Blogger Widgets

Total Page visits

Friday, January 4, 2013

ஜிமெயில் பேக் அப்



ஜிமெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? 

ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.


நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். 
குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல, தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன. 
எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும். 
எனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு பேக் அப் எடுப்பது போல, ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.
இதற்கான பயன்பாட்டு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. ஜிமெயில் பேக் அப் என்னும் இந்த gmailbackup0.107.exe புரோகிராமினை http://www. gmailbackup. com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம். 
இன்ஸ்டால் செய்தவுடன், Backup என்பதில் கிளிக் செய்தால், நாம் நம் கம்ப்யூட்டரில், எந்த போல்டரைக் குறிப்பிட்டோமோ, அந்த போல்டரில், மெயில்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் பேக் அப் செய்யப்படும். 
அனைத்து மெயில்களும் தேவை இல்லை எனில், குறிப்பிட்ட நாட்களுக்கிடையே கையாளப்பட்ட மெயில்களை மட்டும் பேக் அப் செய்திடலாம். 
பேக் அப் செய்திட்ட மெயில்கள் .eml என்ற துணைப் பெயருடன், அந்த பார்மட்டில் இருக்கும். இதனைப் படிக்க இயலும் எந்த புரோகிராம் மூலமாகவும், மெயில்களைப் படிக்கலாம். 
மேலும் இது குறித்து தகவல்கள் வேண்டும் எனில், http://www.gmailbackup.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

Credits to தெரிந்து கொள்ளலாம் வாங்க

No comments: