Blogger Widgets

Total Page visits

Friday, May 24, 2013

பொறியியல் படிப்பிற்கான ஆர்வத்தை கண்டறிய...

அடிப்படையில் ஒருவருக்கு பொறியியல் படிப்பில் ஆர்வம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பின்வரும் கேள்விகளைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

* கணிதமும் அறிவியலும் பிடித்த பாடங்களா?

* நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலானவை எப்படி இயங்குகின்றன என்பதை அறிவதில் ஆர்வம் உடையவரா?

* எதையும் புதுமையாக செய்வதில் விருப்பம் உள்ளவரா?

* எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எளிதாக கையாளும் திறமை இருக்கிறதா?

* செய்தித்தாள்களில் வரும் புதிர்களை தீர்ப்பதில் ஆர்வம் உள்ளதா?

* எதையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுகிறீர்களா?

* சுயமாக எதையும் செய்வதில் அதிகம் ஆர்வம் உள்ளதா?

* பகுத்தாய்ந்து எதையும் கவனிப்பதிலும், யோசிப்பதிலும் ஆர்வம் உண்டா?

இந்த கேள்விகளுக்கு ஆமாம், என பதிலளிப்பவர்களுக்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் அதிக ஆர்வம் உள்ளது எனக் கொள்ளலாம். மாறாக இல்லை என பதிலளிப்பவர்கள் கலை, இலக்கியம், சமூகவியல் போன்ற பிற துறைகளில் கவனம் செலுத்தலாம்.

இந்த தகவல் தினமலர் வலை பக்கத்தில் இருந்து பக்கிரப்படுகிறது. 

No comments: