லண்டன்: ""இந்திய அணிக்கு தோனி கிடைத்தது அதிர்ஷ்டம். சுமாரான
அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்,'' என, இங்கிலாந்து அணியின் முன்னாள்
வீரர் ஜெப்ரி பாய்காட் பாராட்டு தெரிவித்தார்.
இந்திய அணிக்கு
"டுவென்டி-20', 50 ஓவர் உலக கோப்பையை வென்று தந்தவர் தோனி. இதுவரை 134
ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய தோனி, 77ல் வென்று, அதிக வெற்றிகள்
பெற்றுத்தந்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
இதுகுறித்து ஜெப்ரி பாய்காட் கூறியது:
இந்திய
அணியை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில் சுமாராகத்தான் உள்ளது.
வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சில் பலவீனமாக உள்ளது. தவிர, டிராவிட்,
லட்சுமண் சமீபத்தில் ஓய்வு பெற்றுவிட்டனர். சச்சினும் அதிகமான ரன்களை
சமீபத்தில் எடுக்கவில்லை. இதெல்லாம் தோனிக்கு பாதகமானவை. இந்நிலையில், தோனி
குறித்து வழக்கமான முறையில் முடிவு செய்வது தவறு. என்னைப் பொறுத்தவரையில்
இவர், இந்திய அணிக்கு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் தான். இங்கிலாந்துக்கு
எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியால், தோனியை நீக்க முடிவெடுத்தாலும், இவருக்கு
மாற்றாக யாரும் இல்லை.
ஆனால், ஒருநாள் போட்டிகளைப்
பொறுத்தவரையில் மிகச்சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை நிர்வகிக்கும்
தலைமைப் பண்பு, இவரிடம் அசத்தலாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில், இது சற்று
குறைவாக உள்ளது. இதற்காக இவரை மாற்றுவது என்பது முடியாத காரியம்.
மிகவும் கடினம்: பொதுவாக
அணி தோற்கும் போது, கேப்டனைத் தான் குற்றம் சொல்வர். தோற்கும் கேப்டனை
வெளியேற்றுவது தான் வழக்கம். இப்போதுள்ள நிலையில் இந்திய அணியின்
தோல்விக்கு தோனியை குறைசொல்ல முடியாது. டிராவிட், லட்சுமண், ஹர்பஜன் சிங்,
ஜாகிர் கான் அணியில் இல்லை. சச்சினும் ஓய்வு முடிவில் உள்ளார்.
இவர்களுக்கு மாற்று வீரர்களை கண்டறிவது மிகவும் கடினம்.
தோனியின் தவறல்ல: இது
தோனியின் தவறல்ல. அவரை குற்றம் சொல்லும் முன், அணியின் தரத்தை கவனத்தில்
கொண்டு பேச வேண்டும். அதிரடி துவக்க வீரர் சேவக் நீக்கம், மற்றொரு வீரர்
காம்பிர் தொடர்ந்து சொதப்பிய போதும், அணியில் சேர்க்கப்படுகிறார்.
அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்பதால் சோர்ந்துள்ள அவர், தானாக முன்வந்து
விலகினால் நல்லது.
கோஹ்லி "நோ': இந்திய அணியின் கேப்டனாக
விராத் கோஹ்லி வரலாம் என்றாலும், இதற்கு இன்னும் அதிக காலம் காத்திருக்க
வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் பொறுமையும் தேவைப்படும். இவ்விஷயத்தில்
இவர் தோனியிடம் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். கோஹ்லியிடம் எத்தனையோ நல்ல
விஷயங்கள் இருந்தாலும், அவ்வப்போது பொறுமை இழந்து விடுகிறார். கேப்டன்
என்பவர் எந்நிலையிலும் இதை இழக்கக் கூடாது. ஏனெனில், இவரை வைத்து தான்
அணியை மதிப்பீடு செய்வர்.
இவ்வாறு ஜெப்ரி பாய்காட் கூறினார்.
பங்கேற்பது சந்தேகம்
இந்தியா
வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்
பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இந்திய அணி தொடரை 3-1 என
வென்றது. ஐந்தாவது போட்டி தரம்சாலாவில் வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது.
இதில்,
இந்திய கேப்டன் தோனி பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. பயிற்சியின் போது வலது
கை பெருவிரலில் பந்து தாக்கிய போதும், மூன்றாவது, நான்காவது போட்டியில்
கலந்து கொண்டார். காயத்தின் தன்மையை அதிகப்படுத்த விரும்பாத தோனி, ஐந்தாவது
போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து
தோனி கூறுகையில்<,"" இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்று
விட்டது. இதனால், கடைசி போட்டியில் விளையாடுவதா, இல்லையா என்பது குறித்து
தேர்வாளர்களுடன் பேசவுள்ளேன்,'' என்றார்.
Source www.dinamalar.com
Source www.dinamalar.com
No comments:
Post a Comment