Blogger Widgets

Total Page visits

Saturday, October 18, 2014

ஆன்லைன் - டிராப்பாக்ஸ் பயனாளர்களே உஷார்!

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள அளவுக்கு சைபர் கிரைம் நடவடிகைகளும் வளர்ந்திருக்கிறது என்பதை நம் யாராலும் மறுத்துவிட முடியாது. சமீப காலமாக சைபர் கிரைம்கள் அதிகமாக நடந்து வருகின்றன. சென்ற வாரத்தில் ஹேக்கர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது 'டிராப்பாக்ஸ்' எனப்படும் புகைப்பட சேமிப்பு வலைதளம்.

இது புகைப்படங்களை சேமிப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வலைதளத்தில் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். கூகுளின் ஜிமெயில் கணக்கை போல பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கொண்டு இந்த வலைதளத்தில் புது கணக்கை துவங்கலாம். அந்த கணக்கில் புகைப்படங்களை அப்லோடு செய்து வைத்துக் கொண்டு தேவை என்கிற போது அதை தரவிறக்கமும் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.
அச்சத்தில் பயனாளர்கள்!

சரி, நல்ல விஷயம்தான். இதிலென்ன ஆபத்து வந்துவிடப் போகிறது என்கிறீர்களா? சில வாரங்களுக்கு முன்பு போஸ்ட்பின் என்கிற வலைதளத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் 400 'டிராப்பாக்ஸ்' கணக்கர்களின் பயனாளர் எண் மற்றும் பாஸ்வேர்டு விவரங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தான் 'டிராப்பாக்ஸ்' சர்வரை ஹேக் செய்து விட்டதாகவும், தன்னிடம் தற்போது சுமார் 7 மில்லியன் 'டிராப்பாக்ஸ்' கணக்காளர்களின் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு இருப்பதாகவும், அதற்கு தகுந்த பணத்தை யார் வழங்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு 'டிராப்பாக்ஸ்' கணக்குகள் குறித்த விவரங்களை வழங்க தயார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இது டிராப்பாக்ஸ் பயனாளர்கள் எலோரையும் அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.
போலி ஆப்ஸ்களே காரணம்!

இது குறித்து டிராப்பாக்ஸ் தரப்பு, "ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போல டிராப்பாக்ஸ் தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்கள் பல்வேறு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் ஸ்டோர்களில் இருக்கின்றன. இந்த போலி அப்ளிகேஷன்களை பயன்படுத்தியே ஹேக்கர்கள் டிராப்பாக்ஸ் விவரங்களை திருடி இருக்கலாம். மற்றபடி டிராப் பாக்ஸ் சர்வர் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், முன்னனெச்சரிக்கை நடவடிக்கையாக டிராப்பாக்ஸ் பயனாளர்கள் எல்லோருக்கும் அவரவர்களின் பாஸ்வேர்டை மாற்றச் சொல்லி மெயில் அனுப்பட்டு விட்டது" என்று தெரிவித்துள்ளது.
எச்சரிகையாக இருங்கள்!

இன்றைய நிலையில் ஆண்ட்ராய்டு போன்களின் ஆதிக்கம்தான் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. டிராப் பாக்ஸ், ஃபேஸ்புக் தொடங்கி சமூக வலைதளத்தின் இன்றைய ஜாம்பவான் வாட்ஸ்அப் வரை போலியான அப்ளிகேஷன்கள் ஸ்டோர்களில் உலாவி வருகின்றன. அதனால் அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்யும்போது மிகவும் கவனமுடன் செயல்படுவது அவசியம். முடிந்தவரை அப்ளிகேஷன்களை அதன் ஆதாரபூர்வமான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் டவுன்லோடு செய்யுங்கள்.

ஏ.டி.எம். பின் நம்பரை அடிக்கடி மாற்றுவது போல, முக்கியமான, நமது விவரங்கள் அதிகம் இருக்கக் கூடிய வலைதளங்களின் பாஸ்வேர்டுகளை கூட அடிக்கடி மாற்றிக் கொள்வது நல்லது. நாம் எச்சரிக்கையுடன் இல்லாமல் போனால் சமூக வலைதளங்கள், இதுபோன்ற தகவல் சேமிப்பு வலைதளங்கள் மற்றும் வங்கி கணக்குகள் என எல்லாவற்றிலும் ஒரிஜினல் போலவே வலைதளங்களை உருவாக்கி கூட நமது விவரங்களை ஹேக்கர்கள் திருடிவிடக் கூடும்.

உஷார் நண்பர்களே!

-செ.தினேஷ்குமார் (மாணவப் பத்திரிகையாளர்),விகடன்

No comments: