Blogger Widgets

Total Page visits

Friday, February 22, 2013

பி.எஸ்.என்.எல். அளிக்கும் இரண்டு மாத ஆன்லைன் சான்றிதழ் படிப்பு






பி.எல்.என்.எல். என்று அழைக்கப்படும் இந்திய தொலைப்பேசி நிறுவனம்  இரண்டு மாத கால ஆன்லைன் சான்றிதழ் படிப்பை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இன்டர்நெட் போர்ட்டல், நெட்வொர்க்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு, மொபைல் தகவல்தொடர்பு, , ஆப்ட்டிகல் ஃபைபர் சிஸ்டம்ஸ், அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம், டிஜிட்டல் ஸ்விட்சிங் மற்றும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ், தொலைத்தொடர்புக்குத் தேவையான உள்கட்டமைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆன்-லைன் சான்றிதழ் படிப்பை இந்த நிறுவனம்  வழங்குகிறது.

மாணவர்களும், தொலைத்தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களும்  இந்தப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெற முடியும். செய்முறை பயிற்சியும் இந்த படிப்பில் அடங்கும். வார விடுமுறை நாள்களில்  இந்த செய்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

சென்னை மறைமலை நகர் பெரியார் சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் இருக்கும்  சென்னை தொலைபேசியின் மண்டல பயிற்சி மையத்தில்   பயிற்சிகள் நடத்தப்படும். இந்த படிப்புக்கான குறைந்த கட்டணம் ரூ. 5,000. படிப்பு அறிமுகச் சலுகையாக இந்த கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த படிப்பின் முதல் பேட்ச் வரும் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் விவரங்களை அறிய  www.learntelecom.bsnl.co.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Thanks sakthistudycentre.blogspot.com

No comments: