தோனியின் புதிய "ஹேர்-ஸ்டைல்' ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய அணி கேப்டன் தோனி, 32. "ஹெலிகாப்டர் ஷாட்' உட்பட பல புதிய
முறைகளை பேட்டிங்கில் அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
பெக்காம் போல "ஹேர் ஸ்டைலையும்' அடிக்கடி மாற்றுவார். கடந்த 2004ல்
அறிமுகம் ஆன போது கழுத்து வரை கூந்தல் வைத்திருந்தார். இதனை அப்போதைய
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் பாராட்டினார். பின் "கிராப்' வெட்டிய
தோனி, 2011ல் உலக கோப்பை வென்ற போது, மொட்டை அடித்துக் கொண்டார்.
இவர் ஒவ்வொரு முறை ராஞ்சிக்கும் வரும் போது, இங்குள்ள கயா சலூனில் தான்
முடி வெட்டுவார். அப்போது, நூற்றுக்கணக்கான ரசிகர்கள், கடைக்கு வெளியே கூட,
இவர்களை கட்டுப்படுத்துவது, பெரும் சிரமமாகி விடும்.
கடந்த 2006ல் இங்கு இருந்த போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார், " தயவு
செய்து முடிவெட்ட செல்லும் போது, எங்களிடம் சொல்லுங்கள், அப்போது தான்
பாதுகாப்பு தரமுடியும்,' என்றாராம்.
தற்போது, சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில், "மொஹாக்'
பாணியில்(கீரிப்புள்ள தலை) இருபக்கம் தலைமுடியை எடுத்து விட்டு, நடுவில்
மட்டும் நீளமாக முடி வைத்துள்ளார்.
தோனியின் பயிற்சியாளர்களில் ஒருவரான சஞ்சால் பட்டாச்சார்யா
கூறுகையில்,"" தோனியை பள்ளி நாட்களில் இருந்தே கவனித்து வருகிறேன்.
அப்போதே, மற்றவர்களை விட வித்தியாசமாகத் தான் தலைமுடி வைத்திருப்பார்.
புதிய "மொஹாக்' முறை, தோனியின் நான்காவது "ஸ்டைல்' ஆக உள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment