Blogger Widgets

Total Page visits

Friday, January 25, 2013

Dropbox என்றால் என்ன?


Dropbox என்பது ஒரு Online Cloud Storage சேவையினை வழங்கும் தளம். அதாவது உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், Documents போன்றவற்றை Online இலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் தேவைப்பட்டால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவையினை பல தளங்கள் வழங்கி வந்தாலும் Dropbox சிறப்பானதோடு அவ்வப்போது பல சலுகைகளையும் வழகிவருகிறது.



ஆனால் இதில் 2GB அளவுவரையான இடவசதியையே இலவசமாக வழங்குகிறது. அதற்கு மேல் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் அதற்குரிய பணத்தினை செலுத்தியே பெற்றுக்கொள்ளவேண்டும். 

Dropbox இனை எப்படி பயன்படுத்துவது?

Dropbox இணையத்தளத்திற்கு சென்று கணக்கு ஒன்றை ஆரம்பித்து Dropbox என்னும் சிறிய அளவிலான மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவியதும் Open பண்ணுங்கள். அப்போது வரும் விண்டோவில் புதிய கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கணக்கை உருவாக்கி Log in செய்துகொள்ளுங்கள். முதல் தடவையாக Log in பண்ணும்போது உங்களுக்குரிய Package ஐ தெரிவ் செய்யும்படி கேட்பார்கள். இலவசமாக பயன்படுத்தவேண்டுமானால் 2GB என்னும் Package ஐ தேர்ந்தெடுங்கள். இப்போது உங்கள் கணினியில் Documents பகுதியில் புதிய Folder ஒன்று உருவாகியிருக்கும்.


அதன் பின்னர் அதற்குள் தேவையான File களை காப்பி செய்து இட்டாலே அவை Automatic ஆக Online Storage இற்கு Upload ஆகும். Upload ஆகியதும் விரும்பிய நேரத்தில், உலகின் எந்த பாகத்தில் இருந்தும் அவற்றை பெற்றுக்கொள்ளமுடியும்.

16 GB அளவுள்ள சலுகையை பெற்றுக்கொள்வது எப்படி?

Dropbox இப்போது புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் மூலம் நீங்கள் 16 GB வரையான இடவசதியை இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். எப்படி என்றால், நீங்கள் உங்கள் நண்பர்களை Dropbox இற்கு Invite பண்ணவேண்டும். நீங்கள் Invite பண்ணும் ஒருவர் மூலமாக 500 MB இடவசதியை பெற்றுக்கொள்ளமுடியும். இந்த வகையில் ஆகக்கூடுதலாக 16GB வரை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த இணைப்பில் செல்வதன் மூலம் நண்பர்களை invite பண்ணுவதற்கான பக்கத்திற்கு செல்லமுடியும். Click Here


இந்த பக்கத்தில் சென்று உங்களிற்கான Referral இணைப்பை சமூக வலைத்தளங்கள், உங்கள் ப்ளாக் போன்றவற்றிலும் பகிர்ந்து உங்கள் நண்பர்களை அழைக்கலாம்.

புதிய கணக்கை ஆரம்பிக்க இந்த இணைப்பில் செல்லுங்கள் Click Here

No comments: