ஒரு பொறம்போக்கு மொத மொதல்லா சரக்கடிக்க கத்து தந்தான்
அவன நானும் பாத்துப்புட்டா சுட்டுருவேண்டா
அட எத்தனையோ நியூ இயரில் என்னனவோ விட்டுருக்கோம்
இன்னையோட சரக்க நாம விட்டுடுவோம்டா
டேய் குவாட்டருக்கு நோ.. பீருக்கு தான் நோ...
சத்தியமா நோ... இன்னையோட குடி நோ...
ஹே தலைவலிக்கு நோ... ஒளறலுக்கு நோ...
வாமிட்டுக்கு நோ... இன்னையோட குடி நோ...
பல சரக்க அடிச்சிருக்கோம்
புத்தி கெட்டு நாம் அலைஞ்சிருக்கோம்
வா நண்பா...
பிராந்திக்கு தான் நோ.. விஸ்கிக்கு தான் நோ...
ஜின்னுக்கு தான் நோ.. இன்னையோட குடி நோ..
வாளிக்குத்தான் நோ.. போதைக்குதான் நோ..
புரிஞ்சிகிட்டேன் நோ.. இன்னையோட குடி நோ...
ஃபிரஸ்ட் லவ் தோத்தவுடன் பீரடிக்க தோணும்
அப்படிதான் மச்சி இதில் மாட்டிகிட்டேன் நானும்
ஒரு பெக்கு உள்ள போனவுடன் போன் அடிக்க தோணும்
என்ன சொன்னேன் என்ன கேட்டேன் மறந்திடுவேன் நாளும்
சந்தோஷத்துக்காக சரக்கடிச்சோம்டா
அட தூக்கம் வந்தா கூட சரக்கடிச்சோம்டா
வா நண்பா
ஹே லார்ஜுக்குதான் நோ.. ஸ்மாலுக்குதான் நோ..
கட்டிங்கிக்கு நோ.. ஹே இன்னையோட குடி நோ...
ஹே ஃபாரினுக்கும் நோ.. லோக்கலுக்கும் நோ..
ஹாலிடேக்கும் நோ.. போடா போடா குடி நோ...
ஏழு எட்டு ஹாஃப் பாயில் உள்ள தள்ளி குடிச்சோம்
அத்தனையும் சேத்து வைச்சா கோழி பண்ணை இருக்கும்
உன் சிஸ்டரோட கல்யாணத்தில் பிரெண்ட்ஸ சேத்து குடிச்சோம்
அப்பனோட சொத்தையெல்லாம் அப்படிதான் அழிச்சோம்
பேச்சிலர் ஃலைப்ப என்ஜாய் பண்ணத்தான்
இந்த நாத்தத்துக்குள்ள நம்ம விழுந்தோம் டா...
வா நண்பா...
அவன் கேப்பான் நோ.. இவன் கேப்பான் நோ...
மயங்காத நோ... இன்னையோட குடி நோ...
வெறுப்பு வரும் நோ... வெரட்டி வரும் நோ..
வருந்தாத நோ.. செத்தாலும் குடி நோ...
ஒரு பொறம்போக்கு மொத மொதல்லா சரக்கடிக்க கத்து தந்தான்
அவன நானும் பாத்துப்புட்டா சுட்டுருவேண்டா
அட எத்தனையோ நியூ இயரில் என்னனவோ விட்டுருக்கோம்
இன்னையோட சரக்க நாம விட்டுடுவோம்டா
மாப்ள கடைசியா ஒரு ஹாஃப் சொல்லுவோமா?
நோ........... ஒரு ஃபுல்லே சொல்லுவோம்
இதுதாண்டா நட்புக்கழகு!!!!
No comments:
Post a Comment