்ற ஏக்கமும் விண்டோஸ் இயங்குதள உபயோகிப்பாளர்களிடையே உள்ளது.
இதனால், விலை குறைவாக உள்ளதால் மைக்ரோமேக்ஸ், ஜியோனி மற்றும் சாம்சங் உள்ளிட்ட ஆண்ட்ராய்டு இயங்குதள ஸ்மார்ட் போன்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆனால், செல்போன் விற்பனையில் முதலிடம் வகித்த நோக்கியா நிறுவனம் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யாமல் தனது "எக்ஸ்' இயங்குதளத்தை நம்பி இருந்தது. இதனால், ஸ்மார்ட் போன் சந்தையில் நோக்கியா செல்போன் நிறுவனம் சரிவை சந்தித்தது. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா செல்போன் நிறுவனத்தை ரூ.46 ஆயிரம் கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
இதன்மூலம் தனது நிறுவன மென்பொருள்களை கணினி மட்டுமன்றி செல்போன்களிலும் கோலோச்ச செய்ய வேண்டும் எனும் நோக்கில், வாங்கிய வுடன் நோக்கியா செல்போன்களில் ஏற்கெனவே இருந்த "எக்ஸ்' இயங்குதளத்திற்கு பதிலாக விண்டோஸ் இயங்குதளத்தையும் புகுத்தியுள்ளது.
ஆனால், மென்பொருள் துறையில் கோலோச்சும் அளவிற்கு மைக்ரோசாப்ட் இதர துறைகளில் முதலிடம் பிடிக்குமா என்பதே கேள்வி.
உதாரணமாக இணையதளத்தில் தேடுபொறி என்றாலே "கூகுள்'தான் என அனைவரும் கூறிவிடும் அளவில் அது முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக முதலிடம் பிடிக்கும் வகையில் "பிங்' என்ற தேடுபொறியை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஆனால், முடியவில்லை.
அதுபோல சமூக வலைதளம் என்றாலே "ஃபேஸ்புக்'தான் என்ற நிலையுள்ளது. உலக அளவில் செல்போன் மூலமாக மட்டுமே தினசரி 100 கோடிக்கும் அதிகமானோர் ஃபேஸ்புக் உபயோகின்றனர்.
இதிலும் கால்பதிக்கும் வகையில் வெளிவந்ததுதான் மைக்ரோசாப்ட்டின் "யம்மர்' சமூக வலைதளம். இதிலும் மைக்ரோசாப்ட்டால் முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை.
முகநூல் சமூக வலைதளம் விளம்பர வருவாயை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், யம்மர் சமூக வலைதளம் உறுப்பினர்களின் கட்டணத்தைச் சார்ந்துள்ளது. மேலும், இதில் தகவல்கள் பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கருதப்படுவதால், உலக அளவில் 2 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இந்தத் தளத்தில் உறுப்பினர்களாக உள்ளன.
ஆக, மைக்ரோசாப்ட் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்ற நிலை தொடர்கிறது. ஆனால், ஆண்ட்ராய்டு செல்போன்கள் மூலம் இணையதளத்தை தொடர்புகொள்ளும்போது அவரைப் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு உண்டு.
இதை சாதகமாகப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் இயங்குதள நோக்கியா செல்போன்களில் தகவல் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், குறைந்த விலையில் வெளியிட்டு ஆண்ட்ராய்டின் போட்டியைச் சமாளிக்குமா அல்லது ஆண்ட்ராய்டை ஆளவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

இனி எல்லாம் சேஃப்..!

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னையே தங்களுடைய ரகசியங்களை காப்பாற்றுவது தான். புகைப்படங்கள், வீடியோக்கள் என எதை நமது ஸ்மார்ட்போனில் என்ன தான் லாக் செய்து வைத்திருந்தாலும், எளிதாக ஹேக்கர்களின் கைகளுக்கு சென்றுவிடுகிறது. இதெற்கென எத்தனையோ ஆப்ஸ்-கள் வந்தாலும் அவை அனைத்தையும் எளிதாக கடந்து உள்ளே சென்று உங்களுடைய புகைப்படங்களை காண முடியும்.


