அமெரிக்க
நடன ஆசிரியராக வேலை பார்க்கும் கமலுடன் இருக்கவே மனைவி பூஜாகுமாருக்கு
பிடிக்கவில்லை. இதில் வேலை பார்க்கும் முதலாளியோடு கள்ளத் தொடர்பு வேறு.
“என்னோட ஆம்படையா எப்படி தெரியுமா” என்று ஆரம்பித்தவுடன் கமலின் முகம்
தெரிய ஆரம்பிக்கிறது. முகம் முழுவதும் பெண்மை கலந்த நளினத்தோடு, நடனம்
சொல்லி கொடுக்கும் பாங்கு, கமலுக்கு சொல்லவா வேண்டும். ஜமாய்க்கிறார்..
தான் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் முதலாளியை மணப்பதற்கு விவாகரத்து செய்ய வேண்டுமல்லவா..அதற்காக ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியை வைத்து கமலை பாலோ பண்ண வைக்க, அதிர்ச்சியாக கமல் ஒரு முஸ்லீம் என்று தெரியவருகிறது, படிப்படியாக அல்கொய்தாவுக்கே ஆப்கானிஸ்தானில் பயிற்சி கொடுத்தவர் என்று தெரியவருகிறது.
மற்றபடி, இந்த மாதிரியான படத்தை கமலால் மட்டுமே எடுக்க முடியும். கமலின் ஒரே நோக்கம் ஹாலிவுட் மட்டும் என்பது தெளிவாக தெரிகிறது…அதே போலவே படமும் முழுக்க முழுக்க ஹாலிவுட் தரம். முக்கியமாக, ஆப்கானில், தீவிரவாதிகளுக்கு போர்ப்பயிற்சி கொடுக்கும் காட்சிகள், அமெரிக்க தாக்குதல் என அனைத்தும் ஹாலிவுட் தரம்..காதுக்குள்ஹெலிகாப்டர் பறக்கும் இன்னமும் கேட்கிறது.
குறிப்பாக ஒரு காட்சி..அப்பாவியான கமலை கட்டிவைத்துவிட்டு, அடிஅடியென அடித்துவிட்டு, உயிர்போகும் தருணத்தில், துவம்சம் பண்ணி எல்லோரையும் போட்டுதள்ளும் அந்த சீன் அரங்கு முழுக்க கிளாப்ஸ். ஆப்கானிஸ்தானா அல்லது செட்டா என்று தெரியவில்லை. செட்டாக இருந்தால் ஆர்ட் டைரக்டருக்கு பாராட்டு.. முழுக்க, முழுக்க ஒருமணிநேரம் ஆப்கானில் இருந்த ஒரு உணர்வு.. டைரக்டர் கமல் ஓங்கி ஒன்றரை டன் வெயிட்டாக அடித்திருக்கிறார்..அனைத்தும் க்ளாஸ்.
ஏன்
அமெரிக்காவில் வந்து நடன ஆசிரியராக நடிக்கிறார், ஏன் ஆப்கானில்
அல்கொய்தவுக்கு பயிற்சி கொடுத்தார், என்று ரத்தம் தெறிக்க, தெறிக்க..
துப்பாக்கிகுண்டுகளாலேயே பதில் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த
படங்களில் இந்த அளவுக்கு வன்முறையை இருந்ததில்லை. உடல்
துண்டாகவிழுவது..கழுத்தை அறுப்பது, குண்டு முகத்தில் துளைப்பது,
நடுரோட்டில் தூக்குபோடுவது என கொஞ்சம் ஓவர்தான்.
நியூக்ளியர்..செரனியம்..பீஜான்
ரேடியேசன்.. என்று கமல்ஹாசனின் தனித்துவமான யாரும் புரிந்து கொள்ள முடியாத
கொள்கைகளோடு, சஸ்பென்ஸ் நிறைந்த கடைசிகாட்சிகள். கமலால் மட்டுமே இப்படி
தொழில்நுட்பத்தோடு ஒரு இந்திய படம் எடுக்கமுடியும்..கமல் என்றபிறவிக்கலைஞனை
புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர் கூடவே பயணிக்கவேண்டும். ஆனால் அப்படி
பயணிப்பது முடியாதகாரியம். ஏனென்றால் அவர் தொட்ட/தொடவேண்டிய சிகரங்களை
அண்ணாந்து பார்க்கவே ஒரு யுகம் ஆகும்.
அமெரிக்க
பத்திரிகைகளில் சித்தரிக்கப்படும் தலிபான் என்ற தீவிரவாத அமைப்பின் கொடூர
முகம் மட்டுமே படமாக்கபட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் இந்தப்
படத்தை கலைக் கண்ணோடும், இதில் வரும் கதாபாத்திரங்களுக்கு மதச்சாயம்
பூசாமலும், பார்ப்பார்களேயானால் , இது ஒரு சிறந்த ஹாலிவுட்க்கு நிகரான
வெற்றிப்படம் என்பதில் எந்தவித மாற்று கருத்துக்கும் இடமில்லை.
படம்
தொடங்கி முடியும் வரை நேரம் போவதே தெரியாமல் விரைவாக நகர்கிறது கதை.
படத்தில் எங்கும் தொய்வில்லை. இண்டெர்வல் என்று நினைக்கும் நேரத்தில்
இரண்டரை மணிநேர படம் முடிந்திருந்தது.
Source makishan.blogspot.in
No comments:
Post a Comment