கோவை: "நம்மை சுற்றிலும் உள்ள பொருட்களை
பற்றிய ஆர்வம் இருந்தால், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்,"
என, ரி-சாட்-1 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வளர்மதி பேசினார்.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்வி
நிறுவனத்தில், முதலாவது தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு,
"என்கோனெட்13&' நேற்று நடந்தது. துவக்க விழாவில், பெங்களூரு இஸ்ரோ
"ரி-சாட்-1&' திட்ட இயக்குனர் வளர்மதி பேசியதாவது:
விஞ்ஞானி ஆவதற்கும், தொழில்நுட்ப வல்லுனராகவும் கல்வியே
உதவுகிறது. கற்றலை மாணவர்கள் சிறப்பாக மேற்கொண்டால் விரைவாக முன்னேற
முடியும். அறிவியல் தொழில்நுட்பத்திலும், செயற்கை கோள்களை விண்ணில்
செலுத்துவதிலும் இந்தியா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. பல சிக்கலான
தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, ராக்கெட் ஒன்றை ஏவுவது மிகவும் கடினமான
பணி. நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக இருந்தால் மட்டுமே ஒரு செயற்கைகோள்
வெற்றி பெறும்.
இன்ஜினியரிங்,தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்,
நம்மை சுற்றிலும் உள்ள பொருட்களை பற்றியும், அவை எவ்வாறு இயங்குகிறது
என்பது பற்றியும் ஆய்வு செய்து, அவை இயங்கும் முறைகளை அறிந்தாலே
தொழில்நுட்ப அறிவு உயரும். இவ்வாறு, அவர் பேசினார்.
Published in dinamalar on 24.02.13
No comments:
Post a Comment