புதுடில்லி: "மொபைல் பிரீ - பெய்டு சந்தாதாரர்களின், பயன்பாட்டில்
இல்லாத இணைப்புகளை, 20 ரூபாய்க்கு மேல் இருப்பில் இல்லை என்பதற்காக,
துண்டிக்க கூடாது' என, டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு, "டிராய்'
உத்தரவிட்டுள்ளது. மேலும், செயல்படாமல் இருப்பதற்கான காலத்தை, 90 நாட்களாக
நிர்ணயித்துள்ளது. மொபைல் போன், பிரீ - பெய்டு சந்தாதாரர்கள், 20 கோடி
பேரின் இணைப்புகள், சராசரியாக, 6 ரூபாய் இருப்புடன், 30 நாட்களாக
செயல்படாமல் இருந்ததற்காக, துண்டிக்கப்பட்டது.
இதை கவனத்தில்
எடுத்துக்கொண்ட, "டிராய்' என்ற மத்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்,
மொபைல் போன், பிரீ - பெய்டு சந்தாதாரர்களை, மகிழ்விக்கும் வகையில், புதிதாக
விதிமுறைகளை மாற்றியுள்ளது.
டிராயின் புதிய விதிமுறைகள் வருமாறு:
செயல்படாமல் உள்ள பிரீ - பெய்டு இணைப்புகளில், 20 ரூபாய்க்கு மேல் இருப்பு
இல்லை என்பதற்காக, இணைப்பை துண்டிக்க கூடாது. செயல்படாமல் இருப்பதற்கான
காலத்தை, 90 நாட்கள் வரை அனுமதிக்கலாம்.
அதே போல், செயல்படாமல் உள்ள, 90 நாட்களில், இருப்பில் உள்ள தொகையில்
இருந்து மாதந்தோறும், 20 ரூபாய்க்கு மிகாமல் கழித்து கொள்ளலாம். இருப்பு
தொகை, 20 ரூபாய்க்கு கீழ் செல்லாதவரை இருக்க வேண்டும்.
மேலும், 90 நாட்கள் கழித்து, இணைப்பு துண்டிக்கப்படும் பட்சத்தில், அதே மொபைல் போன்
நம்பரை இழக்காமல் இருப்பதற்கு, இணைப்பு துண்டிக்கப்பட்ட நாளில் இருந்து, 15
நாட்களுக்குள், இணைப்பை மீண்டும் செயல்படுத்த சலுகை காலம் வழங்கலாம்.
இதற்கு குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கலாம்.
"போஸ்ட் பெய்டு' சந்தாதாரர்களுக்கு, இணைப்பை மீண்டும் செயல்பாட்டிற்கு
கொண்டுவர, 90 நாட்கள் சலுகை அளிக்கலாம்; கட்டணமாக, 150 ரூபாய்
வசூலிக்கலாம்இவ்வாறு, புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த
விதிமுறைகள், அடுத்த மாதம், 22ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
Published in dinamalar on 24.02.13
No comments:
Post a Comment