Blogger Widgets

Total Page visits

Thursday, July 11, 2013

18 நாளில், 20 ஆயிரம் பேர் "ஆப்சென்ட்': பி.இ., சேர்க்கையில் அதிர்ச்சி

பி.இ., பொதுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு முடிந்த, 18 நாட்களில் மட்டும், 20 ஆயிரம் மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆகியிருப்பது, அண்ணா பல்கலையை, அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த மாதம், 21ம் தேதி, பொதுப் பிரிவு கலந்தாய்வு துவங்கியது. 9ம் தேதி வரையிலான, 18 நாட்களில், மொத்தம், 82,447 மாணவர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 62,996 மாணவர்கள், சேர்க்கை உத்தரவுகளை பெற்றுள்ளனர்; 19,224 மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இது, 23.32 சதவீதம்.கலந்தாய்வுக்கு வந்து, 227 மாணவர், எந்தப் பிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுள்ளனர். 18 நாட்களில், அதிகமான மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆகியிருப்பது, அண்ணா பல்கலையை, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வரும், 31ம் தேதியுடன் கலந்தாய்வு முடிகிறது. மீதியுள்ள நாட்களில், மேலும், 20 ஆயிரம் பேர் வரை, "ஆப்சென்ட்' ஆகலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது. ஒவ்வாரு நாளும், சராசரியாக, 20 சதவீத மாணவர்கள், "ஆப்சென்ட்' ஆகின்றனர்.பெற்றோரின் வற்புறுத்தலுக்காக விண்ணப்பித்து விட்டு, பின், மாணவர், தாங்கள் விரும்பிய வேறு படிப்புகளில் சேர்ந்து விடுகின்றனர். மேலும், கடன் வாங்கி, அதிக செலவு செய்து படிக்க விரும்பாத மாணவர்களும், வேறு படிப்புகளுக்கு சென்று விடுகின்றனர். இது போன்ற காரணங்களால், "ஆப்சென்ட்' அதிகரிப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: