Blogger Widgets

Total Page visits

Monday, May 6, 2013

எதிர் நீச்சல் - விமர்சனம்

சிவகார்த்திகேயனுக்கு ஒரே எதிரி, அவருடைய பெயர். ஒரே நண்பன் தையற் கடை வைத்திருக்கும் சதீஷ். குஞ்சிதபாதம் என்ற பெயரை எல்லோரும் சுருக்கி அழைப்பதுதான் அவருக்கு இருக்கும் பெரிய பிரச்னை. அதனால் பெயரை ஹரீஷ் என்று மாற்றிக் கொள்கிறார். பிறகு ப்ரியா ஆனந்த் காதலியாக கிடைக்கிறார். வேலை கிடைக்கிறது. வாழ்க்கை சந்தோஷமாகிறது. ஆனால் பெயரை மாற்றி தன்னை ஏமாற்றியது ப்ரியாவுக்குத் தெரியவர காதலுக்குப் பிரச்னை வருகிறது.

பெயர் ஒரு பிரச்னை அல்ல, சாதனைதான் ஒருவனுக்கான அடையாளம் என்பதை நிரூபிக்க தன்னிடம் இருக்கும் விளையாட்டு திறமையை வெளியில் எடுக்கிறார். அதற்கு கோச்சாக வருகிறார் நந்திதா. ஒரு காலத்தில் சாம்பியனாக இருந்த நந்திதா பெண் அல்ல, ஆண் என்று பரிசோதனை முடிவு சொல்ல வாழ்க்கையை இழந்து நிற்பவர். அவரது பயற்சியால் சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? நந்திதாவின் களங்கம் நீங்கியதா? ப்ரியா ஆனந்த் காதல் நிறைவேறியதா? என்பது மீதிக் கதை.

அசட்டுத்தனமான, நம்பிக்கையற்ற இளைஞன் கேரக்டர் என்றால் சிவகார்த்திகேயனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. நோகாமல் நடித்து ஊதிவிட்டுப் போகிறார். ஒரு பெயரை வைத்துக் கொண்டு முன்பகுதி முழுவதும் சிரிக்க வைத்தும், ப்ரியா ஆனந்தை வைத்து ரொமான்ஸ் பண்ணியும் கலங்கடிக்கிறார். பின்பகுதியில் வரும் அத்லெடிக் பயிற்சியில் நிஜமாகவே சிவா உழைத்திருப்பது தெரிகிறது. ப்ரியா ஆனந்த் ஸ்கூல் டீச்சர்.

குழந்தைகள் மீது பாசம் உள்ளவர் என்கிற வழக்கமான ஹீரோயின். ஆனாலும் எல்.ஐ.சி ஏஜென்ட் என்கிற கூடுதல் வேலை செய்தும் ‘நீ வள்ளிக்காகவாவது ஜெயிக்கணும்’ என்று நம்பிக்கை ஊட்டுவதும் போனஸ். நந்திதாவின் தோற்றத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக ஒப்புக்கொள்ள மறுத்தாலும் தனது மெல்லிய சோக நடிப்பால் சமாளிக்கிறார். அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவு சிறப்பு. படம் முழுக்க வரும் டைமிங் வசனங்கள் படத்துக்கு பிளஸ். அதிலும் குறிப்பாக நேமாலாஜி ஸ்பெஷலிஸ்ட் மனோபாலா அலுவலகத்தில் நடப்பது, நான் ஸ்டாப் காமெடி.

பெயர் குழப்பம் திரும்பும் அந்த கல்யாண வீட்டு கலாட்டா, மெகா நாடகம். சிவாவுக்கும், வள்ளிக்கும் லேசான காதல் என்று சொல்லாமல் கடைசிவரை கண்ணியம் காத்திருப்பது அருமை. ஆனால் அப்படி எதுவும் இல்லாததால் நந்திதாவின் கதை தனித்து தெரிகிறது. சிவகார்த்திகேயனின் வெற்றி நந்திதாவின் அவமானங்களைத் துடைத்து அவரை மறுபடியும் புகழின் உச்சிக்கு கொண்டு செல்வதை கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தால் நெகிழ்வாகவும், நிறைவாகவும் இருந்திருக்கும்.

தினகரன் விமர்சனக்குழு.

No comments: