இணையத்தில் உள்ள இணையப் பக்கங்களை ஒரு படமாக சேமிக்கவும் இந்த Screen Shot
முறை பயன்படும். தரவிறக்கம் செய்ய முடியாத படங்களை இந்த ஸ்கீரீன் ஷாட்
முறையில் காப்பி செய்து பிறகு, போட்டோ எடிட்டர் போன்ற மென்பொருள்களின்
மூலம் தேவையான முறையில் மாற்றம் செய்துகொள்ள முடியும்.
சாதாரணமாக கணினிகளில் Screenshot எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
கணினி விசைப்பலகையில் Print Screen அழுத்தி, திரையை காப்பி செய்துகொண்டு,
Paint, Photoshop, Photo Editing Software போன்ற ஏதாவது ஒன்றில் புதிய
கோப்பைத் திறந்து அதில் அப்படத்தை பேஸ்ட் செய்து பிறகு வேண்டிய
மாற்றங்களைச் செய்து தேவையான பார்மட்டில் படமாக சேமிக்கலாம்.
இவ்வாறு செய்வதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு முறையும்
இவ்வாறு செய்துகொண்டிருப்பது ஒரு வித சலிப்பை ஏற்படுத்திவிடும். வீணாகும்
நேரத்தை தவிர்க்க, உடனடியாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து படங்களாக சேமிக்க பயன்படும் மென்பொருள் ரேப்பிகேப்வின் - RapiCapWin.
RapiCapWin மென்பொருளின் சிறப்புகள்:
- இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. கணினியில் நிறுவி பயன்படுத்தும் முறையிலும், போர்ட்டபிள் வெர்சனாகவும் கிடைக்கிறது.
- இம்மென்பொருள் மூலம் கணினிதிரையை முழுவதுமாக படம் பிடிக்கலாம். (full screenshot)
- கணினித்திரையிலுள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் படம் பிடிக்கலாம். (Specific area screenshot)
- காட்சிக்குத் தெரியும் கணினித் திரையை (Active Window Screenshot) படம்பிடிக்கலாம்.
- எடுக்கப்பட்ட ஸ்கீரான்சாட்டை தொடர்புடைய மென்பொருளில் திறந்துகொள்ளும் வசதி,
- படம் தேவையில்லை எனில் உடனடியாக டெலீட் செய்யும் வசதி
- ஆன்லைனில் பகிர்ந்துகொள்ள வசதி
- இமெயில் அனுப்பும் வசதி
636kb அளவுகொண்ட இச்சிறிய மென்பொருள் முற்றிலும் இலவசமானது மட்டுமின்றி பாதுகாப்பானதும் கூட.
மென்பொருளைத் தரவிறக்கம் செய்யவும், மென்பொருளைப் பற்றிய மேலதிக தகவல்கள், வசதிகளைத் தெரிந்துகொள்ளவும் நீங்கள் சொடுக்க வேண்டிய
Hi friends,
This post explained about the screenshot software named RapiCapWin. This is free software to take screenshots. It
is free software; it presents three classical modes of capture.
1. Full Screenshot
2. The active window
3. A rectangular area
Software File size is 636 KB. Version 1.0.9, Free License, No spyware,
No ad-ware
இந்த பதிவு தங்கம்பழனி என்னும் வலை பதிவில் இருந்து அனைவரும் அறிய இங்கு பகிரபடுகிறது .
1 comment:
தயவு செய்து இடுகைக்கான இணைப்பையும் கொடுக்கவும்.
- தங்கம்பழனி
Post a Comment