பரபரப்பான இரண்டாவது டெஸ்டில் "பேட்டிங்கில்' சொதப்பிய பாகிஸ்தான் அணி,
"கத்துக்குட்டி' ஜிம்பாப்வேயிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக
தோல்வி அடைந்தது.
பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில்
நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 294, பாகிஸ்தான் 230 ரன்கள்
எடுத்தன. ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 199 ரன்கள்
எடுத்தது.
பின் 264 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி
திணறியது. முகமது ஹபீஸ் (16) ஏமாற்றினார். அசார் அலி "டக்-அவுட்' ஆனார்.
குர்ராம் மன்சூர் (54) அரைசதம் அடித்தார். யூனிஸ் கான் (29), ஆசாத் ஷபிக்
(14) நிலைக்கவில்லை. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுக்கு 158
ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஜிம்பாப்வே பவுலர்கள் தொடர்ந்து
சிறப்பாக செயல்பட, பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி கட்டத்தில்
ரகத் அலி(1) ரன் அவுட்டாக, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 239
ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. போராடிய கேப்டன் மிஸ்பா 79
ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சடாரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
புதிய வரலாறு:
இப்போட்டியில் "திரில்' வெற்றி பெற்று வரலாறு படைத்த ஜிம்பாப்வே அணி
தொடரை 1-1 என சமன் செய்தது. தவிர, பாகிஸ்தானுக்கு எதிராக 1998க்கு பிறகு
வென்றது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங்கில் பாகிஸ்தான் அணி நான்காவது
இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஜிம்பாப்வே அணி,
வங்கதேசத்தை பின் தள்ளி, 9வது இடத்துக்கு முன்னேறியது.
No comments:
Post a Comment