Blogger Widgets

Total Page visits

Friday, September 27, 2013

சமூக இணையங்களில் வேகமாக பரவும் மனித உணர்வு ‘கோபம் சீன ஆய்வில் தகவல்!

உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மனிதர்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபலயமாகி, வாழ்வுடன் ஒன்றிப் போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் ட்விட்டர்.

குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும் தமது கருத்துக்களை அவர்கள் ட்விட்டரில் சென்று பதிந்து விடுகிறார்கள்.

உதாரணமாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்து, அது ஒரு சினிமா நடிகை கூறிய கருத்தாக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியின் உளரலாகவும் இருக்கலாம். அந்த கருத்தை கேள்விப்பட்ட அல்லது பார்த்த அல்லது படித்த உடனே ட்விட்டர் ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிந்து விடுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் மத்தியில் என்ன கருத்துகள் நிலவுகின்றன என்பதை அறிய விரும்பும் ஆய்வாளர்கள், முதலில் நாடுவது டிவிட்டர் போன்ற இணையதளங்களைத்தான்.

இப்படிபட்ட உலக சமூக இணையதளங்களில் ஒன்றுதான், வே-போ. மேற்குலகின் டிவிட்டர் போன்றது சீனாவின் இந்த வே-போ. ஐநூறு மில்லியன் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள்.

நூறு மில்லியன் கருத்துகள் தினமும் இதில் பதிவாகின்றன. தமது சீன நாட்டின் இந்த வே-போ இணையதளம் பற்றி, தலைநகர் பீஜிங்கிலுள்ள பே ஹாங் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியாகியுள்ளன.

வே-போ பயனீட்டாளர்களின் சொற்பிரயோகம், ‘எமோட்டிகான்’ என்கிற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கேலிச்சித்திரப் பிரயோகம் ஆகியவற்றை ஆராய்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வே-போவில் வெளியிடப்படும் கருத்துக்களை கோபம், சோகம், குதூகலம், விரக்தி என்று நான்கு பிரிவுகளாக பிரித்துத் தொகுத்தார்கள்.

அவற்றை அவர்கள் ஆய்வு செய்தபோது, கோபமூட்டும் பதிவுகளே மக்கள் மத்தியில் அதிக அளவில் பரிர்ந்து கொள்ளப்பட்டதை கண்டறிந்தார்கள். இதற்கு காரணம், கோபக்கார பதிவர்களுக்கு கோபக்கார நண்பர்கள் ஏரளமாக இருப்பதாகக்கூட இருக்கலாம்.

சீனாவிலுள்ள சமூகப் பிரச்சினைகள், வெளிநாடுகளுடனான ராஜந்தந்திர தகராறுகள், இவை போன்ற தகவல்கள் வே-போ தளத்தில் ஆத்திரத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று ஆய்வுகள் காட்டின.

2010 ஆம் ஆண்டில் ஆறு மாத காலம் சுமார் இரண்டு லட்சம் வே-போ பாவனையாளர்களின் எழுபது மில்லியன் பதிவுகள் ஆராயப்பட்டு இந்த முடிவுகள் எட்டப்பட்டன.

இதேபோல, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சிலர் கண்டுபிடித்துள்ள ஒரு கணினி தொழில்நுட்பம் ட்விட்டர் தளத்தின் மூலம், ஒரு நாட்டின் உணர்வை அறிய முடிகிறது, ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவர் ஆத்திரம் கொண்டிருந்தால், அதே ஒத்த கருத்தை உள்ளவர்களுடன் அவர் இணைவது இயற்கைதான் என்று ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

No comments: