பார்வையற்றவர்கள் பிசிஓ நடத்துவதைப்
பார்த்திருப்பீர்கள். பழைய பிய்ந்து போன நாற்காலியின் பிளாஸ்டிக்
வயர்களுக்குப் பதிலாக புதிய பிளாஸ்டிக் வயர்களைப் பின்னுவதைப்
பார்த்திருப்பீர்கள். ஆனால் பிபிஓ என்றழைக்கப்படும் பிஸினஸ் புராசஸ்
அவுட்சோர்சிங்கில் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? மதுரையில் கிட்டத்தட்ட நாற்பது பார்வையற்றவர்கள் பிபிஓ-வில் வேலை செய்கிறார்கள். இந்த பிபிஓ - வை
நடத்திக் கொண்டிருக்கிறார் அப்துல் ரகீம். பார்வையற்றவர்களைப் படிக்க
வைத்து, பயிற்சி கொடுத்து, வேலையும் கொடுக்கும் அவரிடம் பேசினோம்:
""எனது தந்தை எஸ்.எம்.ஏ.ஜின்னா இளமையிலேயே பார்வையிழந்தவர். அவர் தனது கடின உழைப்பால் படித்து முன்னுக்கு வந்தாலும், தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக 1985 ஆம் ஆண்டிலேயே "இந்தியன் அசோசியேசன் ஃபார் பிளின்ட்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பார்வையற்றவர்களுக்கான உயர்நிலைப் பள்ளி ஒன்றை 1992 இல் தொடங்கினார். அங்கே பயிலும் மாணவர்களுக்கு கல்வி, தங்குமிடம், உணவு எல்லாம் இலவசம். பிளஸ் டூ படித்ததும் அவர்களை வெளியே அனுப்பிவிடாமல், அவர்களைக் கல்லூரியிலும் படிக்க வைக்கிறார். மதுரையில் உள்ள 13 கல்லூரிகளில் எங்களுடைய மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களை வேன் மூலம் கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறோம். இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் எங்களுடைய பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் படிக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் ஆகும் செலவுகளை எங்களுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் மூலம்தான் சமாளிக்கிறோம்.
படிக்க வைத்தால் மட்டும் போதுமா? படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டுமே..! பார்வையற்றவர்களுக்காக முதலில் நாங்கள் டைப் ரைட்டிங், ஸ்டெனோகிராபி, கூடை பின்னுதல், சேர் பின்னுதல், தையல் தொழில் போன்றவற்றுக்குத்தான் பயிற்சிகளைத் தந்து கொண்டிருந்தோம். ஆனால் இந்தத் தொழில்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவு. எனவே வேலை வாய்ப்புள்ள - அதே சமயம் பார்வையற்றவர்கள் செய்யக் கூடிய தொழில் ஒன்றைத் தேடும்போதுதான், பிபிஓ தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது.
நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்பதால், பிபிஓ தொடங்கி நடத்த முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.
2010 ஆம் ஆண்டு இரண்டு பேரை வைத்து பிபிஓ தொடங்கினோம். டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர் சர்வீஸ்களை நாங்கள் பிபிஓ - வில் செய்து கொடுக்கிறோம். உதாரணமாக டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவதுதான் இங்கு வேலை. கஸ்டமருக்கு போன் செய்து, அவர்களுடைய குறைகளைத் தெரிந்து கொள்வது, ஒரு பிளானிலிருந்து வேறொரு பிளானுக்கு கஸ்டமர் மாறினால் ஏன் மாறினார்கள்? என்று தெரிந்து கொள்வது, இந்தத் தேதியில் நீங்கள் பில் கட்ட வேண்டும் என்று கஸ்டமருக்கு நினைவுபடுத்துவது போன்ற வேலைகள் எங்கள் பிபிஓவில் நடைபெறுகின்றன. தினமும் 200 வாடிக்கையாளர்களுடன் பேச வேண்டும்.
இந்த பிபிஓ வேலையை எங்களால் படிக்க வைக்கப்பட்ட பார்வையற்ற பட்டதாரிகள், இன்ஜினியர்கள், பிளஸ் டூ படித்தவர்கள் செய்கிறார்கள். இந்த வேலையைச் செய்வதற்கான பயிற்சிகளை நாங்கள் தருகிறோம். வாடிக்கையாளரிடம் போனில் பேசிய பின்பு, வாடிக்கையாளர்கள் சொன்னதை ப்ரெயில் முறையில் அவர்கள் எழுதி வைப்பார்கள். அவ்வாறு எழுதி வைக்கப்பட்டவற்றை பார்வையுள்ளவர்கள் படிக்கும் வடிவத்துக்கு மாற்றி, எங்களுடைய வாடிக்கையாளர்களான டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுப்பிவிடுவோம்.
இதில் ஒரு பிரச்னை வந்தது. வழக்கமான பிபிஓ - க்களில் ஒரு நாளுக்கு ஒருவர் 130 முதல் 140 அழைப்புகள் வரை பேசுவார்கள். ஆனால் பார்வையற்றவர்கள் வெறும் 70 அழைப்புகள் வரைதான் பேச முடிந்தது. இதற்குக் காரணம், ப்ரெயில் முறையில் எழுதி, பின்பு அவற்றை நார்மல் வடிவத்துக்கு கொண்டு வருவதால் ஏற்படும் தாமதம்தான்.
இந்த பிபிஓ நிறுவனத்தைத் தொண்டு என்ற அடிப்படையில் நாங்கள் நடத்தினாலும், போட்டி நிறைந்த உலகில் பிற பிபிஓக்களை விட நாங்கள் சிறப்பாக நடத்த வேண்டிய தேவை உள்ளது. அப்படி நடத்தினால்தான் எங்களுக்குத் தொடர்ந்து நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்கள் கிடைக்கும். எனவே எங்களுடைய பழைய பிபிஓ செயல்முறைகளை மாற்றி அமைத்தோம்.
நாங்கள் அழைத்துப் பேச வேண்டிய டெலிகாம் நிறுவன வாடிக்கையாளர்களை டயல் செய்து அழைக்காமல், தானியங்கிமுறையில் அழைக்கும்படி ஏற்பாடு செய்தோம். இதனால் டயல் செய்யும் நேரம் மிச்சமானது.
அப்படிப் பேசும்போது கிடைக்கும் தகவல்களை ப்ரெயில் முறையில் எழுதாமல், கம்ப்யூட்டரில் டைப் அடிக்கப் பயிற்சி கொடுத்தோம். இதனாலும் நிறைய நேரம் மிச்சமானது. மற்ற பிபிஓ - இன் செயல்திறனைப் போலவே எங்களுடைய பிபிஓவின் செயல்திறனும் வளர்ந்தது. இதனால் எங்களுடைய பிபிஓ - வை லாபகரமாக நடத்த முடிந்தது. பார்வையற்றவர்களை வைத்து பிபிஓ நடத்தும்போது, சில சிறப்பான நல்லனவும் எங்களுக்குக் கிடைத்தன.
பிற பிபிஓ - களில் வேலை செய்பவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்கள் கூட ஒரு பிபிஓ வில் வேலை செய்யமாட்டார்கள். அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் எங்களுக்கு அப்படிப்பட்ட பிரச்னைகள் இல்லை.
எங்களுடைய பிபிஓவில் வேலை செய்யும் பார்வையற்றவர்களிடம் ஏதாவது ஒரு விஷயத்தை ஒரு முறை சொன்னால் போதும், "டக்'கென்று பிடித்துக் கொள்வார்கள். அவர்களுடைய கிரகிக்கும் திறன் மற்ற மனிதர்களை விட பல மடங்கு அதிகம். பார்வையற்றவர்களின் இந்தத் திறன் காரணமாக, நாங்கள் பிற பிபிஓ - களை விட மிகச் சிறப்பாகச் செயல்பட முடிகிறது.
பார்வையற்றவர்கள் என்பதால் எங்களிடம் வேலை செய்பவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுப்பதில்லை. எல்லா பிபிஓ நிறுவனங்களிலும் என்ன சம்பளம் தருகிறார்களோ, அதே அளவு சம்பளத்தை நாங்களும் கொடுக்கிறோம். எனவே எங்களிடம் வேலை செய்பவர்கள் சம்பளம் வாங்கி அதை வைத்து மேற்படிப்பு படிக்க முடிகிறது. கடன்களை அடைக்க முடிகிறது. திருமணம் செய்து கொள்ள முடிகிறது.
எங்களுடைய பிபிஓவில் வேலை செய்பவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள். நான் சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்பதால், நிறுவனத்தின் தொழில் நுட்ப பணிகளை நான் கவனித்துக் கொள்கிறேன்'' என்கிறார் அப்துல் ரகீம்.

No comments:
Post a Comment