சில வருடங்களுக்கு முன் சினிமாவிலும், சின்னத்திரையிலும் இங்கொன்றும்,
அங்கொன்றுமாக முகம் காட்டிய ஜெபி எனும் ஜெய்பாலா நடித்து இயக்கி இருக்கும்
திரைப்படம் தான் ‘நுகம்’. இப்பட நாயகியரில் ஒருவரான இனியாவும், சுருதி
எனும் பெயரில் சுற்றி வந்த ஆரம்ப நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம், கஞ்சா
கருப்பு காமெடி மார்க்கெட்டில் இருந்தபோது உருவான திரைப்படம்... என
இன்னும் பல சிறப்புகளை(?) கொண்ட திரைப்படம் தான் ‘நுகம்’!
கதைப்படி ஜெய்பாலாவும், இன்னொரு நாயகர் விஜயகுமாருக்கும் இந்தியா வல்லரசு ஆவது பிடிக்காத அயல்நாட்டு சதிகாரர்களின் கையாட்கள்! காசுக்கு ஆசைப்பட்டு மத்திய அமைச்சர் ஒருவரை கொல்ல குறிவைக்கும் இருவருக்கும், இந்தியா வந்ததும் மத்திய அமைச்சரை கொல்ல வேண்டாம், ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல வேண்டும் என்று ‘அசைமென்ட்’ மாற்றி தரப்படுகிறது. ஜெய்பாலா அதற்கு உடனடியாக ஓ.கே. சொல்கிறார். இனியாவை காதலிக்கும் விஜயகுமார், அவர் மீதான காதலால் இதற்கு நோ சொல்கிறார். இதனால், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு எழுகிறது. அதனால் ஒருவரை ஒருவர் தீர்த்து கட்ட துணிகின்றனர். ஜெய், கதிர் எனும் விஜயகுமாரை கொன்றாரா? விஜய், ஜெய்யை கொன்றாரா? என்னும் கதையுடன், சுரேஷ் எனும் இளைஞரின் யாழினி - பீரித்தி மீதான காதலையும் அவர்கள் மீதான ஜெய்யின் காமத்தையும், குரோதத்தையும் கலந்து கட்டி இந்திய நகரங்களையும் படம்பிடித்து காட்டி, வெடிகுண்டு சம்பவங்களுக்கு வெடிகுண்டு வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜெபி. ஆனால் அந்த குண்டு நமத்து போனதது தான் நகைச்சுவை!
ஜெய்யாக ஜெய்பாலா, கதிராக விஜயகுமார், சுரேஷாக சுரேஷ், பாண்டியனாக கார்த்தி, மக்கள் நல விரும்பியாக கஞ்சா கருப்பு, யாழினியாக ப்ரீத்தி இவர்களுடன் இனியாவும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட முயன்று அதில் பாதி வெற்றி அடைந்திருக்கின்றனர். இனியா, இப்படத்தின் விளம்பரங்களில் இடம் பிடித்த அளவிற்கு கூட இப்படத்தின் பாத்திரத்தில் இல்லாதது ஏமாற்றம்!
டி.ஜே.கோபிநாத்தின் பின்னணி இசை ஓ.கே. ஈ.கே.ரமேஷின் ஒளிப்பதிவு டபுள் ஓ.கே. ஜெபியின் எழுத்து-இயக்கத்தில் ஆயிரம்பேரை கொல்லத்திட்டமிடும் ஜெய், உடன் இருக்கும் கதிரை தீர்த்துகட்ட ஆள் தேடுவது உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நுகத்தை ரசிகர்கள் நுகரலாம்!
ஆகமொத்தத்தில் ‘நுகம்’ தங்களை கேவலப்படுத்தியதாக தீவிரவாதிகளை கேஸ் போட வைக்கும் ‘ரகம்!’ ஹீ... ஹீ...!!

No comments:
Post a Comment