பணி நியமனம் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஆகியவற்றில்
முக்கிய பங்கு வகிக்கும் குழு கலந்தாய்வு என்ற முக்கிய செயல்பாட்டில், எதை
செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாது என்பதை தெரிய வேண்டியது அவசியம்.
செய்ய வேண்டியவை
* சர்ச்சைக்குரிய தலைப்புகள் குறித்த விரிவான தகவல்களை, தினசரி
செய்திகள், தலையங்கங்கள் மற்றும் நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள்
ஆகியவற்றைப் படித்து சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* நிகழ்ச்சிகளை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* அடிப்படை மொழி இலக்கணம், உச்சரிப்பு மற்றும் வெளிப்படுத்தும் முறை போன்ற திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும்.
* முடிந்தளவு எளிய மொழி நடையிலேயே பேசவும்.
* லாஜிக் அடிப்படையில், உங்களின் விபரங்களை தொகுத்து வைத்துக்கொள்ளவும்.
* உங்களின் எதிரே அமர்ந்து பேசும் நபரை புன்முறுவலுடன் அணுகவும்.
* உங்களின் அணுகுமுறையில், பரந்த மனப்பான்மையோடு இருங்கள்.
* உங்களின் வாதத்திற்கு சரியான ஆதாரத்தைக் கொடுக்கவும்.
* சார்பற்றவராக இருக்கவும். சமநிலையைக் கடைபிடிக்கவும்.
* மற்றவர்கள் வெளிப்படுத்தும் சிறந்த கருத்துக்களை ஆமோதித்து பாராட்டவும்.
* நல்ல கவனிப்பாளராக இருக்கவும்.
* பொறுமையாகவும், அமைதியாகவும் பேசவும்.
* உங்களின் கருத்தை வலுவாக்க, பொருத்தமான மேற்கூறுகளையும், உதாரணங்களையும் எடுத்துக்கூறவும்.
* கூச்சப்பட்டு, அமைதியாக இருக்கும் நபர்களை, பேசுமாறு உற்சாகப்படுத்த வேண்டும்.
* அனைத்து உறுப்பினர்களையும் சுழற்சி முறையில் பார்க்கவும், ஒரு சிலரையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம்.
* உங்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், உரையாடல் முழுவதும் தொடர் வேண்டும்.
* மிதமான நகைச்சுவையை கடைபிடிக்கவும்.
* உங்களின் உடல்மொழியை சோதித்து, சரிசெய்துகொள்ள வேண்டும்.
* யாரேனும் உங்களின் கருத்தைக் கேட்டால், அதை பேசுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பேசவும். தவிர்க்க நினைக்க வேண்டாம்.
* ஒருங்கிணைந்து குழுவாக செயல்படுவதில் உங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தவும்.
* பொறுமையாக இருக்கவும். ஆதிக்கம் செய்ய நினைக்க வேண்டாம்.
* குழு நன்மைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனிப்பட்ட நன்மைக்காக அல்ல.
* முடிந்தளவிற்கு, உங்களின் கருத்துக்களை உதாரணங்களுடன் விளக்கவும்.
* நேர ஒழுக்கத்தை தவறாமல் கடைபிடிக்கவும்.
* நல்ல முறையில் ஆடை அணிந்திருக்க வேண்டும்.
* வெற்றி குறித்து நம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
* பேசும்போது சரியான வேகத்திலும், தெளிவாகவும் பேச வேண்டும்.
* ஒரு மாற்றுக்கருத்தை தெரிவிக்க விரும்பினால், இந்த விஷயத்தை இந்த
விதத்திலும் பார்க்கலாம் என்று சொல்லி, உங்கள் கருத்தை நயமாக விளக்க
வேண்டும்.
எவற்றை செய்யக்கூடாது
* விவாதத்தின்போது உணர்ச்சி வசப்படக்கூடாது.
* வரட்டு விவாதத்தில் ஈடுபடக்கூடாது.
* தனி நபரையோ அல்லது குழுவையோ உதாசீனம் செய்யக்கூடாது.
* கொடுக்கப்பட்ட நேரத்தில் பெரும்பகுதியை நீங்களே எடுத்துக்கொள்ள நினைக்கக்கூடாது.
* பிறரின் கோபத்தை தூண்டும் வார்த்தைகள் அல்லது சைகைகளைப் பயன்படுத்தக்கூடாது.
* பேசும்போது, உணர்ச்சிவசப்பட்டு, டேபிளை தட்டக்கூடாது.
* மற்றவர்கள் பேசுவதை குறுக்கிட்டு தடுக்கக்கூடாது.
* குழுவில் யாரேனும் உங்களின் கருத்தை மடக்கும் விதமாக பேசினால், அவருக்கு சூடான பதிலடி தர வேண்டும் என நினைத்தல் கூடாது.
* பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும். யாரையும் ஆதிக்கம் செலுத்த நினைக்கக்கூடாது.
* அதிக சத்தமாக பேசக்கூடாது. அதற்காக குசுகுசுவென்றும் பேசக்கூடாது.
* You see, I mean, Ya Ya போன்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடாது.
* நீங்கள் குழம்பி விட்டீர்கள் என்பதை காட்டிக்கொள்ளக் கூடாது.
* குழுவில் வேறு நபர் சொன்ன கருத்தையே திரும்ப சொல்லக்கூடாது.
* நாகரீகமற்ற விஷயங்களை வெளிப்படுத்தக்கூடாது.
* உங்களின் கருத்து ஏற்கப்படவில்லை என்றறால், அதற்காக, கோபப்படக்கூடாது. ஏமாற்றமடையக்கூடாது.
Thanks dinamalar.com
No comments:
Post a Comment