Blogger Widgets

Total Page visits

Sunday, November 16, 2014

நோக்கியா ஆலை சென்னையில் மூடல்: நம் மக்களும் சமூகமும்.

உலகின் மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தி ஆலையாக, சென்னை அருகே, ஸ்ரீபெரும்புதுாரில், 2006ல் நோக்கியா ஆலை துவங்கப்பட்டது. மாதத்துக்கு, 1.5 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலை, 7,500 பேருக்கு நிரந்தர வேலை அளித்தது.



18 வயது முதல் 35 வயதுக்கு உட்டபட்டவர்கள் வேலை பெற்றனர்.குறிப்பாக, 60 சதவீதத்துக்கும் அதிகமான இளம்பெண்கள், நோக்கியா நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், ‘இந்திய வருமான வரித்துறைக்கு, சென்னை நோக்கியா நிறுவனம், 21 ஆயிரம் கோடி ரூபாய், வரி பாக்கி வைத்துள்ளது. தமிழக வணிக வரித்துறைக்கு, 2,400 கோடி ரூபாய், வரி செலுத்த வேண்டும் என, வணிக வரித்துறை, நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

நோக்கியா நிறுவனம், மொபைல் போன் உற்பத்தியை படிப்படியாகக் குறைத்தது. இதைத் தொடர்ந்து, நிரந்தர ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு திட்டத்தை, கடந்த மே மாதம் அறிவித்தது.இதை எதிர்த்து, நோக்கியா தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் பலன் அளிக்கவில்லை. 6,000 பேர் விருப்ப ஓய்வில் விடைபெற்றனர். இறுதியாக, 900 பேர் மட்டுமே, சென்னை நோக்கியா ஆலையில் பணிபுரிந்து வந்தனர்.

நோக்கிய ஆலையை மூடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சியினரும், திமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தினர். நோக்கியா ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாக வேலையிழந்துள்ளனர்.

மேலே உள்ள தகவல்கள் பல செய்தி நாளிதழ்களில் இருந்து தேர்ந்து எடுத்து இங்கு தரப்பட்டு உள்ளது.

சமீபத்தில் எனது நண்பரை பார்க்க சென்று இருந்தேன், புதிதாக நோக்கியா தொலைபேசி வாங்கி இருப்பதாக கூறி பெருமை பட்டு கொண்டான். அவனின் அந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ள என்னால் இயலவில்லை. என் மனம் இடம்தரவில்லை.  
நமது நாட்டில் அவர்களின் கடையை விரித்து, வியாபாரம் செய்ய நாம் இடம் அளித்தோம், வரி சலுகை செய்து தந்தோம், மின்சாரம் இன்றி மக்கள் தவித்த போதும் அவர்களுக்கு தடை இல்ல மின்சாரம் வழங்கினோம்.  

இறுதியில் வரி சரியாக கட்டாமல்,அரசாங்கத்தில் பிடியில் சிக்கி தன் நிறுவனத்தின் கிளையை மூடிவிட்டு சென்று விட்டது, இப்படிபட்ட ஒரு நிறுவனத்தின் பொருளை வாங்கியதில் நமக்கு அப்படி என்ன ஒரு பெருமையோ? அவர்கள் நம்மை ஏமாற்றி, அந்த பணத்தில் தயாரித்த பொருளை வாங்குவதில் நமக்கு தன் எவ்வளவு பெருமை.

எதற்கு எதிராக அரசியல்வாதிகள் பெயரளவுக்கு எதிர்ப்பு காட்டினார்களே தவிர, உறுதியான எதிர்போ, ஆக்கபுர்வமான செயலோ செய்யவில்லை என்று கூறும் முன்பு நாம் என்ன செய்தோம் என்று யோசித்தால் ஒன்றும் இல்லை, நாம் ஏன் அவர்களின் தயாரிப்பை வாங்கவேண்டும்? அவர்களின் தயாரிப்பை ஏன் நாம் புறக்கணிக்க கூடாது? ஏன் சந்தையில் வேறு நல்ல தயாரிப்பு இல்லையா? இந்தியாவில் அவர்களின் சந்தை சரிகிறது என்று தெரிந்தால் அவர்களின் தவறை திருத்திக்கொள்ள யோசிக்க மாட்டார்களா? அவர்களுக்கு இழப்பு ஏதும் இன்றிஎது தொடர்ந்தால்,  இன்று இந்தியா, நாளை வேறு நாடு இன்று அவர்கள் தொடர்ந்து எப்படி செய்ய வாய்ப்பு நாமாக ஏற்படுத்தி தருவது போல ஆகாதா?

நாம் அப்பா, அண்ணன், அக்கா, உறவுக்கு வேலை இல்லை என்று சொல்லி அனுப்பினால் மட்டும் தன் நமக்கு கோவம் வரும் போல, அடுத்தவனுக்கு என்றால் நமக்கு ஏதும் கவலை இல்லை என்ற சிந்தனை எப்போதுதான் மாறுமோ?

மக்கள் மனதில் மற்றம் ஏற்படாமல், நாடும், நம் அரசியலும், அரசியல்வாதிகளும் மாறவேண்டும்,மாற்றம் வர வேண்டும் என்று யோசிப்பது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.

நம்மால் சாலையில் இறங்கி போராட முடியாது, ஆனால் இது போன்ற சமுதாய அவலங்களை செய்வோரின் செயலை ஆதரித்து மேலும் மேலும் அவர்களை ஊக்கபடுத்தாமல் இருந்தால் பல நன்மை ஏற்படுமே? சிந்திப்போம், நல்லதை செய்வோம்.       

1 comment:

Anonymous said...

super, nalla sonnenga, nan nokia use pannala, sony than use panren.