ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகள் புதிது புதிதாக
தொடங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் 552 இன்ஜி., கல்லூரிகள்
மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்தாண்டு
புதிதாக மேலும் 11 கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.
இக்கல்லூரிகளும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்
கட்டுப்பாடுகள், இன்ஜினியரிங் படிப்பிற்கு தேவைப்படாது எனலாம். அதிகமான
கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளதால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றாலே போதும் ஏதோ
ஒரு இன்ஜி., கல்லூரியில் சீட் கிடைத்து விடும். எனினும், பிளஸ் 2வில் அதிக
கட்ஆப் மதிப்பெண் பெறுவதன்மூலம் டாப்10 இன்ஜினியரிங் கல்லூரிகளில் சீட் பெற
முடியும்.
இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங்
திருவிழா 45 நாட்கள் நடக்கிறது. பி.இ., பி.டெக்., படிக்க விரும்பும் மாணவ,
மாணவிகள் பலர், நல்ல கல்லூரியை தேர்வு செய்வதில் கோட்டை விட்டுவிடுவதாக
கல்வியாளர்கள் கூறுகின்றனர். படித்து முடித்தவுடன் ஒரு கையில்
பட்டத்தையும், மற்றொரு கையில் முன்னணி நிறுவனத்தின் Ôஅப்பாயின்ட்மென்ட்
ஆர்டரைÕயும் எந்த கல்லூரி தருகிறதோ, அதுவே நல்ல கல்லூரிக்கான அடையாளம்.
தரமான இன்ஜி., கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி? என்ற குழப்பம்
கிட்டத்தட்ட எல்லா மாணவ, மாணவி களுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கிறது.
ஒரு நல்ல இன்ஜினியரிங் கல்லூரியை கீழ்க்கண்ட முக்கிய அம்சங்கள் மூலம்
தேர்வு செய்யலாம் என்கின்றனர். கல்வியாளர்கள் கருத்துக்கள் இதோ
உங்களுக்காக:
*கலந்தாய்வில் அரசு, நிதியுதவி பெறும் மற்றும்
சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் கலந்து கொள்கின்றன. இதில், அரசு கல்லூரிகளை
தவிர மற்ற கல்லூரியில் சேர விரும்பினால், சம்பந்தப்பட்ட கல்லூரியின்
நிர்வாக செயல்பாடு எப்படிப்பட்டது? என்பதை முதலில் ஆராய வேண்டும்.
அவர்களிடம் சேவை நோக்கம் இருக்கிறதா? பணம் குவிப்பதில் குறியாக
இருக்கிறார்களா? என்பதை விசாரித்து தெரிந்து கொள்வது அவசியம்.
*தான்
சேர விரும்பும் பாடப்பிரிவுக்கு தரமான, ஆசிரியர்கள் இருக்கிறார்களா?
அவர்களின் அனுபவம் என்ன?, அடிக்கடி குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு
ஆசிரியர்கள் மாற்றப்படுகிறார்களா? என்பதை கவனிக்க வேண்டும்.
*சம்பந்தப்பட்ட
பாடப்பிரிவுக்கு ஏற்ற நவீன ஆய்வக வசதிகள் இருக்க வேண்டும். இப்போது அண்ணா
பல்கலை, ஏஐசிடிஇ விதிகளில் சொல்லப்படாத அளவுக்கு சில கல்லூரிகளில் ஆய்வக
வசதிகள் உள்ளன.
*எந்தெந்த தொழிற்சாலைகள், நிறுவனங்களுடன்
கல்லூரிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) இருக்கிறது? இன்டஸ்ட்ரியல்
விசிட் வசதி ஆகியவற்றையும் ஆராய வேண்டும். கவுன்சிலிங்கில் சேரும்
மாணவர்களிடம் அரசு கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?
தேர்ச்சி விகிதம் என்ன?, பல்கலை அளவில் எத்தனை பேர் ரேங்க் பெற்றுள்ளனர்?
என்ற விவரங்களையும் திரட்ட வேண்டும்.
*கல்லூரியில் கேம்பஸ்
இன்டர்வியூ வசதி, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளனர்?,
என்ன சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பதை கல்லூரியின் முன்னாள்
மற்றும் தற்போதைய மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
*கல்லூரியின்
அனுபவத்தை வைத்து தேர்வு செய்வது அபத்தமானது. ஒரு காலத்தில் ÔஓஹோÕவென்று
இருந்த கல்லூரியின் தற்போதைய செயல்பாடு மோசமாக இருக்கும். சில கல்லூரிக்கு
வெறும் 4 ஆண்டு அனுபவம் இருக்கும். ஆனால் உள்கட்டமைப்பு வசதிகள்
உலகத்தரத்தில் இருக்கும்.
*முக்கியமாக, ஆராய்ச்சிக்கு
முக்கியத்துவம் அளிக்கப்படும் கல்லூரியா? என்பதை ஆராய வேண்டும்.
ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்லூரிகளுக்கு தான்
எதிர்காலத்தில் மவுசு அதிகம்.
No comments:
Post a Comment