கடந்த சில வருடங்களாக க்லவுட் கம்பியூட்டிங் (Cloud Computing /ஆகாயக் கணினி) எனும் வார்த்தை தகவல் தொழில் நுட்பத் துறையில் உலவுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். (கேட்காமலும் இருந்திருக்கலாம்). இந்தக் க்லவுட் கம்பியூட்டிங் எனப்படுவது அடிப்படையில் கணினித் தொழில் நுட்பத்தின் மத்திய நிலையமாக இணையத்தைப் பயன்படுத்துவதையே குறிக்கிறது.
மின்னஞ்சல் ஒன்றை ஒரு நண்பருக்கு அனுப்பிய பிறகு அதனை அவர் பெறும் வரையில்
அந்த மின்னஞ்சல் எங்கு தங்கியிருக்கும் என ஒரு ஒரு முறை என் மாணவர்களிடம்
கேட்டேன். அப்போது ஒரு மாணவன் அந்த மின்னஞ்சல ஆகாயத்தில் மேகம் போல்
சஞ்சரித்துக் கொண்டிருக்கும் என்றான். அவன் சொன்ன பதில் அப்போது எனக்கு
நகைப்புக்குரிய
விடயமாகத் தெரிந்தாலும் இன்றைய ஆகாயக் கணினி எனப்படுவது அவனது கற்பனையுடனும் ஒத்திருப்பதை நான் இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
நாம் அனுப்பிய மின்னஞ்சல் உலகில் எங்கேயோ உள்ள ஒரு அன்றாட கணினி பயன் பாட்டின்போது எமக்குத் தேவையான எப்லிகேசனை எமது கணினியில் நிறுவாமலேயே இணையம் வழியே அந்த சேவையைப் பெறுவதையே ஆகாயக் கணினி எனப்படுகிறது.
நீங்கள் ஜிமெயில், கூகில் கேலண்டர், யாஹூ போன்ற இணைய சேவைகளைப் பயன் படுத்துகிறீர்கள் என்றால் நீங்களும் கிலவுட் கம்பியூட்டிங் பயன் படுத்துகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் க்லவுட்
கம்பியூட்டிங் சேவையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்த சேவைகளை நீங்கள் பெறும் போது உலகில் எங்கோ ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள சேர்வர் கணினித் தொகுதியோடு இணைந்து கொள்கிறீர்கள். .
உதாரணமாக மின்னஞ்சலை எடுத்துக் கொள்ளுங்கள். மின்னஞ்சலை
பொப் மெயில், வெப் மெயில் என இரு வகைகள் உள்ளன. பொப் மெயிலை அணுகுவதற்கு
எமது கணினியில் அதற்குரிய விசேட மென்பொருளை நிறுவ வேண்டும். எமது
கணினியிலிருந்து மாத்திரமே அதனை அணுகலாம். ஆனால் ஜிமெயில், யாகூ போன்ற வெப்
மெயில்
சேவைகளை அணுகுவதற்கு விசேட மென்பொருள் எதனையும் நிறுவ வேண்டியதில்லை. அதனை வெப் பிரவுசர் மூலம் இணைய இணைப்புள்ள எந்த ஒரு கணினியிலிருந்தும் உலகின் எப்பகுதியிலிருந்தும்
அணுகக் கூடிய வசதியைப் பெறுகிறோம். இது ஆகாயக் கணினி என்பதற்கு ஒரு எளிமையான உதாரணமாகும். .நாம்
செல்லுமிடமெல்லாம் அகாயம் இருக்கிறது. எந்த ஊருக்குப் போனாலும் எந்த
நாட்டுக்குப் போனலும் அன்னாந்து பார்த்தால் நமது ஊரில் பார்த்த அதே ஆகாயம்
தான் நம் கண்ணில் தெரியும். அதே போன்றதுதான் இந்த ஆகாயக் கணினியும். நமது தனிப்பட்ட பைல்கள். அலுவலக பைல்கள் தேவையான எப்லிகேசன் மென்பொருள் என அனைத்தும் ஆகாயத்திலேயே’ இருப்பதால் நாம் எங்கு சென்றாலும் அவையும் நம்மைப் பின் தொடர்ந்து வரும். .
வணிக நிறுவனங்களில் கணினி வலையமைப்பைக் காட்டும் வரை படங்களில் இணையத்தைக் குறிப்பதற்கு “மேகம்” போன்று வரைந்து காண்பிக்கப்பட் டிருக்கும். இதிலிருந்தே இந்த க்லவுட் கம்பியூட்டிங் எனும் சொல் அறிமுகமானது.
தற்போது இணையம் சார்ந்த கணினி மென்பொருள் பயன்பாடு மிக வேகமக வளர்ச்சியடைந்துள்ளது.
ப்லோக் எனும் வலைப்பதிவு மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள்
மற்றும் பல ஒன்லைன் சேவைகளுக்குக் கிடைக்கப் பெற்று வரும் வரவேற்பு காரணமாக
க்லவுட் கம்பியூட்டிங் துறையின் பால் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களை
திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
2007 ஆம் ஆண்டுகளில் கூகில் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையுடன் வேர்ட் ப்ரோஸெஸ்ஸிங் (Word Processing), ஸ்ப்ரெட்ஸீட் (Spreadsheet), ப்ரசன்டேசன் (Presentation) போன்ற அலுவலக பயன்பாட்டுக்கான எப்லிகேசன்களை இணையம் வழியே பயன்படுத்தக் கூடிய வகையில் கூகில் டொக்ஸ் (Google Docs) எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது.. அதன் மூலம் அனைத்து அலுவலகக் கணினிப் பயன்பாட்டையும் ஆகாயக்
கணினிக்குள் அடக்கி விட்டு ஏனைய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவால் விட்டது. இதன் காரணமாக மைரோஸொப்ட், அடோபி போன்ற ஏனைய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் தனது அப்லிகேசன்களை ஆகாயத் துக்கே நகர்த்த வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது. மைக்ரோஸொப்ட் நிறுவனம் கலவுட் கம்பியூட்டிங் சேவையை Software as a Service எனப் பெயரிட்டது.
ஆகாயக் கணினியில் வணிக நிறுவனங்களுக்கான உட்கட்டமைப்பு சேவை Infrastructure as a Service (IaaS), மென்பொருள் உருவாக்குனர்களுக்கான இயங்குதள சேவை Platform as a Service (PaaS), மற்றும் வழமையான பயன் பாட்டு மென்பொருள் சேவை Software as a Service (SaaS) என பல் வேறுபட்ட சேவைகள் உள்ளன.
சாஸ்
எனபது ஆகாயக் கனினியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. சாதாரண கணினிப்
பயனர் இந்த சாஸ் எனும் சேவையே பயன் படுத்துகின்றனர். சாஸ் சேவையில்
எப்லிகேசன்கள் எதுவும் நமது கனினியில் நிறுவ வேண்டியதில்லை. அந்த சேவையை
வழங்கும் நிறுவன சேர்வர் கணினியிலேயே அவை நிறுவப்படுகிறது. இதன் காரணமாக
கணினியும் இணைய இணைப்பும் இருக்கும் பட்சத்
தில் எங்கிருந்தும் தேவையான எப்லிகேசனை
இயக்கலாம். அதாவது அன்றாட பயன் பாட்டிலுள்ள எப்லிகேசன் மென்பொருள்களை
இணையத்தினூடக வெப் பிரவுஸரைக் கொண்டே இயக்கக் கூடியதாயுள்ளது.
சாஸ் எப்லிகேசனுக்கு உதரணமாக கூகில் எப்ஸ் (Google Apps) தரும் அலுவலக பயன்பாட்டு மென்பொருள் சேவையான Google Docs, ஜிமெயில், கூகில் கேலண்டர், மற்றும் மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் Office Live போன்ற வற்றைக் குறிப்பிடலாம்.
இந்த சாஸ் சேவையில் உருவாக்கிய பைல்களையும் ஆகாயத்திலேயே சேமித்துக் கொள்ளலாம் அதனை ஓன்லைன் ஸ்டொரேஜ் (Online Storage) எனப்படும்.
இனிமேல்
உங்கள் பைல்களைக் காவிச் செல்ல சிடி வேண்டாம், பென் டரைவ் வேண்டாம்.,
உங்கள் தனிப்பட்ட பைல்கள் அலுவலக பைல்களை என அனைத்தையும் ஆகாயக் கனினியில்
ஏற்றி விட்டு எந்த ஊருக்கும் நடையைக் கட்டலாம். அலுவலகம் செல்லாமலேயே
அலுவலகக் கருமங்களை வீட்டிலிருந்தே செய்து முடிக்கலாம்.
அணமைக் காலங்களில் அனேகமான வணிக நிறுவனங்கள் தமது வணிக செயற்பாடுகள் அனைத்தையும் இணையம் சார்ந்ததகாவே (Web Based) மாற்றிக் கொண்டுள்ளன. அத்தோடு தமது வணிக தேவைகளுக்குப் பிரத்தியேகமாக சேர்வர் கணினிகளை நிறுவாமால் அதற்குப் பதிலாக ஆகாயத்துக்கே நகர்த்த ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக அவற்றைப் பராமரிக்கவும் அதிலுள்ள தகவல்களைப் பாதுகாக்கவும் ஏற்படும் செலவுகள் குறைக்கப்படுவதுடன் வாடிக்கையளர்களுக்கு விரைவான மற்றும் திருப்திகரமான சேவைகளையும் வழங்கக் கூடிய வசதி கிடைக்கிறது. க்லவுட் கம்பியூட்டிங் சேவை வழங்கும் ஒரு நிறுவனம் அடிப்படை சேவைகளை இலவசமாக வழங்கும். எனினும் அதன் மேம்பட்ட சேவைகளைப் பெறுவதற்குக் கட்டணம் அறவிடும்.
எதிர்காலத்தில் கணினிப் பயன்பாடு முற்று முழுதாய் இணையம் சார்ந்ததாகவே இருக்கப் போகின்றது. அதாவது நாளைய உலகை இந்தக் ஆகாயக் கணினியே.ஆளப்போகின்றன.
No comments:
Post a Comment