Blogger Widgets

Total Page visits

Wednesday, February 6, 2013

Protecting Gmail account





மின்னஞ்சல் பயன்பாட்டில் அன்று முதல் இன்று வரை கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் மட்டுமே முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் சில முக்கிய தொடர்புகளுக்கு கூட ஜிமெயில் பயன்படுத்துவார்கள்.

ஆனால் உங்களின் GMAIL தகவல்கள் திருடப்பட்டால் என்ன செய்வீர்கள்?.இதற்காக ஜிமெயில் தளத்தில் வசதி கிடைக்கிறது. இதுLast account activityஎன அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.



கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி..பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த .பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.

வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு .பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக் கின்றன

இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாகLast account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.

இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன், பி..பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது. இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

எடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்

அடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து .பி. முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான .பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது

உங்களுடைய .பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு .பி. முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் .பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, 203.117xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும். அதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய .பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர் களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்

தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான .பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.

நம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள் http://www.google.com/goodtoknow/online-safety/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும்.

அன்பை தேடி அன்பு எனும் வலைப்பூவில் இருந்து இத்தகவல் பகிரபடுகிறது

www.anbuthil.com

No comments: