Blogger Widgets

Total Page visits

Monday, February 18, 2013

அண்ணா பல்கலை ராங்க் மாணவர்கள் - டாப் கல்லூரிகள் எவை?

சென்னை: தமிழகத்திலுள்ள, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 520க்கும் மேலாக இருந்தாலும், அவற்றில், சில கல்லூரிகள் மட்டுமே, அதிகமான பல்கலைக்கழக ராங்க் ஹோல்டர்களைப் பெறுகின்றன.
வேலம்மாள் பொறியில் கல்லூரி, இந்த விஷயத்தில் முதலிடம் பெறுகிறது. அக்கல்லூரியின் 182 மாணவர்கள், Rank Holders என்ற தகுதியைப் பெறுகின்றனர். கடந்தாண்டும், இக்கல்லூரியே, இப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

பனிமலர் பொறியியல் கல்லூரி இப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. அக்கல்லூரியின் 144 மாணவர்கள் இத்தகுதியைப் பெற்றுள்ளனர். அதே குழுமத்திலுள்ள செயின்ட்.ஜோசப் கல்லூரி, 123 மாணவர்களிடம் மூன்றாமிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு 4ம் இடம்பிடித்த ஸ்ரீசாய்ராம் கல்லூரி இந்தாண்டு 122 மாணவர்களுடன் அதே நான்காம் இடத்தையே பிடித்துள்ளது.
ஐந்தாம் இடத்தை 106 மாணவர்களுடன் எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லூரியும், ஆறாமிடத்தை 101 மாணவர்களுடன் ஆர்.எம்.கே., பொறியியல் கல்லூரியும் பிடித்துள்ளன.

அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ள, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், கடந்த 2010-11ம் ஆண்டில், முதலாண்டு மாணவர்களின் செயல்பாட்டை கணக்கிடுகையில், வேலம்மாள், ஸ்ரீசாய்ராம், எஸ்.எஸ்.என்., ஆர்.எம்.கே., ஆகிய கல்லூரிகள் 80%க்கும் மேலான தேர்ச்சி விகிதத்தைப் பெறுபவையாக உள்ளன.

முழு பட்டியல் வேண்டும்

இதுதொடர்பாக, ஒரு கல்வியாளர் கூறுவதாவது  தமிழகத்தின் இதர பகுதிகளிலும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் பல்கலைக்கழக ராங்க் ஹோல்டர்களின் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டால், அது முழுஅளவிலான மதிப்பீட்டிற்கும், அறிந்துகொள்ளலுக்கும் உதவியாக இருக்கும். இதன்மூலம், மாணவர்களும், பெற்றோர்களும் பெரிதும் பயனடைவர் என்றார்.

எளிய வழி

பொதுவாக, சில தனியார் பொறியியல் கல்லூரிகள், பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை, உதவித்தொகை, கட்டணச் சலுகைகள் போன்ற சலுகைகளின் மூலம் ஈர்த்து, குறைந்த முயற்சிகளிலேயே அவர்களை பல்கலைக்கழக ரேங்க் ஹோல்டர்களாக ஆக்கி, பெயரை பெற்று விடுகின்றன என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments: