Blogger Widgets

Total Page visits

Friday, January 25, 2013

அப்பா, எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?



ஒரு மனிதர் வேலை செய்துவிட்டு மிகுந்த களைப்புடன் தாமதமாக வீட்டிற்கு வந்தார். அவரை எதிர்பார்த்து அவரது மகன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தான்.

மகன்: அப்பா, எனக்கு உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க முடியுமா?

தந்தை: ஓ, நிச்சயமாக. என்ன கேள்வி அது?

மகன்: அப்பா, நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு உழைக்கின்றீர்கள்?

தந்தை: அது உனக்குத் தேவையில்லாத விடயம். நீ ஏன் இது போன்ற விடயங்களை கேட்கின்றாய்?

மகன்: எனக்கு அதனை அறிந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது. தயவு செய்து நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள் என்று கூறுங்கள்.

தந்தை: நீ அறிந்துகொள்ள வேண்டுமானால், நான் ஒரு மணித்தியாலத்திற்கு நூறு ரூபாய் சம்பாதிக்கின்றேன்.

மகன்: ஓ (தலையை சாய்த்தவாறு)

மகன்: அப்பா, எனக்கு ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?

தந்தை கோபமடைந்தார்.

தந்தை: நீ பணம் கேட்பதற்கான காரணம் அதன் மூலம் அற்பமான விளையாட்டுப் பொருட்களை அல்லது வேறு ஏதேனும் வாங்குவதற்கே ஆகும். நீ நேராக உன்  அறைக்கு சென்று. படுக் கையிலிருந்து நீ ஏன் இவ்வாறு சுயநலவாதியாக இருக்கின்றாய் என்று சிந்தித்து பாரு. நான் ஒவ்வொரு நாளும் மிகவும் கஷ்டப்பட்டு உழைப்பது உங்க ளுடைய இந்த சிறுபிள்ளைத்தனமான செயல்களுக்காகவா?

அந்த சிறுவன் மெதுவாக அவனுடைய அறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டான். அந்த மனிதர் உட்கார்ந்து சற்று முன்னர் அந்த சிறுவன் கேட்ட கேள்விகளுக்கு தான் கோபப்பட்டது பற்றி சிந்திக்கலானார். அவன் என்ன வாங்குவதற்கு பணத்தைப் பெறுவதற்காக இத்தகைய கேள்விகளைக் கேட்கத் துணிந்தான்?

ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அந்த மனிதர் அமைதியடைந்து சிந்திக்க லானார்.

சிலவேளை அவனுக்கு ஏதாவது சில முக்கியமான பொருட்கள் (ஐம்பது ரூபாய்க்கு) வாங்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். அவன் இவ்வாறு அடிக்கடி பணம் கேட்பவன் அல்ல. அந்த மனிதர் சிறுவனின் அறைக்குச் சென்று கதவைத் திறந்தார்.

தந்தை: மகன், நீ தூங்குகின்றாயா?

மகன்: அப்பா, நான் தூங்கவில்லை. விழித்தே இருக்கின்றேன்.

தந்தை: நான் சற்று முன்னர் உன்னோடு கடுமையாக நடந்துகொண்டேனோ என்று சிந்திக்கின்றேன். இந்த நீண்ட நாளில் எனது சிக்கல்களை உன் மீது பிரயோகித்துவிட்டேன். இதோ நீ கேட்ட ஐம்பது ரூபாய்.

அந்த சிறுவன் எழுந்து நேராக உட்கார்ந்து புன்னகைத்தான்.

மகன்: நன்றி அப்பா

பிறகு அவன் அவனுடைய தலையணைக்குக் கீழால் கையைவிட்டு சுருங்கியி ருந்த சில பணத் தாள்களை எடுத்தான். தந்தை சிறுவனிடம் ஏற்கனவே பணம் இருப்பதைக் கண்டார். மீண்டும் அவருக்கு கோபம் ஏற்பட ஆரம்பித்தது. அந்தச் சிறுவன் மெதுவாக அவனுடைய பணத்தை எண்ண ஆரம்பித்தான். பின்னர் அவனுடைய தந்தையைப் பார்த்தான்.

தந்தை: உன்னிடம் பணம் இருக்கும்போது இன்னும் எதற்குப் பணம்?

மகன்: ஏனென்றால் எனக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. இப்போது போதும்.

அப்பா, இப்போது என்னிடம் நூறு ரூபாய்கள் இருக்கின்றன. இப்போது எனக்கு உங்களுடைய நேரத்திலிருந்து ஒரு மணித்தியாலத்தை வாங்க முடியுமா? தயவு செய்து நாளைக்கு நேரத்துடன் வீட்டுக்கு வாருங்கள். நான் உங்களுடன் இரவுணவை சாப்பிடுவதற்கு விரும்புகின்றேன்...!!

படித்ததில் பிடித்தது சில மாற்றங்களுடன்..

No comments: