1. கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைத்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
2. சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
3.
விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப்
பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
4. பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
5. விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுநர்களும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு நாடாக, இந்தியாவை மாற்ற வேண்டும்
6. தரமான மருத்துவ வசதி அனைவருக்கும், வேறுபாடு இல்லாமல் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
7. ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
8.
வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை கலையப்பட்டு, பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில்
இருக்கும் யாரும் நாம் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத
நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
9. ஒரு இனிமையான, வளமான,
பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை
நோக்கி பீறு நடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
10.
உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி
வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
|
No comments:
Post a Comment