93 என்ஜினீயரிங் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை
இதுவரை யாரும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு 22 கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்ப
பிரிவு மூடப்பட்டு விட்டது என்பதுடன் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால்
இந்த வருடம் பல கல்லூரிகள் இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது
தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங்
கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி மாணவர்
சேர்க்கையை நடத்தி வருகிறது. இதுவரை 90 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. 1
லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இவை அனைத்தும் சுயநிதி
கல்லூரிகளில்தான் ஆகும்.
கிட்டத்தட்ட 57 கல்லூரிகளில் மெக்கானிக்கல் பிரிவில் மாணவர் சேர்க்கையால்
நிரம்பி உள்ளது. 51 கல்லூரிகளில் சிவில் என்ஜினீயரிங் நிரம்பி உள்ளது. 49
கல்லூரிகளில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பிரிவும், 22 கல்லூரிகளில்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவும் நிரம்பி உள்ளன. 7 கல்லூரிகளில்
எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பிரிவும், 6 கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்ப
பிரிவும் நிரம்பி உள்ளன.
அதே சமயம் 93 கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை யாரும்
எடுக்கவில்லை. 86 கல்லூரிகளில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பிரிவில் யாரும்
சேரவில்லை. 69 கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் யாரும்
சேரவில்லை.65 கல்லூரிகளில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பிரிவை யாரும்
எடுக்கவில்லை. 40 கல்லூரிகளில் சிவில் என்ஜினீயரிங் பிரிவை யாரும் தேர்வு
செய்யவில்லை. 36 கல்லூரிகளில் மெக்கானிக்கல் பிரிவில் யாரும் சேரவில்லை.
இந்த வருடம் மட்டும் 22 கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்ப பிரிவு
மூடப்பட்டுள்ளது.இந்த புள்ளிவிவரத்தை ஈரோடு பேராசிரியர் மூர்த்தி
செல்வக்குமரன் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இந்த வருடம் பல கல்லூரிகளில்
மாணவர் சேர்க்கை நடைபெறாமல் மூடும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
நன்றி ஆந்தை ரிப்போர்ட்டர்
No comments:
Post a Comment