Blogger Widgets

Total Page visits

161122

Tuesday, February 12, 2013

ACID ATTACK VICTIM VINODHINI'S LAST VOICE




காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினோதினி (23). இவரை ஒருதலையாக காதலித்த சுரேஷ் என்ற வாலிபர், தமது காதலை ஏற்க மறுத்ததால், அவர் மீது ஆசிட் வீசினார்.

இத்தாக்குதலில் வினோதினியின் முகம், கை, தோள் முழுவதும் பாதித்தது.2 கண்களிலும் பார்வை இழந்த அவர் கடந்த 3 மாதமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு எப்படியும் உயிர் பிழைத்து வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த டாக்டர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று வினோதினிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இன்று காலை சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிர் இழந்தார். அவர் இறந்ததை கேள்விப்பட்டதும் பெற்றோர் கதறி துடித்தனர். வினோதினியின் பரிதாப மரணத்தை அறிந்து பொது மக்களும் கண்ணீர் வடித்தனர். 3 மாதமாக உருக்குலைந்த மகளின் அருகே நம்பிக்கையுடன் காத்திருந்த பெற்றோர் உயிரற்ற மகளின் வெற்றுடலோடு ஊர் திரும்புகிறார்கள்.

No comments: