Blogger Widgets

Total Page visits

Wednesday, October 1, 2014

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம்


மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை செவ்வாய்கிழமை அன்று (செப்டம்பர் 30ம் தேதி) அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்கள் மற்றும் இணையதளச் சேவைகளை மையமாக கொண்டு விண்டோஸ் 9 பதிப்பை நிறுத்திவிட்டு பல புதிய அம்சங்கள் சேர்த்து விண்டோஸ் 10 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் பாரம்பரிய வழிகளில் செய்யும் சில செயல்களை மறுசீரமைப்பு செய்து மற்றும் யூசர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டது போல விண்டோஸ் 10 இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது. 


உதாரணமாக, விண்டோஸ் 10ல் உள்ள ஸ்டார்ட் மெனு, விண்டோஸ் 7ல் காண்பதுபோல தோன்றும், மற்றும் அதன் பக்கத்தில் திறக்கப்படும் டைல்ஸ் விண்டோஸ் 8ல் காண்பதுபோல தோன்றும். 

'விண்டோஸ் 8ல் இருக்கும் சலுகைகள் சிலவற்றுடன் விண்டோஸ் 7ல் உபயோகிப்பதை போன்ற தோற்றத்தையும்' விண்டோஸ் 10 வழங்குகின்றன. இது வணிக பயனர்களுக்கு மாற்றம் செய்ய உதவும் வகையில் இருக்கும் என்று ஜோ பெல்ஃபோர்னி, விண்டோஸ் டிசைன் மற்றும் எவல்யூசன் மேற்பார்வையிடும் மைக்ரோசாப்ட் நிர்வாகி கூறியுள்ளார். 'எங்களது நிறுவனத்தின் மிகப்பெரிய ப்ளாட்ஃபார்மாக என்றுமே விண்டோஸ் 10 இருக்கும்' என்று டெர்ரி மையர்சன், மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் தலைவர், சான் பிரான்சிஸ்கோவில் ஓர் நிகழ்வில் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 நிறுவனங்களில் 20% மட்டுமே இடம் பெற்றுள்ளது என்று தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் ஃபாரஸ்டர் படி குறிப்பிடப்பட்டுள்ளது. 

மைக்ரோசாப்ட்டின் புதிய விண்டோஸ் வெளியிடப்படும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், நிறுவனத்தின் மற்ற நிர்வாகிகள் 2015ம் ஆண்டு இளவேனிற்காலத்தில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர். யூசர்கள் புதன்கிழமை முதல் தொழில்நுட்ப முன்னோட்டத்தை மைக்ரோசாப்ட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவனத்திற்கு கருத்துகளை வழங்கலாம். 

டெஸ்க்டாப், எக்ஸ்பாக்ஸ், ஸ்மார்ட்போன், டேப்ளெட் போன்ற அனைத்திலும் விண்டோஸ் 10 பயன்படுத்த முடியும். இந்த புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் ஆப்ஸ் எந்தளவு இருக்கும் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. ஆப்ஸ்களை எளிதாக வைத்துக்கொள்வதோடு மல்டி டெஸ்க்டாப் வசதயும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments: