Blogger Widgets

Total Page visits

Friday, October 31, 2014

ஃபேஸ்புக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ஃபேஸ்புக் இணைய தளத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வமாக இருக்கும்... சிலருக்கு குழப்பமாகக்கூட இருக்கும். ஆனால்  ஃபேஸ்புக்கின் செயலாளர் மார்க்குக்கு அதில் எவ்வித குழப்ப்பமும் இல்லை... ஏன் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலையே தயாரித்துள்ளார்.

மூன்றாண்டு திட்டம், ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம் என அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணையத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் நேரங்களில் ஆளுங்கட்சியினர் வெளியிடுவது போல் கடந்த கால சாதனைகள் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சுவாரஸ்யமான பல தகவல்களும் உள்ளன..

தினமும் 864 மில்லியன் பயனாளர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக் குழுவின் மூலம் கிட்டத்தட்ட 700 மில்லியன் நபர்கள் தொழில் சார்ந்த இணைப்பை பெறுகிறார்கள். இதுபோன்ற பெருமளவில் நமது தயாரிப்பு பயன்படுத்தப்படுவதின் மூலம் நம் சேவை தரம் நன்றாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 
   
ஃபேஸ்புக் பிரபலமான மனிதர்களையும் அவர்களின் ரசிகர்களுக்கும் ஒரு பாலமாக மாறியுள்ளது. பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்குமிடையே வாராவாரம் ஒரு பில்லியன் உரையாடல்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. வீடியோ பரிமாற்றத்திலும் பெரும் வெற்றியை கண்டுள்ளோம். ஐஸ்பக்கெட் சேலஞ்ச் சார்பாக 10 மில்லியன் வீடியோக்கள் தரவேற்றப்பட்டு 440 மில்லியன் மக்களால் பார்வையிடப்பட்டுள்ளதே இந்த துறையில் நமது செயல்பாட்டிற்கான சான்று.

போட்டோ பரிமாற்ற இணைய தளமான இன்ஸ்டாகிராமும் பெருமளவு மக்களிடையே சென்றடைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் சராசரியாக 21 நிமிடம் இன்ஸ்டாகிராம் தளத்தில் செலவிடுகிறார்கள். 


இதுபோன்ற சாதனைகளின் பட்டியலை வெளியிட்டவர், அடுத்த 10 ஆண்டுகளில் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் விளக்கினார்.
  
அதில், அவர்களின் முக்கியமான குறிக்கோளாக உள்ளது மெசேஜிங்தான். ''இன்னும் மெருகூட்டப்பட்ட, வேகமான தகவல் பரிமாற்ற சேவையை வழங்க வேண்டும் என்பதுதான் முக்கிய குறிக்கோள்.அனைத்து சேவைகளிலும் பயனாளர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் ஃபேஸ்புக்கை ஒரு கிராஷ்பிளாட் பார்மாக மாற்ற வேண்டும். கடந்த ஜூலை மாதம் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து internet.org என்ற அப்ளிகேசனை ஜாம்பியா நாட்டில் வெளியிட்டது ஒரு புது அனுபவமாக இருந்தது. 

internet.org  என்பது உடல் நலம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான இணையதள சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் ஒரு அப்ளிகேசன். இந்த சேவைக்கு கிடத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சேவையை இன்னும் பல நாடுகளுக்கு வழங்க வேண்டும். கடந்த பல மாதங்களாகவே பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல நிறுவனங்களுடன் ஆலோசனை செய்துள்ளேன். இதை ஒரு நீண்ட கால இலக்காக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

''இந்த காலாண்டு வெற்றிகரமாக அமைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து ஃபேஸ்புக் பணியாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இன்னும் நீண்ட தூரம் நாம் பயணிக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுத்துள்ள பாதை மிகச் சரியான பாதை. நம் முன்னேற்றமும் அதுபோலவே மிகச்சீராக இருப்பது கண்டு நான் பெருமைப்படுகிறேன்" எனத் தெரிவித்தார்.

எஸ்.தினேஷ்குமார்
(மாணவப் பத்திரிகையாளர்,விகடன்)

No comments: