”99 முறை பெற்ற வெற்றியை கூட 100வது வெற்றியின் மூலம் தான் தக்க வைத்த்துக் கொள்ள முடிகிறது..! இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நம் வேகம் குறைந்தால் ஒரு பய மதிக்க மாட்டான், என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்..? சச்சின் சாதிச்சிட்டேப்பா...:-) ”
  
 
 

சச்சின் நூறாவது நூறு அடித்த மறு நொடி , என் முகப்புத்தக சுவற்றில் நான் எழுதியது ஸ்டேடஸ் இது.
ஒவ்வொரு
 சாதனையாளனுக்கு பின்னும், சொல்ல முடியாத எத்தனையோ வேதனைகள், சோதனைகள், 
அவமானங்கள், விம்மிக்கொண்டிருக்கும்..சச்சின் படைத்த சாதனையும் 
அப்படித்தான்...இன்று உலகமே அவரை ஒரு சாதனையாளராக கொண்டாடிக் கொண்டிருந்தாலும் அவர் வாழ்வின் ஆரம்ப நாட்களோ மிகவும் சோதனை நிறைந்தது.
·         1988 - பத்தாவது தேர்வில் தோல்வி.
·         1989 – இந்திய அணியில் இடம் பெற்று ஆடிய முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் 0 ரன்கள்.
.இப்படித்தான்
 சச்சினின் ஆரம்ப நாட்கள் இருந்தன. 1989 ஆண்டு அணியில் இடம் 
பெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவர் முதல் சத்த்தை அடித்தது 
1994-ல் தான். ஒரு சதத்தை எட்ட அவர் ஆறு வருடங்கள் போராட வேண்டியிருந்தது.
தொடர்
 தோல்விகள் அவரை பதப்படுத்தியதே ஒழிய பயம் கொள்ளச் செய்யவில்லை. அதன் பின் 
படிப்படியாக மின்ன ஆரம்பித்தார்...கிரிக்கெட் உலகின் மொத்த பார்வையும் அவர்
 மீது திரும்பியது.

”நான்
 ஆடுகளத்திற்குள் நுழையும் போது, நான் தான் முக்கியமானவன் என்று எண்ணிக் 
கொள்வேன். என் கையில் தான் இந்த ஆட்டம் இருக்கிறது. அணியை தூக்கி நிறுத்த 
வேண்டியது என் கடமை. என்று என்னை நானே தயார் செய்து கொள்வேன்...”
என் நினைவில் நிற்கும் சச்சினின் ஒரு பேட்டி இது.. இதை சொன்ன போது சச்சின், இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய ஆள் ஒன்றும் இல்லை... ஆனால் அந்த நம்பிக்கை நாளாக நாளாக உண்மையானதென்னவோ மறுக்க முடியாத உண்மை.
சச்சினின்
 சாதனைகளை பட்டியலிட்டு சென்றால், இந்த கட்டுரை 100 பகுதிகளைத் தாண்டிப் 
போகும். உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒர் இந்தியனாக தனக்கென்று ஒர் இடத்தை 
தக்க வைத்துக் கொள்வதே பெரும் சாதனை என்ற நிலையில், அந்த பட்டியலில் முதல் 
இடத்தைப் பிடித்து, தலைக்கனமில்லாத ஒரு சிறந்த வீரர் சச்சின் என்றால் 
மிகையில்லை.

சச்சின் வெற்றியாளராக மிளிர்ந்த வேளை கூட, ஊடகங்கள் அவரை விட வில்லை.
 அவரை இட்டுக்கட்டி எழுதி, ஒரு கேவலமான விளம்ப்ரங்களைத் தேடிக் கொண்டது. 
அதில் ஒன்று, அவர் சதம் அடித்தால், இந்திய அணி தோற்று விடும் என்ற அறிவியல்
 உண்மை. ஆனால் உண்மை அப்படி இல்லை.
ஒரு
 நாள் போட்டிகளில் ச்ச்சின் அடித்த 49 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய 
அணி 34 முறை வெற்றிகளையும், 13 முறை தோல்விகளையும், இரண்டு டிராக்களையும் 
பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 70% போட்டிகளில் இந்தியா மகத்தான 
வெற்றியை பெற்றது என்பதே, புள்ளி விபரம்.
இது
 போன்று டெஸ்ட் தொடர்களில் இதுவரை,  சச்சின் அடித்த 51 சதங்கள் நிறைந்த 
போட்டிகளில் இந்திய அணி, 20 வெற்றிகள், 11 தோல்விகள் மற்றும் 20 
டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 78% போட்டிகளில் 
இந்தியா தோல்வியை தவிர்த்துள்ளது.
இதையே
 சச்சின் சதமடித்தால் இந்தியாவிற்கு தோல்வி தான் என்று ஊடகப் 
பகுத்தறிவாளர்கள்(!!?) பரப்பி வருவது...உண்மைக்குப் புறம்பானது.என்பதை 
எத்தனை பேர் அறிவர்..?

அதிலும்
 100வது சதத்தை அடிக்க, அவருக்கு ஊடகங்கள் கொடுத்த நெருக்கடி கொஞ்சம் 
நஞ்சமில்லை...சச்சின் அவ்வளவு தான்..அவரால் இந்த சாதனையை நிகழ்த்த 
இயலாது...இப்படி அவரை மனதளவில் பாதிக்க முயன்றோர் ஏராளம்..கடைசியில் ”அது” நிகழ்ந்து விட்டது.
நான் கிரிக்கெட் கடவுள் அல்ல, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த 22 ஆண்டுகளை கடந்த பிறகும், கிரிக்கெட் கடவுள் என்னை கடந்த ஒராண்டாக சோதித்து வந்ததாக கருதுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்த சாதனையை எண்ணி பல முறை மனம் வெறுத்திருக்கிறேன். ஆனால் அதனால் சோர்ந்து போனதில்லை.
அது போன்ற சாதனைகளை கடப்பது அவ்வளவு
 எளிதல்ல. சாதனைகளை கடப்பவர்களுக்கு மட்டுமே அதன் கஷ்டம் எப்படிப்பட்டது 
என்பது தெரியும். நான் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் 
ஆடவில்லை. சாதாரணமாக ஆடும் போது சாதனைகளையும், மைல்கல்களையும் கடக்க முடிகிறது. எத்தனை சதங்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அணியின் நலனே முக்கியம்.
இளைஞர்கள் கனவுகளை துரத்த வேண்டும். கனவு நிச்சயம் நிறைவேறும். எனது கனவு 22 வருடங்களுக்கு பிறகு உலககோப்பையை வென்றபோதுதான் நிறைவேறியது. 
தன் நூறாவது சதத்திற்கு பிறகு சச்சின் கொடுத்த பேட்டி இது.
பங்களாதேசத்திற்கு
 எதிராக சச்சின் நூறு ரன்களைத் தொட்டு விட்டு, வானத்தை நோக்கிப் பார்த்து 
ஒரு பெரு மூச்சு விட்டார்...அந்த மூச்சிக் காற்றில் அவரைப்பற்றிய அவதூறுகள்
 பொசுங்கிப் போயிருக்கும்...
 


No comments:
Post a Comment