கேலரியை லாக் செய்தால்  எல்லா போட்டோஸுமே லாக் ஆகும். ஆப் லாக் போட்டு லாக் செய்தால் செட்டிங்ஸ்-ல்  போய் ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop) செய்து ஆப்ஸை க்ளீன் போல்ட் ஆக்கி உள்ளே நுழைந்திடலாம்.. நம் ஸ்மார்ட்போனுக்கு ஏற்ற ஸ்மார்ட் சேஃப்  ஆப் -இன்று அதிகபட்ச ஸ்மார்ட்போன் யுசர்களால் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கும் மிகச் சிறந்த ஆப் தான் -  கீப் சேஃப் ஆப் (Keep Safe Vault).




நாம் எவ்வளவோதான் லாக்கிங் ஆப்ஸ் போட்டு கேலரியை பாதுகாப்பாக வைத்தாலும், சிலர் ஈஸியாக உள்ள நுழைந்து நம்ம கேலரியை யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. அப்படி நடக்காம இருக்கணும்னா கீப் சேஃப் ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்வதுதான் பெஸ்ட் சாய்ஸ். இதை ஐ-போன், ஸ்மார்ட்போன்களிலும் இன்ஸ்டால் செய்யலாம்.



இந்த ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்ததும் நம்ம இ-மெயில் அக்கவுண்ட வைத்து ரிஜிஸ்டர் செய்து ஆப்ஸ்-ஐ ஆக்டிவேட் செய்தால் போதும். நமக்கு தேவையான செலெக்டட் போட்டோஸ், வீடியோஸை லாக் பண்ணிடலாம். இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.


நம்ம கீப் சேஃப் ஆப்ஸோட ஸ்பெஷாலிட்டியே ஃபேக் பாஸ்வேர்ட் அன்ட் ஃபேக் பேக்ரவுண்ட் தான். யாராவது கீப் சேஃப் ஆப்-ஐ ஒப்பன் செய்தால் ஸ்கீரின் System Scan Complete-என்று தான் வரும். ஸ்கேனர்னு நெனைச்சு அவங்களும் அப்படியே விட்டிருவாங்க. ஆனா நமக்குதான் தெரியும் கீப் சேஃப் லோகோவை ப்ரெஸ் செய்தால் மட்டுமே பாஸ்வேர்ட் ஸ்கிரீனை ஓப்பன் செய்ய இயலும். அப்படியே உள்ள அவங்க போனாலும் நம்பர் பாஸ்வேர்ட் போட்டால்தான் ஸ்கிரீனை ஓப்பன் செய்ய முடியும். 


இவற்றிலும் ஒரு ட்ரிக் உண்டு. ஃபேக் பின் போட்டு நம்மால் உள்ள போகமுடியும் ஆனால் உள்ள எந்த போட்டோஸ், வீடியோஸும் இருக்காது. நமக்கு மட்டுமே தெரிஞ்ச சீக்ரெட் பாஸ்வேர்ட் போட்டால் மட்டுமே கேலரி ஓப்பன் ஆகும். அந்த கேலரிக்கும் நம்ம குறிப்பிட்ட பாஸ்வேர்ட் சேவ் செய்துவிட்டால் போதும். உங்களோட கேளரியை ஸாரி ஸாரி உங்களோட ப்ரைவேட் கேளரி ஓவர் சேஃப்.. இந்த ஆப்ஸோட இன்னொரு ஸ்பெஷாலிட்டி நம்ம செட்டிங்க்ஸ்&ல ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop செய்தாலும் இந்த ஆப் வேலை செய்து கொண்டே தான் இருக்கும். 



கீப் சேஃப் ஆப்ஸை டவுன்லோட் செய்ய இந்த link-ஐ  கிளிக் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=com.kii.safe&hl=en




-நீ.வைஷ்ணவி

Monday, November 10, 2014

வாட்ஸ் அப்-இன் புதிய அறிமுகம்!

குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியை தரும் வாட்ஸ்அப் (WhatsApp). ஆனது தற்போது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
 

அதாவது, நண்பர்களுக்காக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை அவர்கள் படித்துவிட்டார்களா? எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியானது இந்தியா உட்பட அனைத்து நாடுகளில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போன் பயன்படுத்துபவர்களுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்- ஐ பொறுத்தவரை, இந்த வசதி ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு வின்டோஸ், பிளாக்பெரி, பிளாக்பெரி 10 மற்றும் சிம்பெய்ன் போன்களுக்கு பொருந்தும்.

இதன்படி ஸ்மார்ட் போன்  அல்லது டேப்லட்டிலுள்ள வாட்ஸ் அப் அப்பிளிக்கேஷனில் நீல நிறத்திலான இரு சரி அடையாளங்கள் (Double tick) காணப்படுமாயின் உங்களால் அனுப்பப்பட்ட செய்தியினை உங்கள் நண்பர் படித்து விட்டார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் பார்வையிட்ட நேரத்தையும் காட்டுகிறது.

எனினும் குழு சாட்டிங்கின்போது (Group Chat) சரி அடையாளங்கள் மட்டும் நீல நிறமாக மாறும். குழு சாட்டிங்கில் நாம் அனுப்பிய செய்தியினை அழுத்தி பிடித்தால் அதாவது லாங் பிரஸ் செய்தால் குழுவில் இருக்கும் நண்பர்களுள் யாருக்கு செய்தி சென்றடைந்து விட்டது, யார் அந்த செய்தியினை படித்து விட்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது. 

முன்பு ஒரு செய்தி டெலிவரி ஆகிவிட்டால் செய்திக்கு அருகில் சாம்பல் நிற இரு சரி குறி (Double tick) வரும். ஆனால் செய்தி படிக்கப்பட்டதா இல்லையா? என்று தெரியாமலேயே இருக்கும். இப்போது வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

செய்தி: தி.கௌதீஸ்

மாணவ பத்திரிக்கையாளர்

Saturday, November 1, 2014

மோட்டரோலாவை வாங்கியது லெனோவா!

சீனாவை சேர்ந்த கணினி தயாரிக்கும் முன்னனி நிறுவனமான லெனோவா ஜப்பானை சேர்ந்த முன்னனி மொபைல் தயாரிப்பாளர்களான மோட்டரோலா நிறுவனத்தை கூகுளிடம் இருந்து வாங்கியுள்ளது.இதனால் மோட்டரோலா நிறுவனம் உலகின் மொபைல்போன் தயாரிபாளர்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

 
ஏற்கெனவே மூன்றாவது இடத்தில் இருந்த ஷியோமி செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை மோட்டரோலா பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.தற்போது ஷியோமி சர்வதேச அளவில் 4வது இடத்தில் உள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லெனோவாவின் சிஇஓவான யாங் யாங்குயிங் '' மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியானது தான். அதே சமயம் முதல் இரண்டு இடங்களில் உள்ள நிறுவனங்களை முந்துவது தான் லட்சியம்.இதற்காக தயாரிப்பில் புதுமை, வாடிக்கையாளரின் விருப்பம் தேவை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
 
2.9 பில்லியன் டாலருக்கு மோட்டரோலாவை லெனோவா வாங்கியுள்ளது என்றும், ரிக் ஆஸ்டர்லோ மோட்டரோலாவின் தலைவராகவும், சிகாகோவையே மீண்டும் தலைமையிடமாக கொண்டு மோட்டரோலா செயல்படும் என்றும் லெனோவா கூறியுள்ளது.ஆண்டிற்கு 100 மில்லியன் செல்போனை தயாரிக்கும் நிறுவனத்தை கூகுள் சென்ற 2012ம் ஆண்டு வாங்கியயிருந்தது குறிப்பிடத்தக்கது.

Friday, October 31, 2014

ஃபேஸ்புக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ஃபேஸ்புக் இணைய தளத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வமாக இருக்கும்... சிலருக்கு குழப்பமாகக்கூட இருக்கும். ஆனால்  ஃபேஸ்புக்கின் செயலாளர் மார்க்குக்கு அதில் எவ்வித குழப்ப்பமும் இல்லை... ஏன் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலையே தயாரித்துள்ளார்.

மூன்றாண்டு திட்டம், ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம் என அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணையத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் நேரங்களில் ஆளுங்கட்சியினர் வெளியிடுவது போல் கடந்த கால சாதனைகள் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சுவாரஸ்யமான பல தகவல்களும் உள்ளன..

தினமும் 864 மில்லியன் பயனாளர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக் குழுவின் மூலம் கிட்டத்தட்ட 700 மில்லியன் நபர்கள் தொழில் சார்ந்த இணைப்பை பெறுகிறார்கள். இதுபோன்ற பெருமளவில் நமது தயாரிப்பு பயன்படுத்தப்படுவதின் மூலம் நம் சேவை தரம் நன்றாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 
   
ஃபேஸ்புக் பிரபலமான மனிதர்களையும் அவர்களின் ரசிகர்களுக்கும் ஒரு பாலமாக மாறியுள்ளது. பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்குமிடையே வாராவாரம் ஒரு பில்லியன் உரையாடல்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. வீடியோ பரிமாற்றத்திலும் பெரும் வெற்றியை கண்டுள்ளோம். ஐஸ்பக்கெட் சேலஞ்ச் சார்பாக 10 மில்லியன் வீடியோக்கள் தரவேற்றப்பட்டு 440 மில்லியன் மக்களால் பார்வையிடப்பட்டுள்ளதே இந்த துறையில் நமது செயல்பாட்டிற்கான சான்று.

போட்டோ பரிமாற்ற இணைய தளமான இன்ஸ்டாகிராமும் பெருமளவு மக்களிடையே சென்றடைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் சராசரியாக 21 நிமிடம் இன்ஸ்டாகிராம் தளத்தில் செலவிடுகிறார்கள். 


இதுபோன்ற சாதனைகளின் பட்டியலை வெளியிட்டவர், அடுத்த 10 ஆண்டுகளில் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் விளக்கினார்.
  
அதில், அவர்களின் முக்கியமான குறிக்கோளாக உள்ளது மெசேஜிங்தான். ''இன்னும் மெருகூட்டப்பட்ட, வேகமான தகவல் பரிமாற்ற சேவையை வழங்க வேண்டும் என்பதுதான் முக்கிய குறிக்கோள்.அனைத்து சேவைகளிலும் பயனாளர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் ஃபேஸ்புக்கை ஒரு கிராஷ்பிளாட் பார்மாக மாற்ற வேண்டும். கடந்த ஜூலை மாதம் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து internet.org என்ற அப்ளிகேசனை ஜாம்பியா நாட்டில் வெளியிட்டது ஒரு புது அனுபவமாக இருந்தது. 

internet.org  என்பது உடல் நலம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான இணையதள சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் ஒரு அப்ளிகேசன். இந்த சேவைக்கு கிடத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சேவையை இன்னும் பல நாடுகளுக்கு வழங்க வேண்டும். கடந்த பல மாதங்களாகவே பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல நிறுவனங்களுடன் ஆலோசனை செய்துள்ளேன். இதை ஒரு நீண்ட கால இலக்காக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

''இந்த காலாண்டு வெற்றிகரமாக அமைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து ஃபேஸ்புக் பணியாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இன்னும் நீண்ட தூரம் நாம் பயணிக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுத்துள்ள பாதை மிகச் சரியான பாதை. நம் முன்னேற்றமும் அதுபோலவே மிகச்சீராக இருப்பது கண்டு நான் பெருமைப்படுகிறேன்" எனத் தெரிவித்தார்.

எஸ்.தினேஷ்குமார்
(மாணவப் பத்திரிகையாளர்,விகடன்)

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.


இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட image "1" தோன்றும். இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட image 2 தோன்றும். இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.image "3" உள்ள படத்தை பார்க்க.

உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். 

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்க
நன்றி கம்ப்யூட்டர் தகவல்கள் 
To receive good more information's Like this Page:

To receive good more information's Join this Group: 

Wednesday, October 1, 2014

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம்


மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை செவ்வாய்கிழமை அன்று (செப்டம்பர் 30ம் தேதி) அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்கள் மற்றும் இணையதளச் சேவைகளை மையமாக கொண்டு விண்டோஸ் 9 பதிப்பை நிறுத்திவிட்டு பல புதிய அம்சங்கள் சேர்த்து விண்டோஸ் 10 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் பாரம்பரிய வழிகளில் செய்யும் சில செயல்களை மறுசீரமைப்பு செய்து மற்றும் யூசர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டது போல விண்டோஸ் 10 இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது. 


உதாரணமாக, விண்டோஸ் 10ல் உள்ள ஸ்டார்ட் மெனு, விண்டோஸ் 7ல் காண்பதுபோல தோன்றும், மற்றும் அதன் பக்கத்தில் திறக்கப்படும் டைல்ஸ் விண்டோஸ் 8ல் காண்பதுபோல தோன்றும். 

'விண்டோஸ் 8ல் இருக்கும் சலுகைகள் சிலவற்றுடன் விண்டோஸ் 7ல் உபயோகிப்பதை போன்ற தோற்றத்தையும்' விண்டோஸ் 10 வழங்குகின்றன. இது வணிக பயனர்களுக்கு மாற்றம் செய்ய உதவும் வகையில் இருக்கும் என்று ஜோ பெல்ஃபோர்னி, விண்டோஸ் டிசைன் மற்றும் எவல்யூசன் மேற்பார்வையிடும் மைக்ரோசாப்ட் நிர்வாகி கூறியுள்ளார். 'எங்களது நிறுவனத்தின் மிகப்பெரிய ப்ளாட்ஃபார்மாக என்றுமே விண்டோஸ் 10 இருக்கும்' என்று டெர்ரி மையர்சன், மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் தலைவர், சான் பிரான்சிஸ்கோவில் ஓர் நிகழ்வில் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 நிறுவனங்களில் 20% மட்டுமே இடம் பெற்றுள்ளது என்று தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் ஃபாரஸ்டர் படி குறிப்பிடப்பட்டுள்ளது. 

மைக்ரோசாப்ட்டின் புதிய விண்டோஸ் வெளியிடப்படும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், நிறுவனத்தின் மற்ற நிர்வாகிகள் 2015ம் ஆண்டு இளவேனிற்காலத்தில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர். யூசர்கள் புதன்கிழமை முதல் தொழில்நுட்ப முன்னோட்டத்தை மைக்ரோசாப்ட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவனத்திற்கு கருத்துகளை வழங்கலாம். 

டெஸ்க்டாப், எக்ஸ்பாக்ஸ், ஸ்மார்ட்போன், டேப்ளெட் போன்ற அனைத்திலும் விண்டோஸ் 10 பயன்படுத்த முடியும். இந்த புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் ஆப்ஸ் எந்தளவு இருக்கும் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. ஆப்ஸ்களை எளிதாக வைத்துக்கொள்வதோடு மல்டி டெஸ்க்டாப் வசதயும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, August 19, 2014

விண்டோஸ் 9 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள்

விண்டோஸ் 9 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள், பல்வேறு ஊடகங்கள் வழியாகக் கசிந்து கொண்டுள்ளன. விண்டோஸ் 8, தொழில் நுட்ப ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், மக்களின் பழகிப்போன செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறாக இருந்ததால், அவ்வளவாக எடுபடவில்லை. தோல்வியையே சந்தித்ததால், மக்கள் ஏமாற்றமடைந்த பல விஷயங்களை, வரும் விண்டோஸ் 9 சிஸ்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்துவிட முடிவெடுத்துள்ளது. 

Threshold என்ற குறியீட்டுப் பெயருடன், விண்டோஸ் 9 வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக Charms Bar நீக்கப்படும் என்று தெரிகிறது. வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கும் Start menu தரப்பட உள்ளது. விண்டோஸ் அப்ளிகேஷன் புரோகிராம்களுடன், மெட்ரோ அப்ளிகேஷன்களும் டெஸ்க்டாப்பில் காட்டப்படும். இரண்டும் இயங்கும். நிச்சயமாக, வாடிக்கையாளர்களின் மிகப் பிரியமான இயக்க முறைமையாக இது இருக்கும் என தெரிகிறது. 

ஆனால், சார்ம்ஸ் பார் இயக்கம், டேப்ளட் பி.சி.க்களில் விரும்பப்ப் படுவதால், அதற்கான இயக்கத்தில் சார்ம்ஸ் பார் தொடரும். எனவே, பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 9, மக்களின் விருப்பங்களுக்கேற்ப செயல்படும் ஒரு சிஸ்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. விண்டோஸ் 9 சிஸ்டம், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அம்சங்களைக் காட்டிலும், விண்டோஸ்7 அம்சங்கள் அதிகம் கொண்டதாக அமையலாம். 
  O9qXJrA.jpg

புதிய முயற்சியாக, விண்டோஸ் 9 சிஸ்டத்தில், விர்ச்சுவல் டெஸ்க்டாப் (virtual desktop) அமைத்து இயக்குவதற்கான வசதிகள் தரப்பட இருக்கின்றன. தற்சமயம், மேக் ஓ.எஸ். மற்றும் உபுண்டு இயக்கங்களில் இந்த வசதி கிடைக்கிறது. 

விர்ச்சுவல் டெஸ்க்டாப் மூலம், நாம் வெவ்வேறு வகையிலான டெஸ்க்டாப்களை உருவாக்கலாம். இவை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டிருக்கலாம். இரண்டிலும் மாறி மாறி இயங்கலாம். எடுத்துக் காட்டாக, ஒரு டெஸ்க்டாப்பில் உங்கள் நிறுவனப் பணிகளுக்கான அப்ளிகேஷன்களை வைத்து இயக்கலாம். 

இன்னொன்றில், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் பெர்சனல் விஷயங்களுக்கானதாக அமைத்துக் கொள்ளலாம். இதிலிருந்து, டேப்ளட் பி.சி.க்களில் நன்றாக இயங்கிய சிஸ்டத்தினை, பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் விரும்பி இயக்கப்படும் என மைக்ரோசாப்ட் எண்ணி, விண்டோஸ் 8 கொண்டு வந்த்து தவறு என அது உணர்ந்து, தற்போது நிலைமையை மாற்றி, புதிய விண்டோஸ் 9 சிஸ்டத்தில் கொண்டு வரத் திட்டமிடுவது தெரிகிறது. 


விரைவில் விண்டோஸ் 9 இயக்கத்தின் சோதனை பதிப்பு வெளியிடப்படலாம்

Monday, August 11, 2014

பென் ட்ரைவில் இருந்த கோப்புகளைக் காணோமா?

படிப்பின் தேவைக்கோ பணியின் தேவைக்கோ பென் ட்ரைவ்களையும், எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க்குகளையும் பயன்படுத்துகிறோம். நாம் அவற்றைப் பல கணினிகளிலும் மடிக்கணினிகளிலும் பயன் படுத்துவோம். அப்போது நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்திவிடுவோம்.

பல நாட்கள் உழைத்துச் சேகரித்த ஆவணங்கள் உள்ளிட்டு பெரும்பாலும் நமது அதிமுக்கியமான கோப்புகளை நாம் பென் ட்ரைவ்களில் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றைப் பயன்படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவைச் சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த கோப்புகள் எல்லாம் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட் கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.

ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள எல்லாம் போய்விட்டது என்று முடிவு செய்துவிடுவார்கள். அதனால் பென் ட்ரைவை பார்மெட்கூட செய்துவிடுவார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்று தலையில் கை வைத்து அமர்வார்கள்.கவலை வேண்டாம்.இழந்த கோப்புகளை மீட்டெடுக்க ஒரு வழி இருக்கிறது.

முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS promptக்குச் செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி, அந்தக் குறிப்பிட்ட ட்ரைவிற்குச் செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் (நாம் இழந்ததாக கருதிய) அனைத்து கோப்புகளும் hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? DOS prompt -ல் இருந்து கொண்டு,

Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையைக் கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புகள் மீட்கப்பட்டுவிடும். பிறகு தேவையற்ற ஷார்ட் கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்.

Thursday, August 7, 2014

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில்.

என்ன ஆபத்துகள்?

1.யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.

2.உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும். 

3.கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.

4.உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

5.உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

எப்படி தவிர்க்கலாம்?


உங்களது வாட்ஸ்அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம். குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

முடிந்தவரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்.

உஷார் தோழிகளே!

விகடன் நாளிதழில் வெளிவந்தது. 

Wednesday, August 6, 2014

ஹார்ட் ட்ரைவ்கள் நீண்ட நாள் உழைக்க

நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கினையே இழக்க வேண்டி வரும்.

ஒரு ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் குறைந்திடப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நாம் எதனை நம் அளவில் தவிர்க்கலாம் அல்லது சரி செய்திடலாம் என இங்கு பார்க்கலாம்.

நாமாக ஏற்படுத்தும் சேதம்: 

bMqp4iZ.jpg


ஹார்ட் டிஸ்க் ஒன்றை முற்றிலுமாகப் பயனற்றுப் போகச் செய்வது அதில் நாமாக ஏற்படுத்தும் சேதம் தான். நாமாக எப்படி சேதம் ஏற்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க் தான், மிகப் பத்திரமாக ஒரு மூடப்பட்ட, உறுதியான அலுமினியம் டப்பாவில் அடைக்கப்பட்டு உள்ளதே. காற்று கூடப் போகமுடியாதபடி அல்லவா இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். நாம் எண்ணுவதெல்லாம் சரிதான். ஆனால், ஹார்ட் டிஸ்க்கில் தான், அதன் செயல்பாட்டின் போது, நகரும் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நகரும் பகுதிகள் எல்லாம், மிகவும் சிறிய தவறான அசைவில் கூட கெட்டுப் போகும் வாய்ப்பு கொண்டவை. ஹார்ட் ட்ரைவ் செயலாற்றுகையில், வேகமாகச் சுழலும். அப்போது ஏற்படும் சிறிய அதிர்ச்சி கூட அதற்குப் பிரச்னையைத் தரும். சுழலாத போதும் அதிர்ச்சி தரும் வகையில் அதன் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடாது. அப்படியானல், அதனை எப்படி பாதுகாக்கலாம்? 

கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் ஒன்றை இன்ஸ்டால் செய்த பின்னர், அதனை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கக் கூடாது. அப்படி எடுப்பதாக இருந்தால், அதனை இன்னொரு கம்ப்யூட்டர் கேபினில் மாற்றி இணைப்பதற்காகத்தான் இருக்க வேண்டும். இதனை மிக மெதுவாகவும், விரைவாகவும், அதற்கேற்ற உபகரணங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கையில், அதனை அசைத்துப் பார்ப்பது கூடாது. வெளியே எடுப்பதாக இருந்து, எடுத்துவிட்டால், அதனைப் பத்திரமான ஓர் இட த்தில் வைத்துப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும். 

ஹார்ட் ட்ரைவ்களைப் பொறுத்தவரை, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ளவை தான், ஆபத்தினை விளைவிக்கும் சூழ்நிலைகளை அதிகம் எதிர் கொள்பவை ஆகும். இதற்காக, லேப்டாப் இயங்குகையில், அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளின் மீது நடப்பது போல நடக்க வேண்டாம். ஆனாலும், சற்று கூடுதலான எச்சரிக்கையுடன் அதனைக் கையாள வேண்டும். டேபிளின் மீதோ, அல்லது சுவர் மீதோ, இது மோதினால், பிரச்னை ஏற்பட்டு, அதில் பதியப்பட்டுள்ள டேட்டாவுக்குச் சேதம் ஏற்படலாம். அவை கரப்ட் ஆகலாம்.

 அதிக வெப்பம்: 


ஹார்ட் டிஸ்க்குகளின் பெரிய எதிரி, அவை சந்திக்கும் அளவிற்கு அதிகமான வெப்பம் தான். ஹார்ட் ட்ரைவ்கள் அனைத்துமே, ஒரு குறிப்பிட்ட அளவு வரையே உஷ்ணத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பவை ஆகும். இது அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் வகையைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு ஹார்ட் டிஸ்க்கும் எந்த அளவில் உஷ்ணத்தைத் தாங்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்குள்ளாகவே, அது சந்திக்கும் உஷ்ணநிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். 

இவ்வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை அதற்குத் தர வேண்டும். இந்த பாதுகாப்பான சூழ்நிலை என்பது, கம்ப்யூட்டர் ஷெல் வழியாக, காற்றானது நன்றாகச் சென்று வர வேண்டும். உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சரியாக இருக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட விசிறிகள் சரியான வேகத்தில் எப்போதும் சுழல வேண்டும்.

நாம் அமர்ந்திருக்கும் அறை, நாம் பணியாற்றத் தேவையான சரியான வெப்ப சூழ்நிலையைத் தந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதே சூழ்நிலை கம்ப்யூட்டர் மற்றும், அதன் உள்ளே இருக்கும் சாதனங்களுக்கும் கிடைக்கிறது என்று எண்ணக் கூடாது. 
இதனை உறுதி செய்திட, அவ்வப்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைக் கழற்றி, அதன் உள்ளே சென்று தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளின் சுழலும் தகடுகளில் தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். அவற்றின் சுழலும் வேகம் சரியாக இருப்பதனை உறுதி செய்திட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், குறைவான தூசி செல்வதையும், அதிகமான காற்று சென்று வருவதையும் உறுதி செய்திட வேண்டும்.


சிதறியபடி பதியப்படும் பைல்கள்:


 பைல்களைச் சிதறியபடி ஹார்ட் டிஸ்க்கில் பதிவது நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்காது. இருப்பினும், பைல் ஒன்று, பல துண்டுகளாக, பல இடங்களில் சேவ் செய்யப்பட்டிருந்தால், அதனைத் தேடும்போதும், படிக்கும் போதும், மேலும் எழுதும்போதும், ஹார்ட் டிஸ்க் தேவைக்கு அதிகமாகச் சுழன்று அதில் உள்ள டேட்டாவினைப் படிக்கவும் எழுதவும் முயற்சிக்கும்.

இதனால், ஹார்ட் டிஸ்க்கின் செயல்திறன் கூடுதலாகி, அதன் வாழ்நாள் குறையும் அபாயம் ஏற்படுகிறது. பைல் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தால், இந்த பிரச்னை ஏற்படாது. இந்த பாதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.

7mJMccU.gif
  
இதனை எப்படித் தீர்க்கலாம்? இதற்கான வழி defragmentation தான். இது NTFS வகை ட்ரைவ்களில் பெரிய பிரச்னையே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்டு வந்த FAT32 ட்ரைவ்களில் தீர்வு காண வேண்டிய பிரச்னையாகும். இத்தகைய ட்ரைவ்களை இன்னும் பயன்படுத்துவோர், கட்டாயம் அவர்களின் ஹார்ட் டிஸ்க்குகளை defragment செய்திட வேண்டும். இதற்கு இணையத்தில் நிறைய டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக, அடிக்கடி defragment செய்திடுவதும் தவறு. 

டிபிராக் செய்வதனால், கம்ப்யூட்டரின் செயல்பாடு கூடுதல் வேகத்தில் இருக்கும். பைல்களைக் கண்டறிவதும், அவற்றைக் கையாள்வதும் வேகமாக நடக்கும். மேலும், பெற இயலாத பைல்களைத் தேடிக் கண்டறிவதும் எளிதான செயலாக மாறும். 

அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும்


ஹார்ட் ட்ரைவினைப் பொறுத்தவரை அதனை பூட் செய்வதும், ஷட் டவுண் செய்வதுமே அதற்கு அதிக சிரமம் தரும் செயலாகும். அடிக்கடி அதனைச் சுழலவிடுவதும், சுழல்வதைத் திடீரென நிறுத்துவதும், ஹார்ட் டிஸ்க்கினை விரைவில் கெட்டுப் போக வைத்திடும். 

இதில் நமக்குச் சிக்கலான ஒரு சூழல் ஏற்படுகிறது. எந்நேரமும் ஹார்ட் டிஸ்க்கினை இயக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதற்காக, அதனை அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும் அதற்குக் கேடு விளைவிக்கும். இரண்டிற்கும் இடையேயான பாதுகாப்பான கோடு எதுவாக இருக்கும்? இப்போது கம்ப்யூட்டரை standby அல்லது hibernation என இரு நிலைகளில் வைக்கும் வசதி உள்ளது. 

குறைந்த நேரம் நீங்கள் கம்ப்யூட்டரை விட்டுச் செல்வதாக இருந்தால், இந்த இரு நிலைகளில் ஒன்றில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதிக நேரம் எனில், கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்வதே நல்லது. அதாவது ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக நிறுத்துவது இங்கு விரும்பத்தக்கது.


மின்சக்தியில் ஏற்றத் தாழ்வு: 
jce6F6A.jpg


மின்சாரம் நமக்கு எப்போதும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. அதன் பயன்பாட்டு சக்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். இது மிகக் குறைவான நானோ செகண்ட் அளவில் ஏற்பட்டாலும், டிஜிட்டல் சாதனங்களில் பிரச்னையை ஏற்படுத்தும். 

கம்ப்யூட்டருக்குச் செல்லும், மின்சார ஓட்டத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தால், அது நிச்சயம் ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்கும். இதனை ஆங்கிலத்தில் surges என்று சொல்வார்கள். இதிலி ருந்து ஹார்ட் டிஸ்க்கினை எப்படிப் பாதுகாக்கலாம்? சர்ஜ் ப்ரடக்டர் (surge protector) என்னும் பாதுகாப்பு சாதனம் இதற்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இவை, மின்சக்தி ஓட்டத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உடனுடக்குடன் கண்டறிந்து, அவற்றை இந்த சாதனங்களுக்குக் கடத்தாமல் திருப்பி விடும் வேலையை மேற்கொள்கின்றனர். நம் கம்ப்யூட்டரையும், ஹார்ட் டிஸ்க்கினையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், இது போன்ற ஒரு சர்ஜ் புரடக்டரை வாங்கி இணைப்பது நல்லது.

மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும் வாய்ப்புகள் ஏற்படும். இருப்பினும் இந்த தகவல்களைத் தெரிந்து கொண்டு, அவற்றிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது

இணையத்தில் படித்தது.