சீனாவை சேர்ந்த கணினி தயாரிக்கும் முன்னனி நிறுவனமான லெனோவா ஜப்பானை சேர்ந்த முன்னனி மொபைல் தயாரிப்பாளர்களான மோட்டரோலா நிறுவனத்தை கூகுளிடம் இருந்து வாங்கியுள்ளது.இதனால் மோட்டரோலா நிறுவனம் உலகின் மொபைல்போன் தயாரிபாளர்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
ஏற்கெனவே மூன்றாவது இடத்தில் இருந்த ஷியோமி செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை மோட்டரோலா பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.தற்போது ஷியோமி சர்வதேச அளவில் 4வது இடத்தில் உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லெனோவாவின் சிஇஓவான யாங் யாங்குயிங் '' மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியானது தான். அதே சமயம் முதல் இரண்டு இடங்களில் உள்ள நிறுவனங்களை முந்துவது தான் லட்சியம்.இதற்காக தயாரிப்பில் புதுமை, வாடிக்கையாளரின் விருப்பம் தேவை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
2.9 பில்லியன் டாலருக்கு மோட்டரோலாவை லெனோவா வாங்கியுள்ளது என்றும், ரிக் ஆஸ்டர்லோ மோட்டரோலாவின் தலைவராகவும், சிகாகோவையே மீண்டும் தலைமையிடமாக கொண்டு மோட்டரோலா செயல்படும் என்றும் லெனோவா கூறியுள்ளது.ஆண்டிற்கு 100 மில்லியன் செல்போனை தயாரிக்கும் நிறுவனத்தை கூகுள் சென்ற 2012ம் ஆண்டு வாங்கியயிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment