Blogger Widgets

Total Page visits

Monday, July 1, 2013

இந்தியாவில் இன்ஜினியரிங் கல்வியின் இன்றைய நிலை


இந்திய தொழில்நுட்ப கல்வி தான் உலக அளவில் அனைவரது கவனத் தையும் இழுத்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் பொறியி யல் கல்வியில் இந்தியா முன்னிலை வகித்தாலும் அதில் உள்ள சவால்கள் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவும், முட்டுக்கட்டையாகவும் உள்ளது. ஆண்டு தோறும் (பிற நாடுகளை விட) அதிக அளவில் இன்ஜினியர்களை உருவாக் கினாலும், அவர்களை தற்போதைய தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு திறமையானவர்களாக வெளிக்கொண்டுவரும் மிகப்பெரிய கடமை நமக்கு உள்ளது. இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், நாடு முழுவதும் பரவலாக இல்லாதது பெரும் குறையாக உள்ளது. நாட்டில் 7 தொழில் நுட்ப கல்வி மண்டலங்கள் உள்ள நிலையில் 3 மண்டலங்களில் இருந்து மட்டும் 63.6 சதவீத இன்ஜினியர்கள் உருவாகின்றனர். ஆண்டு தோறும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டும் 60 சதவீதம் இன்ஜி னியரிங் பட்டதாரிகள் உருவாகின்றனர்.

பின்தங்கிய மாநிலங்களை சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களுக்கு சென்று கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும்போது அந்த மாநிலத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, காலநிலை போன்றவை வேறுபடுவதால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாறி கல்வி பயில்வதில் சிர மம் உள்ளது. எனவே தொழில்நுட்ப கல்வி நிறுவனங் களை பரவலாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. அதிக அளவில் இன்ஜினியர்களை உருவாக்கினா லும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் திறமையில் பின்தங்கி உள்ளோம். திடீர் பிரச்சினைகளின் போது சரியான முடிவு எடுத்து செயல்படுத்துவதில் நம்மைவிட வளர்ச்சி அடைந்த நாடுகளில் படித்த இன்ஜினியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இந்த இடைவெளியை போக்க ஐஐடி பாட திட்டமுறைகளே மிகச்சரியானதாக இருக்கும் என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஐஐடி பாட திட்ட முறையையே, இன்ஜி னியரிங் படிப்பிலும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தி, கணினி தொழில் நுட்பம், திட்டமிட்ட குறிக்கோளுக்காக சக பணியாளர்களுடன் இணைந்து பணி யாற்றுதல், கருத்துக்களை பரிமாறுதல், ஒரு பிரச்னை தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தல் போன்ற திறன்களை வளர்க்க வேண்டும்.

இந்தியாவில் இளநிலை இன்ஜினி யரிங் படிப்பு முடித் தவர்களில் 2 சதவீதம் பேர் தான் எம்.இ., எம்எஸ் போன்ற முது நிலை படிப்புகளை தொடர்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் 83 சதவீதம் பேரும், இங்கிலாந்து 60, ஆஸ்தி ரேலியாவில் 72 சதவீதம் பேரும் முதுநிலை படிப்பை தொடர் கின் றனர் என்று புள்ளி விபரங்கள் கூறு கின்றன. இதில் நாம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளோம். 11வது ஐந்தாண்டு திட்டத்தில் இதனை 15 சதவீதமாகவும், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் 22 சதவீதமாகவும் உயர்த்த இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட் டுள்ளன. புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், மாணவர்களுக்கு சலுகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முது நிலை படிப்பை முடித்தவர்களில் மிகவும் சொற்ப அளவினர் தான், ஆராய்ச்சி பட்டம் பெறுகின்றனர். வள ர்ந்த நாடுகளை விட இதிலும் நாம் மிகவும் பின்தங் கிய நிலையிலேயே உள்ளோம்.

இந்தியாவில் இன்ஜினியரிங் படிப்பு முடிப் பவர்களில் பலர் ‘சாப்ட்ஸ்கில்’ திறமை இல்லாமல் உள்ளனர் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு படி ஆண்டு தோறும் 5 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். இதில் 15.45 சதவீதம் பேர் மட்டுமே தொழில் நிறுவனங் களில் பணிபுரியும் முழு திறமை பெற்றுள்ளனர் என தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு கூறுகிறது. 2012ம் ஆண்டு  கணக்கெடுப்பில் இன்ஜினியரிங் பட்டதாரி மாணவர்கள் 83 சதவீதம் பேர் முழு தகுதி பெறாமல் உள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. 2012ம் ஆண்டு இந்திய தொழிலாளர் அறிக்கையில் வேலைஇல்லா திண் டாட்டத் தைவிட வேலைக்கு தகுதி யற்றவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத் துள்ளது. ஏட்டுச் சுரை க்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழிக்கு ஏற்ற வாறு தொழிற் கல்வி மட்டுமின்றி, தொழில் சார்ந்த திறமை களை யும் வளர்த்து கொள் ளும் கல்வியை இளைய சமுதாயத் திற்கு வழ ங்கினால் தான் நாம் மற்ற நாடுகளுடன் போட்டி போட முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

No comments: