இன்றைய இளைஞர்களுக்கு இன்ஜினியரிங் படிப்பின் மீதான மோகம் அதிகரித்து
வருகிறது. ஒரு வகுப்பறையில் இன்ஜினியரிங் படிக்க 80 சதவீதம் மாணவர்கள்
ஆர்வம் தெரிவிப்பதுடன் அதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர்.
இவ்வளவு பேர் இன்ஜினியரிங் படித்தால் அடுத்த சில ஆண்டுகளில் வேலை இல்லாத்
திண் டாட்டம் வந்து விடும் என்று வதந்தி பரப்புபவர்களும் தனக்கான பணியை
சிறப்பாக செய்ய சில மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்க விருப்பம் இருந்தும்
மதில்மேல் பூனையாக தவிக்கின்றனர். பல் வேறு துறைகளிலும் இன்ஜினியரிங்
படிக்கும் மாணவர்களுக்கு உலக ளவில் வாய்ப்புகள் குவிந்துள்ளது என்பது தான்
உண்மை நிலை. பொறியியல் பாடப்பிரிவில் என்ன பாடம் படித்தால் என்ன வேலை
கிடைக்கும் என்று நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர். பி.இ. - சிவில்
இன்ஜினியரிங்: இவர்கள் எம்.இ., எம்.இ. மாஸ்டர் ஆப் டெக்னாலஜி மற்றும்
எம்.டெக் பிரிவுகளில் சேர்ந்து மேல்படிப்பைத் தொடரலாம். கட்டுமானம்
சார்ந்து அரசு, தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்பு மற்றும் சுயமாக தொழில்
துவங்கவும் வாய்ப்புள்ளது.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்:
இப்பாடப்பிரிவில் பெண்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்புகள் உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் மெக்கானி க்கல் இன்ஜினியரிங் பாடப்
பிரிவு உள்ளது. தொழிற்சாலை இயந்திரங்கள், கொதிகலன் கள் மற்றும் மின்
உற்பத்தி சாதனங்கள், கணினி பற்றிய கல்வியும் கற்றுத்தரப்படு கிறது.
இப்படிப்பை முடிப்பவர்களுக்கு மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை
வாய்ப்புகள் காத்திருக்கிறது. மின்னியல் மற்றும் மின்னணுவியல்: மின்சாரம்
சம்பந்தப்பட்ட இயந்திரங்கள், மின் உபகரணங்கள் மற்றும் மின் உற்பத்தி யும்
கற்றுத்தரப்படுகிறது. இப்படிப்பை முடிப்பவர்கள் ராணுவத் தளவாட நிறுவனம்,
சிமென்ட் ஆலைகள், தேசிய வெப்ப மின் ஆற்றல் நிறுவனம், பாரத் கனரக மின் சாதன
நிறுவனம் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. பி.டெக்.
கெமிக்கல் இன்ஜினியரிங்: இப்படிப்பை முடிப்பவர்கள் பெட்ரோலியம், உரம்,
சர்க்கரை, மருந்துகள், சாயம், சிமென்ட் தொழிற்சாலைகளில், கண்ணாடி தயாரிப்பு
நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு பெறலாம்.
பி.இ. ஜியோ
இன்பர்மேடிக்ஸ்: இந்திய அளவில் சில கல்வி நிறுவனங்களில் மட்டுமே இப்படிப்பு
வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வான் வெளித்துறை, நேஷனல் ரிமோட் சென்சிங்
ஏஜென்சி, சர்வே ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
புரடக்ஷன் இன்ஜினியரிங்: உற்பத்திப் பொறியியல் துறை இயந்திரவியல் பொறியி
யலுக்கு இணையானது. தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களில் உற்பத்தி முறை
கள், உற்பத்திக் கான சாதனங்கள், மேலாண்மை நெறிகள் கற்றுத்தரப்படுகிறது.
உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங் களில்
இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன. மைனிங் இன்ஜினியரிங்:
இப்படிப்பை முடிப்பவர்கள் அரசு மற்றும் தனியார் துறை சுரங்க நிறுவனங்களில்
வேலை வாய்ப்பு பெறலாம். சுரங்கத்துறையில் பெண்களுக்கு சட்டப்படி வேலை
வாய்ப்பு அளிக்கப்படுவ தில்லை. இதனால் இப்படிப்பில் பெண்கள் சேர்த்துக்
கொள்ளப்படுவதில்லை. பி.டெக். லெதர் டெக்னாலஜி: தோல் வேதிப் பொருட்கள்
தயாரிக்கும் நிறுவனங் கள், தோல் பதனிடும் தொழிற்கூடங்கள், ஆராய்ச்சி
நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் பெறலாம்.
பி.டெக். டெக்ஸ்டைல்
டெக்னாலஜி: தேசிய ஜவுளி நிறுவனம் தனியார் மற்றும் அரசு நெசவுத்
தொழிற்சாலைகளிலும் இவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு.
பி.டெக்.ஏரோநாட்டிகல்
இன்ஜினியரிங்: இந் திய விமானப்படை, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி
மையம், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல், ஐ.எஸ்.ஆர்.ஒ. விமானத் தொழில்
நிறுவனங்கள், தேசிய ஆய்வகங்கள் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேசன் இன்ஜினியரிங்: தேசிய விமானவியல் கூடம்,
தேசிய மின்னணுவியல் தொழிலகம், பாரத அணுசக்தி ஆராய்ச்சி நிலையம், பாரத
மின்னணு தொழிற்சாலை போன்ற அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் வேலை
வாய்ப்பைப் பெறலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்: உள்நாடு
மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பொறியியல் மற்றும்
தொழில்நுட்பக் கல்லூரிகள் இப்படிப்பை வழங்குகின்றன. விப்ரோ, எச்.சி.எல்.
உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் இவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன.
இன்டஸ்ட்ரியல்
இன்ஜினியரிங்: தொழிற்சாலையில் பணிபுரியத் தேவையான பணியாளர்கள் மற்றும்
இயந்திரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். அரசு மற்றும் தனியார்
நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெறலாம்.
பிரிண்டிங் டெக்னாலஜி:
அச்சகங்கள், பத்திரிக்கை நிறுவனங்கள், விளம்பர நிறுவனங் கள், அச்சு இயந்திர
உற்பத்தி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். ஆர்கிடெக்சர்
இன்ஜினியரிங்: நவீன அறிவியல் கூடம் அமைத்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான
நிலையம் அமைத்தல், தேசிய விமான நிலையம், கலாச்சார நிலையங்கள்,
தொழிற்பயிற்சி மையங்கள், மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை
உருவாக்க கற்றுத்தரப்படுகிறது. பொதுப்பணித்துறை, ரயில்வே வீட்டுவசதி
வாரியம், தபால் தந்தி துறைகள் ஆகியவற்றில் அதிகளவு வேலை வாய்ப்புகள் உள்ளன.
எலக்ட்ரானிக் அண்டு இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங்: மேலாண்மை
நிறுவனங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளில் வேலை
வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பம்: கணினி நிறுவனங்கள் மற்றும்
ஐ.டி.துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.
No comments:
Post a Comment