Blogger Widgets

Total Page visits

Sunday, February 3, 2013

கற்பழிப்பு குற்ற தடுப்பு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் ; அரிய வழக்கில் தூக்கும் உண்டு

சமீபத்தில் எழுந்துள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு , கற்பழிப்பு வழக்கில் புதிய அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்த சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டத்தில் அரிதான வழக்காக கருதப்படும் நேரத்தில் குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனையும் விதிக்க முடியும்.

கடந்த டிசம்பர் மாதம் டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். இதில் கொடிய தாக்குதலுக்குள்ளான மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலகட்ட போராட்டங்கள் நடந்தன. குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து மத்திய அரசு இது தொடர்பாக வர்மா தலைமையிலான குழுவை நியமித்தது. இந்த குழு தனது அறிக்கையை அளித்தது.

இதில் 20 ஆண்டு சிறை , ஆயுள் தண்டனை , மற்றும் தனிமைச்சிறை வரை பரிந்துரை செய்யப்பட்டது. குறிப்பாக கொடூரம் என கருதப்படும் வழக்கில் மரணத்தண்டனையும் விதிக்கப்படும். இதன் அடிப்படையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றியது, கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இந்த புதிய சட்டத்திற்கு இன்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி இன்று கையொப்பமிட்டார். அவசர சட்டம் என்பதால் இந்த புதிய நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

தினமலர் நாளிதழில் 03.02,13 அன்று பிரசுரிக்க பட்ட தகவல் 

No comments: