Blogger Widgets

Total Page visits

Tuesday, January 29, 2013

மும்பை அணி 40–வது முறையாக கோப்பையை வென்றது


      
       மும்பை ,ஜனவரி   29 .ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை அணி 40வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. பைனலில், இன்னிங்ஸ் மற்றும் 125 ரன்கள் வித்தியாசத்தில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்தியது. மும்பை–சவுராஷ்டிரா அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 75.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக வசவதா 55 ரன் எடுத்தார். மும்பை அணி தரப்பில் தவால் குல்கர்னி 4 விக்கெட்டும், தபோல்கர், அபிஷேக் நாயர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து இருந்தது. ஷா 41 ரன்னுடனும், குல்கர்னி 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. 32–வது சதம் கண்டு சாதனை படைத்த வாசிம் ஜாபர் அதிகபட்சமாக 132 ரன்கள் எடுத்தார். ஷா 55 ரன்னும், ஷவான் 41 ரன்னும் எடுத்தனர். சவுராஷ்டிரா அணி தரப்பில் மகவனா 3 விக்கெட்டும், திரிவேதி, சனான்டியா, தர்மேந்திரசின் ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.பின்னர் 207 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி விக்கெட்டுகள், மும்பை வீரர்கள் அகர்கர், குல்கர்னி ஆகியோரின் அபார வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வேகமாக சரிந்தன.

சவுராஷ்டிரா அணி தேனீர் இடைவேளைக்கு பிறகு 2–வது இன்னிங்சில் 36.3 ஓவர்களில் 82 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சஷ்ராஷ்டிரா அணியில் அதிகபட்சமாக தர்மேந்திரசின் ஜடேஜா 22 ரன்னும், சனான்டியா 16 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்கள் கோதாக், ஜோஜியானி மற்றும் வசவதா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினார்கள். மும்பை அணி தரப்பில் அகர்கர் 15 ரன் கொடுத்து 4 விக்கெட்டும், குல்கர்னி 32 ரன் விடுத்து 5 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆட்டநாயகன் மும்பை வீரர் வாசிம் ஜாபர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பைனலில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்திய மும்பை அணி, ரஞ்சி கோப்பை வரலாற்றில் 40வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதுவரை 44 முறை பைனலுக்கு முன்னேறிய மும்பை அணி, 40 முறை கோப்பை வென்றது. கடைசியாக 2010ல் சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை அணியை தொடர்ந்து, டில்லி (7 முறை), கர்நாடகா (6 முறை), பரோடா (5 முறை), மத்திய பிரதேசம்/ஹோல்கர் (4 முறை) அணிகள் அதிக முறை கோப்பை வென்றுள்ளன. பெங்கால், தமிழகம், ராஜஸ்தான், ஐதராபாத், மகாராஷ்டிரா, ரயில்வேஸ் அணிகள் தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றன. மேற்கு இந்தியா, நவான்நகர், அரியானா, உத்தர பிரதேசம் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றின.

ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ. 2 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த சவுராஷ்டிரா அணிக்கு ரூ. ஒரு கோடி அளிக்கப்பட்டது. இது தவிர, மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,), ரூ. 3 கோடி பரிசு அறிவித்துள்ளது. பிப். 5ம் தேதி மும்பை அணியினருக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் பிப். 6-10ம் தேதிகளில் நடக்கவுள்ள இரானி கோப்பை தொடரில், “ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிக்கு எதிராக விளையாட “நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன்’ என்ற அடிப்படையில், மும்பை அணி தகுதி பெற்றது.

“மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், ரஞ்சி கோப்பை பைனலில், மும்பை அணிக்காக 6 முறை பங்கேற்றார். இதில் 5 முறை மும்பை அணி கோப்பை வென்றது. கடந்த 1990-91ல் நடந்த பைனலில் மும்பை அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில் அரியானாவிடம் தோல்வி அடைந்தது. இதுகுறித்து, சச்சின் கூறுகையில், “”40வது முறையாக எங்கள் மும்பை அணி ரஞ்சி கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

No comments: