Blogger Widgets

Total Page visits

Friday, September 6, 2013

சுவாரஸ்யமும், சவாலும் உள்ள படிப்பை மேற்கொள்ள விரும்புவோருக்கு..

கேம் டிசைனிங் என்பது, கேரக்டர்களை உருவாக்கி, சுற்றுப்புறத்தை வரைவது தொடர்பான, கேம் ஆர்ட் என்பதல்ல. மாறாக, விளையாட்டிற்கான விதிமுறைகளை உருவாக்குவதுதான் அது.

அனைத்து விளையாட்டிலும் கேரக்டர்கள் மற்றும் கதைகள் இருப்பதில்லை. ஆனால், அனைத்திலும் Game Play இருக்கிறது. எனவே, அவற்றை முடிவு செய்வதுதான் கேம் டிசைனரின் பணி. கேம் டிசைனர்கள் என்பவர்கள், குழந்தைத்தனமான எண்ணங்களும், தங்களுக்கான ஒரு சொந்த உலகத்தை உருவாக்கிக் கொள்ளும் விருப்பமும் உள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்படுகிறார்கள்.

பல்வகை வாய்ப்புகள்

ஆரம்ப நிலையில், கேம் புரோகிராமர்கள் மற்றும் கேம் ஆர்டிஸ்டுகள் ஆகியோர்தான், கேம் டிசைனர்கள் என்ற நிலையில் கருதப்பட்டார்கள். ஆனால், இப்போது அதற்கென்றே தனி ஸ்பெஷலிஸ்டுகள் இருக்கிறார்கள். பொதுவாக, விளையாட்டின் விதிமுறைகளில் கவனம் செலுத்துவதுதான் கேம் டிசைனர்களின் பிரதானப் பணி. அதேசமயம், நிறுவனங்களின் அளவைப் பொறுத்து, கேம் டிசைனிங் பணியின் அனைத்து அம்சங்களிலும் அவரின் ஈடுபாடு வரையறுக்கப்படுகிறது.

World Designer, System Designer, Content Designer, Game Writer, User Interface Designer, Level Builder, Level Artist and Level Scriptor ஆகிய பல நிலைகளில் பணித் தன்மைகள் வேறுபடுகின்றன.

வேலை வாய்ப்புகள்

இந்தியாவைப் பொறுத்தவரை, இத்துறையின் வளர்ச்சி ஆரம்பகட்ட நிலையிலேயே இருக்கிறது. எந்த சிக்கலும் இல்லாத, மிகவும் பாதுகாப்பான ஒரு பணி வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த கேம் டிசைனர் பணி உங்களுக்குப் பொருத்தமானதல்ல. ஏனெனில், கேம் டிசைனிங் நிறுவனங்கள், திறக்கப்படும் மற்றும் திடீரென்று மூடப்படும். இதுதான் பொதுவான நிலைமை. இத்துறையில் எந்த வகையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இத்துறையில் ஆரம்ப கட்டங்களில், அதாவது இன்டர்ன்ஷிப் பணியின்போது சிலருக்கு சம்பளமே கூட கிடைக்காது மற்றும் அப்படி கிடைத்தாலும் அந்தத் தொகையானது ரூ.10 ஆயிரத்திற்கும் கீழேதான் இருக்கும்.

ஆனால், பணியில் சேர்ந்தவுடன் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் சம்பாதிக்கலாம். இந்தியாவில் தற்போது கேம் கம்பெனிகளின் எண்ணிக்கை 200 வரை உயர்ந்துள்ளது. ஆண்தோறும் அந்த எண்ணிக்கை 30% அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு கேம் கம்பெனிகளுடன் போட்டியிடும் வகையில், இந்திய நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டை சிறப்பான முறையில் நிபுணத்துவ மயப்படுத்தி வருகின்றன.

கேம் டிசைனர்கள் என்பவர்கள் வெறுமனே கேம் கம்பெனிகளில் மட்டுமே தேவைப்படுவதில்லை மற்றும் அங்கு மட்டுமே அவர்களுக்கான பணி வாய்ப்புகள் முடங்கி விடுவதில்லை. மாறாக, சாப்ட்வேர் நிறுவனங்கள், ஜவுளி தயாரிப்பு நிறுவனங்கள், டிராவல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகள் மற்றும் வலைதளங்களில் ஒரு ரசனையையும், நகைச்சுவையையும் கொண்டுவர, கேம் டிசைனர்களை பணிக்கு அமர்த்துகின்றன. மேலும், இதன்மூலம் தங்கள் நிறுவனங்களுக்கும் ஒரு பெயரை தேடிக்கொள்கின்றன.

தேவைப்படும் திறன்கள்

நல்ல ஆங்கில அறிவு மற்றும் இத்துறை தொடர்பான அன்றாடம் நிகழும் மாற்றங்கள் பற்றிய விபரங்கள் ஆகியவை நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஒரு நல்ல கேம் டிசைனர் என்பவர், கேம் விளையாடுபவராகவும், படைப்புத்திறன் உள்ளவராகவும், விபரங்களை கவனிப்பவராகவும், விளையாட்டை பகுப்பாய்வு செய்பவராகவும், அடிப்படை மென்பொருளை எளிதாக பயன்படுத்தும் திறன் உள்ளவராகவும், விமர்சனத்தை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, புது புது ஐடியாக்களுடன் வருபவர்களே சிறந்த கேம் டிசைனர்களாக பரிணமிக்க முடியும்.

பலவகையான பின்னணிகளிலிருந்து இத்துறைக்கு வருபவர்களும், நன்றாக சாதிக்கிறாகள் என்று துறைசார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பின் தேவை

முந்தைய நாட்களில், பல கேம் டிசைனிங் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தனது பணியாளர்களுக்கு in - house பயிற்சியை அளித்தன. இதன்மூலம், பயிற்சியுடன் அறிவும் கிடைத்தது. ஆனால், அதன்பிறகான காலகட்டங்களில், இதுதொடர்பான கல்வி நிறுவனங்கள் பெருக ஆரம்பித்த பின்னர், இத்துறையில் படித்த ஆட்களை கேம் டிசைனிங் நிறுவனங்கள் விரும்பத் தொடங்கின.

ஒரு மாணவரின் திறன் மற்றும் உணர்வு மையத்தில், கல்வியானது பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. கேம் டிசைனிங் பட்டதாரிகள், அவர்களின் அடிப்படைத் திறனில், ஏற்கனவே பாதி பயிற்சி பெற்றவர்கள். எனவே, அவர்கள் பணியை பெறுவதற்கு, மிகவும் குறைந்த காலஅவகாசமே செலவிட வேண்டியுள்ளது,

கேம் டிசைனிங் படிப்பு, ஒரு மாணவரை, செய்முறை மற்றும் அறிவு ரீதியாக, தேர்ந்தவராக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. தியரி பாடத்துடன், real cases மற்றும் கேம் என்ஜின்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட பிராக்டிகல் பயிற்சியும், இப்படிப்பில் வழங்கப்படுகிறது. தனியாகவும் மற்றும் குழுவாகவும் ப்ராஜெக்ட் பணிகளை மாணவர்கள் மேற்கொள்கிறார்கள்.

அதேசமயம், அவர்களை தயார்படுத்துவதற்கான காலஅளவு, குறைந்தபட்சம் 1 வாரம் முதல், 8 மாதங்கள் வரை வேறுபடுகிறது. Video games, game modes, levels or broad games போன்றவை உள்ளடங்கியுள்ளன.

கட்டணம்

இப்படிப்பு மலிவான ஒன்றல்ல. கல்லூரியில் ரெகுலர் முறையில் படிக்க, லட்சக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கும். உதாரணமாக, DSK Supinforgame கல்வி நிறுவனத்தில், பவுன்டேஷன் படிப்புக்கு ரூ.6 லட்சமும், அட்வான்ஸ் படிப்பிற்கு ரூ.7 லட்சமும் செலவாகிறது.

பணி சவால்கள்

கேமிங் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும், புதிய Gaming Platforms உருவாகின்றன. எனவே, இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்றபடி, கேம் டிசைனர்கள் தங்களின் திறமையின் மூலம் சமன்செய்ய வேண்டியுள்ளது. சிறந்த கேம்கள், முறையான கேம் கட்டுப்பாடுகள் மற்றும் போதுமான வணிக மாதிரிகள் ஆகியவைகளை அவர்கள் உருவாக்க வேண்டியுள்ளது.

இத்துறையில் ஒவ்வொரு ப்ராஜெக்ட்டும், சவாலானவையாகவும், புதிய புதிய அனுபவங்களைத் தருவதாகவும் உள்ளன. மேலும், புதிய சிக்கல்களையும் எதிர்கொண்டு, அதை அவர்கள் தீர்க்க வேண்டியுள்ளது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு, தங்களின் துறைசார் அறிவை கட்டாயம் அவர்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய, ஆர்வமூட்டும் கேம்களை உருவாக்கும் திறன் அவர்களுக்கு இருக்க வேண்டும். வாடிக்கையாளரை எந்த அளவுக்கு கவர்கிறார் என்பதில்தான், ஒரு கேம் டிசைனரின் வெற்றி அடங்கியுள்ளது. எனவே, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான அவர் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

கேம்கள் மட்டுமின்றி, கலாச்சாரங்கள், நாடுகள், பாரம்பரிய கதைகள் போன்றவைகளையும் அவர் நன்கு அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் அவர் மறக்கக்கூடாத விஷயங்கள்.

ஒவ்வொரு கதையும், மற்றதிலிருந்து வேறுபட்டது. இத்துறையில் ஈடுபடும் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, அவர்கள் எதை அதிகம் விளையாட விரும்புகிறார்களோ, அதிலே சிறந்து விளங்குபவர்களாக இரப்பார்கள். என்ன மாணவர்களே, இந்த சவாலான துறையில் கலக்குவதற்கு நீங்கள் தயாரா?

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

DSK Supinfocom
Seamless Education Academy pvt Ltd
Image college of Arts
Animation and technology (ICAT)

தகுதிகள்

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் நல்ல ஆங்கில அறிவையும், பகுப்பாய்வுத் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுசெய்யும் முறை

கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வுகளின் மூலமாக.

வேலை வழங்கும் முக்கிய நிறுவனங்கள்

Gaming industry
Software companies
Clothes manufacturing firms
Travel companies
All others who use digital medium in some form.

No comments: