Blogger Widgets

Total Page visits

Wednesday, April 24, 2013

தேடினால் எல்லாம் கிடைக்கும். தேடல்களுக்கு கூகிளின் புதிய தேடல் தளம்..!!

தேடல்களுக்கென்று தனிச்சிறப்பு பெற்றது கூகுள் தளம்(google). உலகெங்கும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இத்தளத்தின் புதியதொரு அறிமுகம் இந்த www.wdyl.com தளம்.

what do you love? என்பதின் சுருக்கத்தை wdyl.காம் என்று பெயர் வைத்திருக்கின்றனர். நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்ற இணைப்பக்கத்தின் தலைப்பே நம்மை கவரும் விதமாக உள்ளது அல்லவா?
இத்தளத்தின் சிறப்பம்சங்கள்:

இந்த தளத்திற்கு சென்று நாம் எந்த ஒரு வார்த்தையைக் கொடுத்துத் தேடினாலும் உடனடி முடிவுகளை நமக்கு அள்ளி வீசுகிறது. இதென்ன புதுசு என்கறீர்களா?  ஆம். புதுசுதான் நண்பர்களே..! கூகுள் வழங்கும் சேவைகளாக கூகிள்மேப்ஸ், கூகுள் காலண்டர்(google calander), கூகுள் லேப்ஸ்(google labs), யூடியூப்(you tube), பிளாக்(blog) போன்றவைகளிலிருந்து முடிவுகளை ஒரே நேரத்தில் தேடி தருகிறது. இதற்கு நாம் கூகிளில் சர்ச் செய்தால் ஏதாவது ஒன்றை மட்டுமே அதாவது, web search மட்டுமே காட்டும். வேண்டுமானால் அதை நாம் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இத்தளத்தில் தனது அனைத்து சேவை தளங்கிலிருந்தும் முடிவுகளை காட்டி நம்மை அசத்துகிறது.

இந்த முகவரியை கிளிக் www.wdyl.com செய்து நீங்களும் உங்களுக்குத் தேவையான முடிவுகளைப் பெற்று பயன்பெறுங்கள்.

No comments: