இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு டொரண்ட் பற்றி அதிகம் தெரிந்து  
இருக்கும்.  இன்னுமும் டொரன்ட் பயன்படுத்தாமல் டவுன்லோட்களுக்கு 
சர்வர்களையே  நாடுபவர்கள் அதிகம்.  அவர்களுக்காக டொரன்ட் பற்றி இந்த  
பதிவில் கூறப்படுகிறது. படித்து  பயன்பெறுங்கள். 
டொரன்ட் பயனாளர் முதல் பயனாளர் வரை என்ற கோட்பாட்டை பயன்படுத்துகிறது.  
இதன் மூலம் நீங்கள் டவுன் லோடு செய்வதற்கு முழுவதும் சர்வரை மட்டுமே  
எதிர்பார்க்க வேண்டாம்.  அதிகமான பயனாளர்கள் டவுன்லோடு செய்யும் போது 
வேகம் குறையாது.  விலை உயர்ந்த சர்வர்கள் இணையதளத்திற்கு குறையாது.  பெரிய 
பயனாக சர்வர் வேகம் குறையாது. 
இதில் டவுன்லோடு பைல் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு  
பகுதியாக டவுன்லோடு செய்து சேமிக்கப்படும்.  எடுத்துகாட்டாக நீங்கள் ஒரு 
மென் பொருளை 30 சதவீதம் டவுன்லோடு  செய்திருப்பீர்கள். உங்களுக்கு 
அடுத்து வருபவருக்கு சர்வரில் இருந்து ஆணை  வழங்கப்பட்டு உங்களுடைய 30 
சதவீத முழுமை அடைந்த பகுதியில் இருந்து அவருக்கு  டவுன்லோட் செய்யப்படும்.
 இதனால் டிராபிக் கட்டுப்படுத்தப்படுகிறது.  சர்வர் பயனில் இல்லாவிட்டால் 
கூட பைல்களை கிளையன்ட்களிடம் இருந்து பெறலாம்.  
இந்த படத்தை ஒரு முறை பாருங்கள்.


இந்த புரோட்டோகாலை கண்டறிந்தவர் பிரான் ஹொகீன். மைக்ரோசாப்ட் போன்ற 
பெரிய கம்பெனிகள் கூட தங்களுடைய டெமோ பைலை அளிக்க  இந்த புரோட்டோகாலை 
அதிகம் பயன்படுத்துகிறது. 
பயன்படுத்தாதவர்கள் ஒருமுறை பயன்படத்தி பாருங்கள்
 

No comments:
Post a Comment