Blogger Widgets

Total Page visits

Monday, July 1, 2013

ஐ.டி.யில் இது புதுசு


‘கணினி’ காலத்தின் வேகத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும் மந்திரம். கணினியின் பயன் பாடுகளும் அதற்கு ஏற்ற மாற்றங்களை சந்தித்து வருகிறது. தனியார் சேட்டிலைட்டை தொலைக் காட்சி நிறுவனங்கள் பயன்படுத்துவது போல சர் வரையும் பகிர்ந்தளித்து பயன்படுத்தும் ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ என்பது கணினித் துறையில் இன்று புதுசு. கல்லூரி, தொழில் நிறுவனங்கள், சேவை நிறு வனங்கள் என டேட்டாக் கள் அளவுக்கு அதிகமாகப் பெருகி விட்டது. அதனை பிக் டேட்டா என்கிறோம். ஒரு குறிப்பிட்ட நிறு வனத்தின் பத்தாண்டு புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டால் அதை பிக் டேட்டா என்கி றோம். இதில் டேட்டா மேனேஜ் மென்ட் செய்வது தான் மிகப்பெரிய வேலை. டேட்டா வேர்ஹவுசிங், டேட்டா மைனிங் என இதில் பல்வேறு பயன்பாடுகளும் உள்ளது. 

ஐ.டி. படிக்கும் மாணவர்கள் பல்வேறு துறை கள் சார்ந்து புதிய சாப்ட்வேர்களை உருவாக்க வேண்டும். அதற்கு மெக்கானிக் கல், பேங்கிங், டிராவல்ஸ் என யாருக்கான சாப்ட் வேர் உருவாக்கப்படுகிறதோ அவர்களின் செயல்பாடு கள் குறித்த அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே வெற்றிகரமான சாப்ட்வேரை உருவாக்க முடியும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சாப்ட்வேர் உருவா க்கும் பட்சத்தில் அதன் நடவடிக்கைகளை முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட ஆண்டில், மாதத்தில் அந்த நபரின் வங்கிக் கணக்கு நிலையை தெரிந்து கொள்ள அந்த சாப்ட்வேர் உதவ வேண்டும். அந்த டேட்டாவை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் நெகிழ்வுத் தன்மையும் இதில் அவசியம். 

பல்வேறு நிறுவனங்கள் டேட்டாக்களை பயன்படுத்துவதற்கான சாப்ட்வேர்களை உருவாக்கி வருகின்றன. நிறுவனங்கள் தங்களுக்கு அடுத்த ஆண்டு அல்லது மாதம் தேவை ப்படும் பொருட்கள் குறித்து திட்டமிடவும், அடுத்த ஆண்டுக்கு தேவைப்படும் நிதி நிலையை உருவாக்குதல், குறிப்பிட்ட மாதத்தில் விற்பனை குறைந்ததற்கான காரணம் கண்டறிதல் என பிசினசில் எடுக்கப்படும் பல்வேறு முன் முடிவுகளுக்கும் இந்த டேட்டாக்களே உதவியாக இருக்கின்றன. எனவே டேட்டா மேனேஜ் மென்ட் படிப்பவர்களுக்கு உலக ளவில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது. 

டேட்டாக்களை ஸ்மார்ட்டாக கால விரயம் இன்றி பயன்படுத்த உதவும் சாப்ட்வேர்களுக்கு மட்டுமே மவுசு இருக்கும். புத்திசாலித்தனமாக சாப்ட்வேர் உருவாக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு எப்போதும் வேலை வாய்ப்பு உண்டு.

No comments: