Blogger Widgets

Total Page visits

Tuesday, April 2, 2013

ஐடி துறையில் திறமையானவர்களுக்கு எப்போதுமே வேலை!

ஐ.டி., துறை, திறமையானவர்களுக்கு, எப்போதும் வாய்ப்பு தருகிறது. ஐ.டி., துறையில் மட்டும், ஆண்டுக்கு, 2.1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. பி.இ., மெக்கானிக்கல் முடித்த பெண்களுக்கு, ஆண்களை விட, அதிக அளவில் வேலை காத்துக் கிடக்கிறது  என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.

புதுச்சேரியில் நடந்த, "தினமலர்" வழிகாட்டி நிகழ்ச்சியில், எந்த கோர்சில் சேர்ந்தால், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும், நல்ல எதிர்காலமும் கிடைக்கும் என்பது குறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:
"இஇஇ" கோர்ஸ் படித்துக்கொண்டே, "கேட்" தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால், பொதுத் துறை கம்பெனிகளில் வேலை கிடைக்கும். சிலர், சிவில் இன்ஜினியரிங் படித்தால், வெயிலில் நிற்க வேண்டும் என, ஒதுக்கி விடுவர். சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு, அதிக வேலை வாய்ப்புள்ளது. இந்த கோர்ஸ் முடித்த உடன், பி.ஜி., படித்தால், கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும். 

ஐ.டி., துறையில், போதுமான வளர்ச்சி, எப்போதும் இருந்து கொண்டே இருப்பதால், ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி.,யையும் வேறுபடுத்தி, பார்க்கின்றனர். இரண்டுக்கும், பெரிய வித்தியாசம் இல்லை. ஐ.டி., துறை, திறமையானவர்களுக்கு, எப்போதும் வாய்ப்பு தருகிறது. ஐ.டி., துறையில் மட்டும், ஆண்டுக்கு, 2.1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. 

பி.இ., மெக்கானிக்கல் முடித்த பெண்களுக்கு, ஆண்களை விட, அதிக அளவில் வேலை காத்துக் கிடக்கிறது. விகிதாச்சார அடிப்படையில், பெண்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதால், பி.இ., மெக்கானிக்கல் படித்த பெண்களுக்கு, வேலை காத்திருக்கிறது. தனியார் கம்பெனிகள், பி.இ., மெக்கானிக்கல் படிப்பில் சேரும் பெண்களுக்கு, "ஸ்காலர்ஷிப்" தருகின்றன. 

ஆரம்பத்தில், வேலை வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், பின், அதிக அளவில் சம்பளம் கிடைக்கும் வேலைகள் கிடைக்கும். ஆராய்ச்சி மேற்கொள்ள, விரும்பும் மாணவர்களுக்கு, "பயோடெக் கோர்ஸ்&' ஏற்றது. பயோடெக் மட்டும் படித்தால் போதாது. எம்.டெக்., படிக்க வேண்டும். ஆராய்ச்சி மேற்படிப்புகளை, அமெரிக்கா உள்ளிட்ட, வெளிநாடுகளில் படித்தால், நல்ல எதிர்காலம் உண்டு.

ஏரோநாட்டிக்கல் இன்ஜியரிங் படிப்பிற்கு, மற்ற கோர்சுகளை விட வேலைவாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஏர்கிராப்ட் டெக்னாலஜி படிக்க அதிக செலவாகும். துபாயில், இதற்கான கோர்ஸ் உள்ளது. பி.இ., ஆர்க்கிடெக் கோர்சுக்கு, நல்ல எதிர்காலம் உள்ளது. பெண்கள் இந்த கோர்சை தேர்வு செய்து படித்தால், வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது.

எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, "கட் ஆப்" மார்க் ஏறிக்கொண்டே வருகிறது. இந்த ஆண்டு, டாக்டர் படிப்பில் சேர்வதற்கு, 197.5 மேல் இருந்தால் தான், "சீட்&' கிடைக்கும். இவ்வாறு ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்.

Thanks dinamalar

No comments: