share your files without registration upto 2GB
மிகச்சிறந்த சேவையை வழங்கிறது இத்தளம். உங்கள் கோப்புகளை (Files) தரவேற்றம் செய்து , அதை உங்கள் நண்பர்களுக்கு Email ஆகவோ, அல்லது லிங்க்(LINK) ஆகவோ அனுப்பும் வழிமுறையை நமக்கு இலவசமாக வழங்குகிறது இத்தளம்.
குறிப்பிட்டு சொல்வதெனில் உடனடியாக இணையத்தின் மூலம் கணக்கு எதுவும் தொடங்காமலேயே இத்தளத்தைப் பயன்படுத்த முடியும்.
இதில் நீங்கள் பகிரும் கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும். 15 நாட்களுக்கு நீங்கள் பகிரும் கோப்புகள் எவையும் அழியாமல், மற்றவர்களுக்கும் தெரியாமல் பாதுகாப்புடன் இருக்கும். இரண்டு GB கொள்ளவு வரைக்கும் நீங்கள் உங்கள் கோப்புகளை (documents-files) இத்தளத்தினூடாக பகிர்ந்துகொள்ளலாம்.
எப்படி பயன்படுத்துவது?
இந்த தளத்தை திறந்தவுடன் ஒரு வட்டம் சுற்றிக்கொண்டிருக்கும். அதன் மீது மௌஸ் கர்சரை வைத்தால் ஒரு செய்தி தோன்றும். அதில் ok செய்தவுடன் அடுத்தப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
அப்பக்கத்தில் அவர்களுடைய விதிமுறைகளை(WeTransfer Terms of Service and Privacy Policy) ஏற்றுக்கொண்டு I agree என்பதை சொடுக்கியவுடன் அடுத்த பக்கம் தோன்றும்.
அதில் Add files என்பதைச் சொடுக்கி நீங்கள் பகிர நினைக்கும் கோப்புகளை தரவேற்றம் செய்துவிடலாம்.
அடுத்து தேவைப்பட்டால் add more files என்பதை கிளிக் செய்து மேலதிக கோப்புகளையும் செய்துகொள்ள முடியும். தரவேற்றம் முடிந்த பிறகு, கீழுள்ள பெட்டியில் Friend's email என்பதை சொடுக்கி உங்களுடைய நண்பருடைய மின்னஞ்சல் முகவரியும், Your email என்பதைச் சொடுக்கி உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிடுங்கள்.
அடுத்து கீழிருக்கும் பெட்டியில் நீங்கள் உங்கள் நண்பருக்கும் கொடுக்கும் செய்தியை தட்டச்சிடுங்கள்.
இறுதியாக கீழுள்ள Transfer என்பதை சொடுக்குங்கள். இப்பொழுது Transferring நடக்கும். இறுதியாக Transfer complete என்ற செய்தி கிடைக்கும். கீழிருக்கும் Okay என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.. உடனே உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு உறுதிபடுத்தும் மின்னஞ்சலும்(confirmation email with download link), உங்களுடைய நண்பருக்கு ஒரு மின்னஞ்சலும் சென்றுவிடும்.
அந்த மின்னஞ்சல்களில் நீங்கள் தரவேற்றம்(UPLOAD) செய்த கோப்புகளை தரவிறக்கம்(DOWNLOAD) செய்வதற்கான சுட்டி இருக்கும்.
உங்கள் நண்பர் அந்த சுட்டியை CLICK செய்தவுடன் WE TRANSFER தளம் திறக்கும். அத்தளத்தில் கோப்பைத் தரவிறக்க DOWNLOAD என்ற பட்டன் இருக்கும். அதைக் கிளிக் செய்து உங்கள் நண்பர் அந்த கோப்பை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கோப்பை தரவிறக்கம் செய்துகொண்ட பிறகு, அந்த கோப்பானது We Transer தளத்திலிருந்து நீக்கப்படும்.
உங்களுக்கு வந்த மின்னஞ்சலிலேயே அந்த கோப்பு எந்த தேதியில் அழிக்கப்படும் என்பதையும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
வெகு தொலைவில் உள்ள நண்பர்களுக்கு இணையத்தின் மூலம் கோப்புகளை உடனடியாக பரிமாற இத்தளம் ஏற்றது. இரண்டு GB வரையுள்ள கோப்புகளை எந்த ஒரு ரெஜிஸ்டரேசனும் இல்லாமல் ஒரே கிளிக்கில் அனுப்ப முடிவதே இத்தளத்தின் மிகப்பெரிய சிறப்பாக இருக்கிறது.
அவசரத் தேவைக்கு, உங்களிடம் உள்ள 2GB வரையுள்ள பெரிய கோப்புகளை உடனடியாக தரவேற்றம் செய்து, உங்கள் நண்பரை பாதுகாப்பாக Download செய்துகொள்ள வைக்கலாம்.
நீங்கள் உள்ளிடும் மின்னஞ்சலுக்குரியவரைத் தவிர மற்ற நபர்கள் யாரும் அந்த கோப்புகளை தரவிறக்கம் செய்ய முடியாது என்பதே இத்தளத்தின் சிறப்பம்சம்.
அதனால் மிக முக்கியமான கோப்புகள், தனிப்பட்ட ரகசிய கோப்புகள் ஆகியவை இத்தளத்தின் மூலம் உங்கள் நண்பர்கள், அலுவலர்கள், குடும்பத்தினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ள முடியும்.
தளத்திற்கான URL: https://www.wetransferbeta.com/
மிக்க நன்றி நண்பர்களே...!
- தங்கம்பழனி.
No comments:
Post a Comment