Blogger Widgets

Total Page visits

Saturday, September 14, 2013

உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ?

மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"
தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"
மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?"
தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?"
மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுப்பா ."
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா ..."
மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"

தந்தைக்கு கோபம் வந்தது ...

தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்..."

அந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..
அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ..

தந்தை : "தூங்கிட்டியாடா ?"
மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..."
தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .."

அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் ..

மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "

அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .. அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...

தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் .... அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."
மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட இல்ல ... இப்போ இருக்கு ....
கேளுங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு .... இதை நீங்களே வச்சிக்கோங்க ... இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ... நா உங்ககூட இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ... "

அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ... சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...
தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்....
இந்த தகவல் என் facebook - ல் இருந்து பலரும் அறிய இங்கு பகிரபடுகிறது. 

No comments: