Blogger Widgets

Total Page visits

Wednesday, January 2, 2013

நீ நாட்டை ஆளப் பிறந்தவன்




இளைஞனே ! 

நீ வீட்டில் வாழப் பிறந்தவனல்ல 
நீ நாட்டை ஆளப் பிறந்தவன்.

நீ கற்கும் கல்வி முகவரி கொடுக்கும் 
நீ செய்யும் செயல் சரித்திரம் பதிக்கட்டும் 

நீ ஏட்டுக் கல்வியோடு நின்று விடாதே 
நீ அரசியல் அறிவும் தெரிந்து கொள் 

நீ மக்களையும் புரிந்து கொள் 
நீ உன்னை மலையென நம்பு 

நீ காண்பது உண்மையென நம்பிடாதே 
நீ கேட்பது எல்லாம் சத்தியவாக்கல்ல 

நீ கொடுத்தால் வள்ளல் என்று சொல்லும்  
நீ எடுத்தால் திருடன் என்று சொல்லும்  

நீ உழைத்தால் ஏமாளி என்று சொல்லும்  
நீ சிரித்தால் திமிரு என்று சொல்லும்  

நீ பசியென்றால் பாவம் என்று சொல்லும்  
நீ வெற்றி பெற்றால் தலைக்கனம் என்று சொல்லும்  

நீ தோல்வியுற்றால் 'இன்னும் வேண்டும் 'என்று சொல்லும்  
நீ அழுதால் நடிப்பு என்று சொல்லும்  

நீ ஓடினால் கேவலம் என்று சொல்லும்  
நீ எழுதினால் கிறுக்கல் என்று சொல்லும்  

நீ பாடினால் முட்டாள் என்று சொல்லும்  
நீ படித்தால் மடையன் என்று சொல்லும்  

நீ பேசினால் உளர்வதாய்ச்  சொல்லும்  
நீ வணங்கினால் வேஷம் என்று சொல்லும்  

நீ நிமிர்ந்தால் வீராப்பு என்று சொல்லும்  
நீ உதவினால் பைத்தியம் என்று சொல்லும்  

நீ பார்த்தால் குருடன் என்று சொல்லும்  
நீ நடந்தால் கொழுப்பு என்று சொல்லும்  

நீ தூங்கினால் சோம்பேறி என்று சொல்லும்  
நீ நேர்மையாய் இருந்தால் 'கூடாது' என்று சொல்லும்  

நீ உண்மை சொன்னால் அரிச்சந்திரன் என்று சொல்லும் 
நீ பொய் சொன்னால் தலைவன் என்று சொல்லும் 

நீ ஏமாற்றினால் 'கடவுள் இருக்கிறார்'என்று சொல்லும் 
நீ தவறு செய்தால் 'காலம் தண்டிக்கும் 'என்று சொல்லும் 


ஆக 

நீ எதைச் செய்தாலும் ஏதாவது ஒன்று சொல்லும் 


உன்னைச் சுற்றியிருப்பவர்கள் எதிர்மறை சொற்களால் (Negative thinking) அபிஷேகம் செய்யட்டும். அர்ச்சனை செய்யட்டும். நிந்தனை செய்யட்டும். அதனால் நீ துவண்டு விடாதே. எப்பொழுதும் நேர்மறை  (Positive Thinking) எண்ணங்களோடு வீர நடைபோடு. எத்தனை இடர்கள் வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து துணிந்து செயல்பாடு. உனது நன்மை செயல்கள் மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கட்டும். ஏழைகள் நலம் பெறட்டும். பசி, வறுமை ஒழிக்கட்டும்.  வெற்றி உனதே! இப்போதே புறப்படு. 

from EASY HAPPY LIFE MAKER

No comments: