Blogger Widgets

Total Page visits

Saturday, February 16, 2013

கணிப்பொறி அறிவியல் மற்றும் ஐ.டி - வேறுபாடு என்ன?

வானியல் தொடர்பான படிப்பு என்பது எப்படி டெலஸ்கோப் தொடர்பானது அல்லவோ, அதேபோலவே, கணிப்பொறி அறிவியல் என்பது கணினி தொடர்பான படிப்பு அல்ல. கணிப்பொறி அறிவியல் பொறியாளர்கள், கம்ப்யூட்டிங் துறையின் பல அம்சங்களில், அதாவது, தனிப்பட்ட மைக்ரோப்ராசசர்(Micro processor) வடிவமைப்பு, தனிப்பட்ட கணினி மற்றும் சூப்பர் கணினி முதல், சர்க்யூட் டிசைன் மற்றும் மென்பொருள் எழுதுதல்(Software writing) போன்ற பணிகள் வரை ஈடுபடுகிறார்கள். மேலும் அவர்கள், ரோபோடிக் ஆராய்ச்சியிலும் ஈடுபட தகுதியுள்ளவர்கள். அந்தப் பணியானது, மோட்டார்கள் மற்றும் சென்சார்கள் போன்ற எலக்ட்ரிகல் அமைப்புகளை கட்டுப்படுத்தல் மற்றும் கண்காணித்தலுக்காக பயன்படுத்தும் டிஜிட்டல் அமைப்புகளை சார்ந்தது.

சேகரித்தல், பாதுகாத்தல், செயல்படுத்தல், கடத்துதல் மற்றும் பாதுகாப்பாக தகவல்களைப் பெறுதல் ஆகியவற்றுக்கு எலக்ட்ரானிக் கணினிகள் மற்றும் கணினி மென்பொருளை ஆகிய அம்சங்களோடு ஐ.டி. துறையானது சம்பந்தப்பட்டுள்ளது. ஐ.டி. என்பது ஒரு பொதுக் குறியீடு. உற்பத்தி, திறம்பட செயலாற்றுதல், சேகரித்தல் போன்ற செயல்களுக்குப் பயன்படும் எந்த தொழில்நுட்பத்தையும் இந்த பொது வார்த்தைக் குறிக்கும். பயன்பாடுகளை(Applications) நிறுவுவதிலிருந்து, சிக்கலான கணினி நெட்வொர்க் -கள் மற்றும் தகவல் தரவுகளை வடிவமைப்பது வரை பலவகைப் பணிகளில் ஐ.டி. நிபுணர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

தரவு(data) மேலாண்மை, நெட்வொர்க்கிங், பொறியியல் கணினி வன்பொருள்(engineering computer hardware), தரவுதளம் மற்றும் மென்பொருள் வடிவமைப்பு, முழு அமைப்புகளை மேலாண்மை செய்தல் மற்றும் நிர்வகித்தல் போன்ற பலவகைப் பணிகளுக்கு ஐ.டி. நிபுணர்கள் பொருத்தமானவர்கள்.

வேறுபாடுகள்
கணிப்பொறி அறிவியல் படிப்பானது, வழக்கமாக, எப்படி மைக்ரோ ப்ராசசர்களை கட்டமைப்பது மற்றும் தொகுப்புகளை(Compiler) எப்படி எழுதுவது என்பது பற்றியதாக இருக்கும். ஐ.டி. என்பது தரவு தளங்கள் மற்றும் அக்கவுண்டிங் தொடர்பான கணினிகளின் வணிகத்துறை சம்பந்தப்பட்டதாகும். ஐ.டி. என்பது நிஜ வாழ்க்கை செயல்பாடுகளில் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியது மற்றும் கணிப்பொறி அறிவியல் என்பது, அந்த செயல்பாடுகளை எளிதாக்கும் அறிவியல் பற்றியது.

கணிப்பொறி அறிவியல் என்பது கம்ப்யூட்டிங் செயல்பாட்டின் அடிப்படை மீது கவனம் செலுத்துகிறது. ஐ.டி. என்பது நிறுவனங்களுக்கு தேவைப்படும் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத் தேவையை நிறைவு செய்வதாகும். அதாவது, நடைமுறை சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்கு கம்ப்யூட்டிங் அறிவியல்களைப் பயன்படுத்துவதாகும். அதேசமயம், அந்த ஐ.டி. தொழில்நுட்பத்தின் அடிப்படை கணிப்பொறி அறிவியலில் உள்ளது. 

பல இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், கணிப்பொறி அறிவியல் அடிப்படையிலான ஐ.டி. பாடங்களைக் கொண்டுள்ளன. இதன்மூலம் அந்தப் படிப்பை முடிக்கும் பட்டதாரி, கணிப்பொறி அறிவியல் அல்லது ஐ.டி. ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாம். அதேசமயம், மாணவர்களை பணிக்கு தேர்வுசெய்கையில், இந்த இரு பட்டங்களுக்கிடையிலும் குறைந்தளவு வித்தியாசத்தையே கார்பரேட் நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன.

இந்தத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள், சிறந்த பயன்பாட்டு மேம்பாடு மற்றும் பராமரித்தலில் கவனம் செலுத்துகின்றன. எனவே ஒரு மாணவருக்கு, சிப்(chip) வடிவமைப்புக் கலை, இயந்திர நிலையிலான மொழிகள் போன்றவை கற்பிக்கப்பட்டாலும், மேற்கண்ட துறையில் பணி வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

பாடத்திட்டத்தின் சுருக்கம்

இந்த 2 துறைகளின் பாடத்திட்டங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு மாணவர் தெளிவாக அறிந்துகொள்வது சற்று சவாலான விஷயம்தான். IIT, IIIT மற்றும் NIT போன்ற முதல்நிலை உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட பல முக்கிய நிறுவனங்களில், கணிப்பொறி அறிவியல் அல்லது ஐ.டி. ஆகிய 2 பாடத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றுதான் இருக்குமே தவிர இரண்டும் இருக்காது. இதன்மூலம் என்ன தெரிகிறதென்றால், இரண்டுக்குமே சொல்லிக்கொள்ளுமளவு வித்தியாசம் இல்லை என்பதுதான். 

எனவேதான் ஒரேமாதிரியான இரண்டு பாடங்களை அந்த கல்வி நிறுவனங்கள் தங்களிடம் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. சில கல்லூரிகள் மட்டுமே இந்த இரண்டு பாடங்களுக்கிடையே மிகக் குறைந்தளவு வித்தியாசத்துடன் இரண்டையும் வழங்குகின்றன.

உதாரணமாக டெல்லி இந்திரப்பிரஸ்தா பல்கலையை எடுத்துக்கொண்டால், அதன் 7 பொறியியல் கல்லூரிகளிலும் சேர்த்து, இந்த 2 பாடங்களுக்கிடையில் ஒரே ஒரு பாடத்திட்ட அம்சம் மட்டுமே வேறுபடுகிறது. சில இடங்களில் 2 முதல் அதிகபட்சம் 5 வரை வேறுபடுகின்றன. ஆனால், வேலைவாய்ப்பை தரும் நிறுவனங்கள். இந்தப் படிப்புகளை படித்த மாணவர்களை பெரிதாக வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்பதை மாணவர்கள் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதி முடிவு

கணிப்பொறி அறிவியல் படிப்பதா? அல்லது ஐ.டி. படிப்பதா? என்ற குழப்பம் ஒரு மாணவருக்கு ஏற்பட்டால், அந்தப் படிப்பை விட, கல்லூரி எது என்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிறந்த கல்லூரியில் இந்த இரண்டில் எது இருந்தாலும் தாராளமாக சேர்ந்து விடலாம். அதேசமயத்தில் ஒரு சிறந்த கல்லூரியில் இந்த 2 படிப்புகளுமே இருந்தால், எதைப் படிக்கலாம் என்பதில் உங்களுக்கு அதிக குழப்பம் ஏற்படலாம். மேலே சொன்ன விளக்கங்களை வைத்து, எந்த பணிகளின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளதோ, அந்தப் படிப்பையே தேர்வுசெய்து கொள்ளுங்கள்.

நன்றி தினமலர் 

No comments: