நம் தமிழ் நாட்டில் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்து இருப்பது பற்றி எல்லோருக்கும் தெரியும், திரை படம் எப்போது திரைக்கு வரும் என்பது தான் நம்மில் பலருக்கும் இப்போது இருக்கும் கவலை, ஆவல், ஏக்கம் ஆனால் இந்த திரை படம் நமக்கு ஒரு பாடத்தை சொல்லி இருப்பதாக கற்று தந்து இருபதாக நான் நினைக்கிறேன்.
நாம் ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். முஸ்லிம் நண்பர்கள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த படத்திற்கு தடை விதித்ததாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள், அதற்கு அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சுழல் இருந்ததாக சொல்லி இருந்தார் . படம் 526 தியேட்டர்களில் திரை இட இருந்ததாகவும் , அதற்கு சமமான போலீஸ் காவலாளி நம்மிடம் இல்லை என்று கூறி உள்ளார் மற்றும் பல காரணம் சொல்லி இருந்தார். நான் அவர் கூறியதை தவறாக சொல்லவில்லை.
ஒரு சிறு தகவல்:
டாஸ்மாக் எனும் நிறுவனம் 1983 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அமரர் M .G ராமசந்திரன் அவர்களால் தொடங்கபட்டது. பல சில மாற்றம் கண்டு இன்று பெரிய ஆலமரம் போல வளர்ந்து நிற்கிறது. இதன் கடந்த ஆண்டு 2011-2012 இல் வருட வருமானம் 18,081.16 கோடி ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு வருமானமான 14,965.42 கோடியை தாண்டி இருக்கிறது .
Fiscal Year | Revenue in Crores | % Change |
---|---|---|
2002 - 03 |
2,828.09
|
|
2003 - 04 |
3,639
|
|
2004 - 05 |
4,872
|
|
2005 - 06 |
6,086.95
|
|
2006 - 07 |
7,300
|
|
2007 - 08 |
8,822
|
|
2008 - 09 |
10,601.5
|
|
2009 - 10 |
12,491
|
|
2010 - 11 |
14,965.42
|
|
2011 - 12 |
18,081.16
|
தகவலுக்கு நன்றி : விக்கிபீடியா
ஒரு முன்று மணி நேரம் ஓடும் திரைப்படத்திற்கு , அந்த படம் திரை இடப்பட்டால் ஒரு சமுக மக்களிடம் ஒரு அசாதாரண சுழல் வரும் என்று கருதி அதை அரசால் தடை செய்யப் பட்டு இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்தும் இந்த மதுவின் தீங்கு பற்றி அனைவருக்கும் தெரிந்து இருந்தும் அதற்கு எதிராக நாம் , நம் மக்கள் , நம் தலைவர்கள் இன்னும் ஏனைய மரியாதைக்கு உரிய மேன்மை பொருந்திய மாமனிதர்கள் ஏன் முன் வர கூடாது? மது இல்லா தமிழ் நாட்டை காண ஆவலில் இருக்கும் ஒரு தமிழனின் கனவு நினைவாகும் நாள் என்று ?
மக்கள் சக்தி மிகப்பெரிய சக்தி என்னும் வாக்கியத்தை விஸ்வரூபம் திரை படம் நம் மக்களுக்கு உணர்த்தி இருக்க வேண்டும்!
இது நம் அரசு, நமக்கான அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் அரசு. நாம் கேட்பதை நமக்கு தர விரும்பும் அரசு, ஆனால் நம்மில் சிலர் மட்டுமே மது இல்லா தமிழ் நாடு கேட்கிறோம் , பலர் மதுவை கேட்கிறார்கள். மாற்றம் முதலில் நம்மில் இருந்து வர வேண்டும் .
விஸ்வரூபம் திரைப்பட போரட்டங்கள் நம் மனதில் இந்த மாற்றத்தை உண்டாக்கட்டும்.
இது நம் அரசு, நமக்கான அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் அரசு. நாம் கேட்பதை நமக்கு தர விரும்பும் அரசு, ஆனால் நம்மில் சிலர் மட்டுமே மது இல்லா தமிழ் நாடு கேட்கிறோம் , பலர் மதுவை கேட்கிறார்கள். மாற்றம் முதலில் நம்மில் இருந்து வர வேண்டும் .
விஸ்வரூபம் திரைப்பட போரட்டங்கள் நம் மனதில் இந்த மாற்றத்தை உண்டாக்கட்டும்.
image taken from google
No comments:
Post a Comment